Home Blog Page 5968

தினேஷ்-நந்திதாவின் உள்குத்து எப்போது ரிலீஸ்?

‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கார்த்திக் ராஜு இயக்க, kenanya films ஜே.செல்வகுமார் தயாரிக்க ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஜி.விட்டல் குமார் இணை தயாரிப்பில் உருவாகும் ‘உள்குத்து’ வர்த்தக ரீதியாக, எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என்றுக் கணிக்கபடுகிறது.

தினேஷுக்கு இணையாக நந்திதா நாயகியாக நடிக்கும் ‘உள்குத்து’ படத்தில் அவர்களோடு பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ‘பாண்டிய நாடு’ சரத், திலிப் சுப்புராயன், மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோர் நடித்து உள்ளனர். இடைவிடாத படப்பிடிப்பை தொடர்ந்து ‘உள்குத்து’ இறுதிக் கட்ட பணிகளை எட்டிக் கொண்டு இருக்கிறது.

‘உள்குத்து’ கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப் பட்டு உள்ளது. கடலின் வண்ணமும், கடல் பாசியின் வண்ணமும் படத்தின் வண்ணத்தையும், கடலை சார்ந்த மனிதர்களின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் படமாக இருக்கும்.

எனது முந்திய படமான ‘திருடன் போலீஸ்’ ஏற்படுத்தி உள்ள அபிப்ராயத்தை இந்தப் படமும் காப்பாற்றும். ‘உள்குத்து’ இசை டிசம்பர் மாதம் வெளி வர உள்ளது. 2016 ஆம் பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘உள்குத்து’ என்று தெரிவித்தார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

உலகெங்கும் பரவும் ச்பெக்ட்ரா ஜுரம்: சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்ட்!

பல்வேறு வருடங்களாக உலகெங்கும் உள்ள மக்களை மகிழ்விக்கும் James Bond படங்களின் தொடர்ச்சியாக தயாராகும் படம்தான் ‘Spectre’. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்களாக ஆவர் என்பதே எழுதப் படாத சட்டமாகி விட்டது.

எத்தனை வகையான படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இருக்கும் ஆதரவு கூடுமே தவிரக் குறையாது என்பதற்கு ‘Spectra’ படத்துக்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான வரவேற்ப்பு தான் சான்று.

‘ச்பெக்ட்ரா’ என்று அழைக்க படும் கொடிய தீவிர வாத குழு ஒன்று உலகின் அமைதியை குலைக்கும் கொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுவதை அறிந்து அந்தக் கூட்டத்தில் ரகிசயமாக ஊருடுவும், ஜேம்ஸ் பாண்ட் அவர்களின் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார்.

தேசிய பாதுக்காப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிக்கோ ஜேம்ஸ் பாண்டுடைய நடவடிக்கை மேல் அதிருப்தி. அதற்கான காரணம் என்ன, பொதுவாகவே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் அழகான ராட்சசிகளான பெண்களுக்கு இந்தப் படத்தில் பங்கு என்ன என்பதை மிகவும் சுவராசியமாக படம் பிடித்து இருக்கிறார்கள்.

இன்று பல நாடுகளில் வெளி வந்த ச்பெக்ட்ரா இதுவரை நிலைத்து இருந்த வசூல் சாதனைகள் பலவற்றை முறியடித்து உள்ளது. உலகெங்கும் ச்பெக்ட்ரா ஜுரம் பரவி வருகிறது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாமே வசூல் மழைதான்.

இந்தியாவில் ‘ச்பெக்ட்ரா’ நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளி வரும் என சோனி pictures நிறுவனத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

குடல் புண் நீங்க

உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும்.

கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும்.

குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும்.

இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.

வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.

இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும்.

அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும்.

சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும்.

இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும்.

அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும்.

செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும்.

அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும்.

அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும்.

ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.

குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும்.

அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.

பத்து கொன்றை மரப்பூக்களை 100மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம்.

இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும்.

சீதளபேதியை குணப்படுத்த 100மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும்.

1தம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நுரையீரலில் சேர்த்துள்ள சளி எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும்.

குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும்.
குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும்.

இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும்.

புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும்.

பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும்.

நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம்.

ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.

சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.

நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.

தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

 பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

கருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது, பேரீச்சம்பழம். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும்.மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும்.

பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.

கை, கால் தளர்ச்சி குணமாகும். பாலில் வேகவைத்து, பருகி வந்தால் இதய நோய்கள் வரவே வராது.

இரவில் பேரீச்சங்காய்கள் மூன்றை நீரில் ஊறப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காய்களைச் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை வெளியில் எடுத்து விடும்.

வீடு… கார்.. பைக் ..சொந்தமா வைத்து இருக்கீங்களா ? அப்போ உங்களுக்கு பாஜக அரசாங்கம் கேஸ் மானியம் கொடுக்காதாம்!

 

சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே கொடுக்கவேண்டாம் என ஆளும் பாஜக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஆளும் பாஜக மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்று இதுவரை சுமார் 42 லட்சம் பேர் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த வீடு, கார் வைத்திருப்பவர்களுக்கு தாங்களே நிறுத்திவிட ஆளும் பாஜக மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த பொருளாளதார கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சூசகமாக வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லை.

இதற்கான நிர்வாக முடிவை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த முடிவால் நலிவடைந்தவர்களுக்கு நம்மால் உதவ முடியும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆளும் பாஜக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே திட்டத்தை முந்திய காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார்.

ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தனி பெரும்பான்மையுடன் உள்ள மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அம்மா பெட்டகம் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி வழங்கினார்

பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார் ,உடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் மாவட்ட கவுன்சிலர் மு. சேர்மபாண்டியன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் குணம், அதிமுக மேலவை பிரதிநிதிகள் நிர்வாகிகள் கணபதி, ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகராஜன், ஆண்டபெருமாள்,ஒன்றிய கழக துணைச்செயலாளர் குமாரசாமி ,கூட்டுறவு வங்கி இயக்குனர் வெங்கடேஷ்.  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொலை வழக்குகளில் துப்புதுலக்க தனிப்படைகள் : நெல்லை டிஐஜி அன்பு

கொலை வழக்குகளில் துப்பு துலக்க எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற அன்பு தெரிவித்துள்ளார்.
 
நெல்லை சரக டிஐஜியாக இருந்த முருகன் பதவி உயர்வு பெற்று மதுரை தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பியாக இருந்த அன்பு நெல்லை சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். அவர் இன்று டிஐஜியாக பொறுப்பேற்றார். அதோடு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். டிஐஜியாக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொலை வழக்குகளில் துப்பு துலக்க எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படும். 
 
சைபர் கிரைம் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க சிபிசிஐடியில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை கொண்டு உள்ளூர் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும்.  நெல்லை சரகத்தில் நடைபெறும் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்.

பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளை

பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே தெற்குகழுநீர்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி மீனாட்சி(55). கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன் ஆறுமுகராஜ் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். தீபாவளிக்காக அவர் ஊர் புறப்பட்டார். இதையொட்டி நேற்று மீனாட்சி வீட்டைபூட்டி விட்டு மகனை அழைக்க திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். 
 
அதன் பிறகு தாய்,மகன் இருவரும் இன்று அதிகாலை காரில் ஊர் திரும்பினர். அப்போது இவர்கள் வீட்டின் முன்கேட் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4பவுன் நகை மற்றும் ரூ.8ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீகேபுதூர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தீபாவளிக்கு தமிழக அரசு டாஸ்மாக்கில் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு !

தமிழகத்தில் தீபாவளிக்கு அரசு நிறுவனமான டாஸ்மாக் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 மதுக்கூடங்களும் (பார்) செயல்பட்டு வருகின்றன.

தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 500 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடுமுறை நாட்களில் ரூ.92 கோடி என்ற அளவிலும்,
நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி அளவிலும், சராசரியாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. எப்போதும் பண்டிகை காலங்களில் மேலும் சில மடங்கு அதிகரித்தே காணப்படுகிறது.

மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டதால், மதுபான விலை உயர்ந்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்ய கடை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, ”கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.230 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தீபாவளியையொட்டி 3 நாள்களுக்கு ரூ.303 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014-ம் ஆண்டு தீபாவளி சீசனில் மது விற்பனை அதிகரித்தாலும், விலை உயர்வை வைத்து ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு தீபாவளி அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்க வேண்டும். இந்த நிலையில்

ஆனால் ரூ.8 கோடி குறைந்து ரூ.142 கோடிக்கு மட்டுமே விற்பனையானது. அதேபோன்று இந்த ஆண்டும் நடந்துவிட கூடாது என்பதால், மண்டல அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கடந்த ஆண்டைவிட 20 முதல் 25 சதவீதம் அதாவது சராசரியாக ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் கூடுதலாகவே மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வெயில் காலங்களில் மட்டுமே அதிகம் விற்பனையாகும் ‘பீர்’ வகைகள் தற்போது மழைக்காலமாக இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது. இதன் விற்பனையையும் தீபாவளி நாட்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில்கேட்ட மதுபானம் கிடைப்பதில்லை, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று குடி மகன்களிடமிருந்து புகார்கள் வருகின்றன.

இதுபோன்ற புகார்களுக்கு, தாலுக்கா வாரியாக தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினர் டாஸ்மாக் அதிகாரிகள்.

தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற பிரசாரம் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு, வரும் நிலையில், தீபாவளிக்கு ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மருமகளின் தலையை வெட்டி பட்டப்பகலில் தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது

தருமபுரி மாவட்டத்தில் மருமகளின் தலையை பட்டப்பகலில் வெட்டி தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குத்தாலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் ரமேஷ் (28)
ரமேஷின் மனைவி ஆனந்தி(25)

சுப்பிரமணியின் மருமகளாகிய ஆனந்தி அவரது கனவர் மற்றும் மாமியாரிடம் வெகுநாட்களாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது .

அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்ப்பட்டு வந்த நிலையில் மருமகள் ஆனந்தி மீது ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று பட்டப்பகலில் ஆனந்தியின் தலையை மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த அவர் மருமகளின் தலையை கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் வசித்து வரும் தெருவில் ஊர்வலமாக வந்து வீசியுள்ளார் சுப்பிரமணி.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனந்தியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தியின் கனவர் ரமேஷ் உள்ளிட்ட உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருமகளின் தலையை மாமனார் வெட்டி பட்டப்பகலில் தெருவில் ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.