Home Blog Page 5967

வைகை எக்ஸ்பிரஸ் – மிகப் பெரிய புரட்சியை உருவாக்கும் : நடிகர் ஆர்.கே பேச்சு

images cinema events hqdefault - 2026

சென்னை:

மக்கள் பாசறை வழங்கும், நடிகர் ஆர்.கே. நடிப்பில் விரைவில்  வெளியாக உள்ள  ’வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.கே., நடிகை நீது சந்திரா, கோமல் சர்மா, காமெடி டைம் அர்ச்சனா மற்றும் படத்தின் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவுமான v. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் ஆர்.கே பேசுகையில்,

 பத்திரிகையாளர்களிடம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார். நடிகர் ஆர்.கே, அவரது அடுத்த படத்தின் பெயர் ”பைரவா” என்றும்  தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர் ஒருவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என்றும் அத்துடன் இதுவரை நடிகர் ஆர்.கே மலையாள இயக்குனரான ஷாஜி கைலாஷ் அவர்களுடன் மட்டுமே பணியாற்றுகிறார் என்ற பெயர் தமிழ்த் திரையுலகில் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த திரைப்படம் அமையும் ; இப்படம் குழந்தைகளை வெகுவாக கவரும் வகையிலான கதையம்சத்தை கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி, வைகை எக்ஸ்பிரஸ் தமிழ்த் திரையுலகின் வியாபார முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்ய சிந்திக்காமல் தியேட்டருக்கு ஆள் வரவில்லை  என்கிறோம். இது என்ன நியாயம்?

ஏர்செல் ஏர்டெல் என செல்போனுக்கு எல்லா நெட் ஒர்க் சிம் கார்டும் எங்கும் எளிதில் கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்கு கடை விற்கிறார்கள்.  இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஏன் சினிமாவுக்கு இருக்ககூடாது?

பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு  பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் இந்த புதிய திட்டம். சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் இப்போது பைனான்சியர் ஆகிவிட்டார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் 10 பேர் இருப்பது ஒரு லட்சமானால் வியாபார முறை மாறும்.  ஆனால்,  என்னுடைய  ”வைகை எக்ஸ்பிரஸ்”  திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம்  விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார். அதே போல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும்.

அதே சமயத்தில் விநியோகஸ்தர்கள் ஆயிரம் டிக்கெட் வாங்கினால் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தனியாக நூறு டிக்கெட் கமிஷனாக வழங்கப்படும். இது தமிழ் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும். ஒரு திருட்டு விசிடி விற்கிறவன் அவனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரத்துடன் வீட்டிலேயே சிடியைக் கொடுத்து விட்டு, இது தரமாக இருந்தால் மட்டும் பணம் தருமாறு கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும் போது நாம் ஏன் இதை செய்துகாட்ட முடியாது?

இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளிய செல்வதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. அதே போல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல்  நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்.

இதற்காக சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டிவிட்டேன். எனது படத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் வாங்கி வெளியிடவுள்ளேன். இதுவரை பெரிய நடிகர்கர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் தன் படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்க வழிவகை செய்ததில்லை. வீட்டில் அவனுக்கு வெட்டிப்பயல் சினிமா பைத்தியம் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதை செய்தே தீருவேன் என்று நடிகர்  ஆர்.கே. கூறினார். இது உறுதியாக தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை .

நிகழ்ச்சியில் வசன கர்த்தா வி.பிரபாகர், நடிகைகள் நீதுசந்திரா, கோமல்சர்மா, அர்ச்சனா ஆகியோரும் பேசினார்கள்.

‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக   சிரத்தை எடுத்து அமெரிக்கா சென்று சண்டைப் பயிற்சி பெற்று இப்படத்தின் மூன்று முக்கிய சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். மாஸ்டர் கனல் கண்ணன் ”  சண்டைக் காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததை வெகுவாகப் பாராட்டினார் என்றார் நடிகர் ஆர்.கே.

அவரது பேச்சின் வீடியோ பதிவு:

{YouTube}z4JCWYyorYw{/YouTube}

சேற்றில் செயல்பட்டு வரும் காந்தி சந்தை: ?

அடிப்படை வசதிகள் இல்லாமலும், மழைக் காலங்களில் சேற்றிலும் செயல்பட்டு வரும் காந்தி சந்தை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 காய்கறி உற்பத்திக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரத்துக்கு அடுத்த படியாக, மிகப் பெரியது திண்டுக்கல் காந்தி சந்தை. தற்போது 365 கடைகள் இங்கு செயல்பட்டு வந்தாலும் 160 கடைகள் மார்க்கெட்டுக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் காந்தி சந்தை பகுதியில், சிறைச்சாலை, வட்டாட்சியர் அலுவலகம், மேல்நிலைப் பள்ளி, கோட்டை மாரியம்மன் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பூங்கா போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளதால், அதிகமான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சேறும், சகதியுமான இடத்தில் விற்பனை:திண்டுக்கலில் சிறிது நேரம் மழை பெய்தாலும், மார்க்கெட் பகுதி சகதியாக மாறி விடுகிறது. இதனால், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், உள்ளே நுழைய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழனிச் சாலையில் உள்ள லாரி பேட்டைக்கு சந்தையை இடம் மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பல மாதங்களுக்கு பின்னும், இதுவரை இடம் மாற்றம் செய்யப்பட வில்லை. அதே போல், காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

 இதுகுறித்து  வியாபாரிகள் சங்கத் தலைவர் துரை.சம்பத்திடம் கேட்ட போது:

 நாளொன்றுக்கு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் காந்தி சந்தை மூலம், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. லாரி பேட்டையில், 350 கடைகள் அமைக்க இடவசதி இல்லை. மேலும், அந்த இடத்தில் சந்தை அமைந்தால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. எனவே புறநகர் பகுதியில் இடம் வழங்கினால், அங்கு செல்ல தயாராக உள்ளோம் என்றார்.

ஆணையர் நா.மனோகர்: லாரி பேட்டை பகுதியில், வியாபாரிகளுக்கு குறைந்த பட்ச இடம் வழங்க முடியும். அதனைவிடுத்து, ஒவ்வொருவரும் தேவைக்கு ஏற்ற இடம் கேட்பதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. குடிநீர், கழிப்பறை போன்ற கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி தயாராக உள்ளது.

லாரி பேட்டைக்கு மாறினால், சேற்றில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படாது என்பதை வியாபாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 

 

நயன்தாராவுடன் மீண்டும் இணையும் விஜய் !

 தமிழகத்தில் ஒருவரின் குடும்பத்திலும் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளும் எவ்வளவோ இருந்தாலும் அதையெல்லாம் பெரும்பாலான இன்றைய இளம் தலைமுறையினர் கண்டுகொள்வது இல்லை. மாறாக விஜய்யின் அடுத்த 60தாவது படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்விதான் தற்போது அவர்களிடம் காணப்படுகிறது.

அது குறித்தான சில தகவல்கள் வெளியாகியுள்ளது : –

தமிழ் சினிமாவில் ஹிட் நாயகியான நயன்தாரா மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. அந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கப்போகிறாராம். இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் வெற்றி என்கிற படத்தில் நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார், மேலும் இதற்கு முன் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா வில்லு படத்தில் நடித்திருக்கிறார்.

வருகிற 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் விஜய்யுடன் மீண்டும் நயன்தாரா ஜோடியாக இணைந்து நடிக்கும் 60தாவது
படம் திரைக்கு வரும் என சினிமா வட்டாரங்களில் இருந்துவரும் தகவல்கள் கூறுகிறது.

 

தமிழகத்தில் அதிமுகவுடன் எந்த சூழ்நிலையிலும் பாஜக கூட்டணி அமைக்காது : முரளிதரராவ்

 

தமிழகத்தில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்காது என தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, நரேந்திர மோடி கலந்து கொண்டதால்தான் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக விரும்பி சேர்ந்துள்ளனர். பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் தான் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழகத்தில், வரும் சட்ட மன்ற தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தான் வலிமையான கூட்டணியை அமைப்போம். எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று கூறினார் பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ்.

கமலஹாசன் பேச்சு குழந்தைத்தனமானது: ராம.கோபாலன் வருத்தம்

images politics rama gopalan - 2026
சென்னை:
கமலஹாசனின் பேச்சு குழந்தைத்தனமானது என்று அவரது பிறந்த நாள் விழா பேச்சுக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

திரைப்பட கலைஞர் கமலஹாசனின் திறமையை பாராட்டுகிறோம், நேற்று அவருடைய பிறந்த நாளைக்கு நம்முடைய வாழ்த்தைத் தெரிவிக்கிறோம்.

நேற்று அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் பேசிய இருப்பது குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது.

தன்னை பாராட்டி அளித்த இறை வடிவ சிலையால் எந்த பயனும் இல்லை, அதனை உருக்கி பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். ஒரு கலைஞருக்கு, அந்த சிலாரூபத்தில் உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்தால் எப்படி?! எந்தவொரு கலையைப் போற்ற வேண்டும், கலையே தெய்வீகமானது இல்லையா?

இறைவன் பற்றிய அவரது கருத்தில் எத்தனை குழப்பம் ஏன்? உலகில் எத்தனை வேறுபாடு ஏன் என இறைவனைக் கேட்பேன் எனும் கமலஹாசன், தான் எப்படியிருக்கிறாரோ அப்படியே எல்லா படங்களிலும் நடித்தால்.. எப்படியிருக்கும்.. அவருக்கே சலித்துவிடாதா? பார்ப்பவர்கள் நிலை? இவர் தசாவதாரம் எடுத்து, பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கலாம், ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையானது. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. இவரது படத்தில் எல்லா பாத்திரங்களும் கதாநாயகர்களாகவே நடித்தால் எப்படியிருக்கும்?!

கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டது சிறுப்பிள்ளைத்தனமானது. அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொள்வதில்லையா? அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவானேன்?

இப்படி அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் அவருக்கே உடன்பாடாக இருக்காது என்பது அனைவருக்கும் புரியும். பிறந்த நாளில் இப்படி பேசி, தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறும்போது, ஏன் இப்படி பேசி தனது ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விருதைத் திருப்பித் தரும் விஷயத்தில் தெளிவாக அவர் கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறோம். விருது அறிஞர்களால், கலைஞனின் திறமைக்கு தந்ததாக இருக்கும்போது அதனை திருப்பி அளிப்பது என்பது விருதிற்கு நம்மைத் தேர்ந்தெடுத்தவர்களை அவமதிப்பதாகும் என்று கமலஹாசன் கூறியிருப்பதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

கன்னியாகுமரியில் உருவான விவேகானந்தர் பாறையின் வரலாறு

11181579 737271589751442 7598140919708878288 n - 20261963 ஜனவரி முதல் 1964 ஜனவரி வரைஇந்திய அரசு, விவேகானந்தரின் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது.விவேகானந்தர் ஓர் ஹிந்துத் துறவிமட்டுமல்ல. ஒரு தேசிய அடையாளம்.கொண்டாட்டம் அவசியமானது. மேற்குவங்காளம் முதல் கன்னியாகுமரி வரைஅவரைத் தெரியாதவர்கள் கிடையாது.ஆராதிக்காதவர்கள் கிடையாது. அவரால்உந்தப்படாதவர்களோ, உத்வேகம்அடையாதவர்களோ கிடையாது.

குமரி மாவட்ட மக்களுக்கு இந்தக் கொண்டாட்ட அறிவிப்பு சற்றேகூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. காரணம், விவேகானந்தர்கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார். கடலுக்குள் சற்றுத் தொலைவில்உள்ள ஒரு பெரும் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று தினங்கள்(டிசம்பர் 25,26,27) அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.
இந்த நூற்றாண்டு விழாச் சமயத்தில் அந்தப் பாறையில் அவருக்குஒரு நினைவுச் சின்னம் எழுப்பினால் என்ன? பாறைக்குச் சென்றுவரஒரு பாலமும் சேர்த்துப் போட முடிந்தால் நல்லது.
அந்தப் பாறைக்கு விவேகானந்தருக்கு முன்னால் சென்றுதவமிருந்தது, தேவி கன்னியாகுமரி. இறைவி. சிவபெருமானைமணப்பதன்பொருட்டு அங்கே அவள் தவமிருந்ததாக ஐதீகம்.பாறையில் பதிந்துள்ள பாதம் அவளுடையதுதான் என்பதுஹிந்துக்களின் நம்பிக்கை. ஸ்ரீபாதப் பாறை என்று அந்த இடத்தைக்குறிப்பிடுவார்கள்.
11952036 737271533084781 2784547030572514479 n - 2026
இது ஒரு புறமிருக்க, பாறையில் விவேகானந்தருக்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்று தீர்மானித்ததும் அதற்கென ஒரு குழுஅமைக்கப்பட்டது. வேலாயுதம் பிள்ளை என்பவர் தலைமையில்அமைந்த அந்தக் குழுவில் சில ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும்இருந்தார்கள். விஷயத்தையும் திட்டத்தையும் ராமகிருஷ்ணமடத்துக்குத் தெரிவித்தார்கள். ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி,ராமகிருஷ்ண தபோவனம் என்ற இன்னொரு அமைப்பைத் தொடங்கிநடத்திக்கொண்டிருந்த சுவாமி சித்பவானந்தருக்கும் விஷயம்சொன்னார்கள்.
விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக்கருத்து வேறுபாடு இருக்க முடியும்? எனவே எந்தத் தடையுமின்றிப்பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின. விஷயம்வேகமாக வெளியே பரவ ஆரம்பித்தது.
சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில்விவேகானந்தருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது.நாநூறு வருடங்களுக்கு முன்னால் புனித சேவியர் இங்கு வந்தபோதுஅவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானது.
குரலெழுப்பியவர்கள், குமரி மீனவர்கள். பாறையின் நீள அகலம் என்னஎன்றுகூட மக்கள் யாருக்கும் தெரியாத நிலையில், தினமும்மீன்பிடிக்கச் செல்லும் அவர்கள்தாம் பாறையில் இறங்கிஇளைப்பாறுகிறவர்கள். அவர்களை இந்த விஷயத்தில் தூண்டிவிட்டவர் உள்ளூரில் இருந்த ஒரு பாதிரியார். கத்தோலிக்கர்.விடாதீர்கள். அந்தப் பாறை கிறிஸ்தவர்களுக்கே சொந்தம். நாம் அதைநிறுவியாகவேண்டும்.
மீனவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். யாருமறியாத ஓர் இரவில்பாறையின்மீது பெரிதாக ஒரு சிலுவையைக் கொண்டுபோய்வைத்துவிட்டு வந்தார்கள். கரையில் இருந்து பார்த்தாலேதெரியக்கூடிய அளவுக்குப் பெரிய சிலுவை.
சூடு ஏறத் தொடங்கிய தருணம் அது. கன்னியாகுமரி மக்கள்,பாறையில் சிலுவையைக் கண்டதும் கொதித்துப் போய் அரசுக்குக்கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரிடம்மனு அளிக்கப்பட்டது. மூலைக்கொரு கண்டனக் கூட்டங்கள், எதிர்ப்புஊர்வலங்கள் என்று ஆரம்பிக்கப்பட்டன. ‘ஸ்ரீபாதப்பாறை’ என்றுஅழைக்கப்பட்ட இடம். கிறிஸ்தவர்கள் எப்படி அங்கே சிலுவைநடலாம்?
மக்கள் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க, தேவி கன்னியாகுமரிஆலய நிர்வாகம், தன் பங்குக்குப் பாறை தனக்குத்தான் சொந்தம் என்றுஇன்னொரு தாக்குதலைத் தொடுத்தது.
எனவே விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்க விரும்பிய குழு,கோயில் நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் எழுதியது. பாறையில் ஒருநினைவுச்சின்னம் எழுப்பவும் போய்வர ஒரு பாலம் கட்டவும் அனுமதிவேண்டும்.
11924539 737271506418117 1038608820380684721 n - 2026
கோயில் நிர்வாகத்துக்குக் கிறிஸ்தவர்களைப் பற்றித்தான் கவலை.விவேகானந்தரைப் பற்றி அல்ல. எனவே அவர்கள் குழுவுக்கு அனுமதிகொடுத்தார்கள். நினைவுச் சின்னமும் பாலமும் கட்டலாம். ஆனால்எல்லாம் முடிந்ததும் அனைத்தையும் கோயிலின் பொறுப்பில்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
இதனிடையில் பாறையின் உரிமை குறித்த கோஷங்கள் மிகவே, அரசுஇதில் தலையிட முடிவு செய்தது. பாறை யாருக்குச் சொந்தம்?விசாரணையில், நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமில்லைஎன்று தெரிந்தது. எனவே பாறையில் அத்துமீறி நிறுவியிருந்தசிலுவையை அகற்றும்படி வருவாய்த் துறைக்கு உத்தரவு போனது.
இப்போது சிக்கல் பெரிதாகத் தொடங்கியது. ஏற்கெனவே நாநூறுவருடங்களுக்கு முன்னர் அங்கு சிலுவை இருந்தது. காலப்போக்கில்யாரோ அதை அழித்துவிட்டார்கள். இப்போது நடப்பட்ட சிலுவையைப்பாதுகாக்கவேண்டியது தமிழக அரசின் கடமை என்று கேரளத்தைச்சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகளும் செய்தி ஊடகங்களும் பேசஆரம்பித்தார்கள். வெறுமனே சிலுவை அமைத்தால் போதாது. புனிதசேவியருக்கு அங்கொரு நினைவுச் சின்னமும் எழுப்பியாக வேண்டும்.
தமிழக அரசு யோசித்தது. அதைவிட, முதல்வர் பக்தவத்சலம்யோசித்தார் என்று சொல்லலாம். எதற்குப் பிரச்னை?விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் என்று ஆரம்பித்ததால்தானேஇத்தனை விவகாரங்கள்? வெகு நிச்சயமாக ஒரு மதக்கலவரத்துக்குதூபம் போடுவதுபோல் இது அமைந்துவிடும்.
எனவே சிலுவையும் வேண்டாம், விவேகானந்தரும் வேண்டாம்,பாறையை அப்படியே விடுங்கள் என்று பக்தவத்சலம்சொல்லிவிட்டார்.
ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் அந்தப் பாறையில்விவேகானந்தர் தவமிருந்ததை ஒப்புக்கொள்ளக்கூடியவராகஇருந்தார். நிச்சயமாக அது சேவியர் பாறையல்ல. விவேகானந்தர்பாறைதான். வேண்டுமானால் ஒரு பலகை வைக்கலாம். இங்கேவிவேகானந்தர் வந்தார். தவமிருந்தார். அவ்வளவுதான். வேறொன்றும்வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
*
எனவே விவேகானந்தர் நினைவுச்சின்னக் குழுவில் இருந்தஆர்.எஸ்.எஸ்காரர்கள் விஷயத்தைத் தம் தலைவருக்கு எடுத்துச்சென்றார்கள். எப்படியாவது பாறையில் விவேகானந்தருக்கு ஒருநினைவுச் சின்னம் அமைத்தாக வேண்டும். கிறிஸ்தவர்கள் பிரச்னைசெய்கிறார்கள். கோயில் நிர்வாகம் குறுக்கே நிற்கிறது.முதலமைச்சரும் ஒத்துழைப்பதாயில்லை. அனைத்தையும் மீறிநினைவுச் சின்னம் எழுப்பப்படவேண்டும். ஒரு வழி சொல்லுங்கள்.
“ ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்போதைய தலைவர் கோல்வால்கர், ஏக்நாத்ரானடே என்பவரை அனுப்ப முடிவு செய்தார். ரானடே, அப்போதுஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்தியப் பொதுச்செயலாளர். தமிழகத்தைப்பற்றியோ, தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்தோ,கன்னியாகுமரி மாவட்டத்தின் மதச்சிடுக்குகள் குறித்தோ அவருக்குஒன்றும் தெரியாது. அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்.
விவேகானந்தருக்காகக் கன்னியாகுமரியில் ரானடே ஒருகரசேவையைத் தொடங்க உத்தேசிப்பாரா? அல்லது வேறு ஏதேனும்திட்டம் வைத்திருப்பாரா?
குமரி மக்கள் காத்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் அதைவிடஆர்வமுடன் காத்திருந்தார்கள்.
ரானடே அமைதியாக அமர்ந்து பாறை குறித்த அனைத்து வழக்குவிவகாரங்களையும் அது தொடர்பான அறிக்கைகளையும் அனைத்துத்தரப்பு வாதங்களையும் விரிவாகப் படித்தார். அன்றைய சூழ்நிலையில்பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் கூடாது என்றுதீவிரமாகச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர்தமிழக முதல்வர் பக்தவத்சலம். இன்னொருவர் ஹுமாயூன் கபீர்.அன்றைய கலாசாரத்துறை மத்திய அமைச்சர்.
சரியான எதிர்ப்பாளர்கள்தாம். மாநில முதல்வரும் மாற்று மதத்தைச்சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரும். சரி, பரவாயில்லை.பார்த்துவிடலாம் என்று ரானடே முதலில் கல்கத்தாவுக்குப் போனார்.அது ஹுமாயூன் கபீரின் தொகுதி. கல்கத்தாவில் இருந்து வெளிவரும்அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களையும் அவர் சந்தித்தார்.
பிரச்னை இதுதான். வங்கத்தின் தங்கமான விவேகானந்தருககுக் குமரிமுனையில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதை உங்கள் வங்காளத்துஎம்.பியும் மத்திய அமைச்சருமான ஒருவர் எதிர்க்கிறார். எனவே இதுகுமரி மக்களின் பிரச்னையல்ல. உங்களுடைய பிரச்னை.
அந்த புத்திசாலித்தனம் வேலை செய்தது. மேற்கு வங்கப்பத்திரிகைகள் அனைத்தும் ஹுமாயூன் கபீரை விமரிசித்து எழுதின.அமைச்சர் பயந்துவிட்டார். நினைவுச் சின்னம் அமைத்தால்சுற்றுச்சூழல் கெடும் என்ற அர்த்தத்தில்தான் நான் சொன்னேன்,அதற்குப் பிரச்னையில்லை என்றால் எனக்கொன்றும் ஆட்சேபணைஇல்லை என்று சொல்லிவிட்டார்.
அடுத்தவர் பக்தவத்சலம். முதல்வர். மாநிலத்தின் அமைதி அவருக்குமுக்கியம். ஒரு மதக்கலவரத்தைத் தவிர்க்கும் நல்ல நோக்கம்தான்.ஆனால் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அவசியம். தவிரவும்அதைச் செய்யாமல் விடுத்தால் பாறையைக் கிறிஸ்தவர்கள்அபகரித்துவிடுவார்கள்.
ரானடே, லால் பகதூர் சாஸ்திரியிடம் பேசினார். சாஸ்திரியை உதவச்சொல்லிக் கேட்டார். நீங்கள் நேருவிடம் சொல்லி, பக்தவத்சலத்தைச்சம்மதிக்கச் செய்ய வேண்டும்.
மறுபுறம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தேடித்தேடிவிவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்க அவர்களது சம்மதத்தைப்பெறும் விதமாக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் தனி மனிதராகநடத்தினார். அத்தனை பேரும் ஆதரிப்பதை பக்தவத்சலம் ஒருத்தர்எதிர்த்துவிடுவாரா? பார்த்துவிடலாம்.
அதோடு அவர் நிறுத்தவில்லை. கன்னியாகுமரி முக்கியஸ்தர்களும்ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் மட்டும் இருந்த நினைவுச் சின்னகமிட்டியை விஸ்தரிக்க முடிவு செய்தார். தி.மு.க. தலைவர்அண்ணாதுரையைச் சந்தித்தார். அவரை கமிட்டிக்குள் இழுத்தார்.காங்கிரஸ்காரர்களுடன் பேசினார். அவர்களையும் அழைத்தார்.கம்யூனிஸ்டுகளை நாடினார். உச்சக்கட்டம், ஜோதிபாசுவிடம் போய்நினைவுச் சின்னம் அமைக்க நன்கொடை கேட்டது.
‘நான் எப்படி விவேகானந்தருக்கு நினைவாலயம் அமைக்கநன்கொடை தருவேன்? என் கட்சிக்கொள்கை இடம் தராது’ என்றுஅவர் சொன்னபோது, உங்கள் மனைவி கம்யூனிஸ்ட்கட்சியில்இல்லையே, அவரை இழுத்துவிடுங்கள் என்றுகொக்கிபோட்டு இழுத்தார். பணக்கார பிர்லாக்களைப் பேசிப்பேசிமசியவைத்தார். கிறிஸ்தவர்கள் மிகுந்த நாகாலாந்து மாநிலத்துக்குப்போய், முதலமைச்சரிடம் பேசி மக்களிடம் பணம் வசூலிக்கஒப்புக்கொள்ள வைத்தார்.
ஒரு விஷயம். நாகாலாந்து மக்களுக்கு விவேகானந்தரைப் பற்றிஅப்போது ஒன்றுமே தெரியாது. பெயர்கூடக் கேள்விப்பட்டதில்லை. ‘வெறும் ஆயிரம் ரூபாய் வசூலானால் போதும். எண்ணிக்கையல்ல,அவர்களது பங்களிப்புதான் முக்கியம்’ என்றார் ரானடே.
விவேகானந்தர் என்னும் சன்னியாசியை, ஹிந்து மதத் துறவியாகஅல்லாமல், இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றாகக்காட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சி அது. பல்வேறு கட்சிகள்,பல்வேறு கொள்கைகள், பல்வேறு கோஷங்கள், பல்வேறு கருத்தியல்நிலைபாடுகள்.
ஆனால் ஏக்நாத் ரானடே என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரரால், தனிமனிதராக அத்தனைத் தரப்பையும் சமாளித்து, கன்னியாகுமரிகிறிஸ்தவர்களின் அதிருப்தியையும் சரி செய்து, எந்தப் பிரச்னையும்இல்லாமல் – திட்டமிட்டதைவிடப் பெரிய அளவில் குமரிக் கடலில்விவேகானந்தருக்கு மாபெரும் நினைவாலயம் எழுப்ப முடிந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இ-சேவை மையம் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்

நெல்லை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
 
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை பொது இ-சேவை மையத்தில் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். அப்போது எந்தெந்த சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளது. யாரிடம் நிலுவையில் உள்ளது என்பது போன்ற நிலை குறித்து கேட்டறிந்தார். இதுதொடர்பாக இ-சேவை மைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு தாசில்தாரை கேட்டுக்கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கருணாகரன் கூறியது, நெல்லை மாவட்டத்தில் 12 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 25 பேருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. மையங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
 
இதன்பின்னர் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் கருணாகரன்,  ரெட்டியார்பட்டி, முன்னீர்பள்ளம், தருவை, மைலாக்களம், ஆலங்குளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டார். அப்போது ஆட்சியருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் விஜயகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திகேயன், பாளையங்கோட்டை தாசில்தார் கிறிஸ்டாேபர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா ஆகியோர் உடன் சென்றனர்.

பாவூர்சத்திரம் அருகே பைக் மீது வேன் மோதல்: இளைஞர் சாவு

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இன்று இறந்தார்.
  பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(34). இவரது சகோதரர் முத்துக்குமார்(27). இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் செல்லத்தாயார்புரம் சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.
 திருநெல்வேலி – தென்காசி சாலையில் மகிழ்வண்ணநாதபுரம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வரும்போது எதிரே வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  இதில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சக்கரவர்த்தி தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று   சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி இறந்தார்.
  இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுனரான சேரன்மகாதேவியைச் சேர்ந்த வா.இசக்கிதாஸ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்

பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.

 

பேரிக்காய்  புத்துணர்வை உடலுக்கு தரக்கூடியது, மேலும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கிருமி நாசினியாக விளங்கும் இது நுண் கிருமிகளை அழிக்கக கூடியது. பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும்.

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

மலச்சிக்கலை போக்க கூடியது, தொண்டை புண், வலியை குணப்படுத்த கூடியது, சளி, இருமலை போக்கவல்லதுமான பேரிக்காய். பேரிக்காய் காயாக இருக்கும்போது, அது கெட்டியாக பச்சை நிறத்திலும், பழுத்தபின் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். அதிக நார்ச்சத்து, நீர்சத்து மிகுந்தது. அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.இதை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வை தரக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.

பேரிக்காயை அரைத்து பசையாக எடுத்துகொள்ள வேண்டும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, நீர்விடாமல் பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். பின்னர் ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கலாம். இதனுடன் நீர்விட்டு பருகுவதன் மூலம் உடலில் புத்துணர்வு ஏற்படும். பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயை குணப்படுத்தும்.

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து

 

 

:

 

 

 

 

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல் ஹாசன்!

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவரை கௌரவித்தார். இந்த சந்திப்பின் போது ‘தூங்காவனம்’ திரைப்படத்தின் வசனகர்த்தா சுகா உடன் இருந்தார்.