Home Blog Page 5969

மருமகளின் தலையை வெட்டி பட்டப்பகலில் தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது

தருமபுரி மாவட்டத்தில் மருமகளின் தலையை பட்டப்பகலில் வெட்டி தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குத்தாலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் ரமேஷ் (28)
ரமேஷின் மனைவி ஆனந்தி(25)

சுப்பிரமணியின் மருமகளாகிய ஆனந்தி அவரது கனவர் மற்றும் மாமியாரிடம் வெகுநாட்களாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது .

அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்ப்பட்டு வந்த நிலையில் மருமகள் ஆனந்தி மீது ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று பட்டப்பகலில் ஆனந்தியின் தலையை மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த அவர் மருமகளின் தலையை கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் வசித்து வரும் தெருவில் ஊர்வலமாக வந்து வீசியுள்ளார் சுப்பிரமணி.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனந்தியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தியின் கனவர் ரமேஷ் உள்ளிட்ட உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருமகளின் தலையை மாமனார் வெட்டி பட்டப்பகலில் தெருவில் ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவர் விடுதிக்கு உணவுப்பொருள் சப்ளை செய்ய ரூ.7 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அமைச்சரின் மனைவி

 

 

ஊழல் புகார்கள் ஏற்கனவே உள்ள நிலையில் சமூக நலத்துறை கர்நாடகமாநில அமைச்சராக இருப்பவர் ஆஞ்சநேயா. அவர் கடந்த ஜூன் மாதம் சமூக நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளுக்கு தலையணை மற்றும் படுக்கைகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை சரியாக நிரூபிக்க முடியாததால் அமைச்சர் நடவடிக்கையில் இருந்து தப்பினார். தொடர்ந்து அவர் ஊழலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி. சேனல்அமைச்சரை கையும் களவுமாக சிக்க வைக்க முடிவு செய்தது. இதற்காக டி.வி.யில் பணியாற்றும் 2 ஊழியர்கள் காண்டிராக்டர்கள் போல் நடித்தனர்.

முதலில் அவர்கள் சமூக நலத்துறை துணை இயக்குனரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள். மங்களூரைச் சேர்ந்த காண்டிராக்டர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களுக்கு மாணவர் விடுதிக்கு உணவு பொருள் சப்ளை செய்யும் காண்டிராக்ட் வேண்டும் என்று கேட்டனர்.

பின்னர் அமைச்சரின் மனைவியை அவரது வீட்டில் போய் சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களது சட்டைப்பையில் சிறிய அளவிலான பேனா போன்ற வீடியோ காமிராவை பொருத்தி இருந்தனர்.

விடுதிக்கு உணவுப்பொருள் சப்ளை செய்யும் காண்டிராக்ட்டுக்கு ரூ.7 லட்சம் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். அதை அமைச்சரின் மனைவி பெற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் சென்று விட்டனர். இதற்கிடையே நேற்று இது தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியிலும், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் லஞ்சம் வாங்குவதை கையும் களவுமாக சிக்க வைக்க தாங்கள் நடத்திய நாடகம் என்று டி.வி. செய்தியாளர் கூறினார். மேலும் ரூ.7 லட்சம் பணமும் உண்மையான நோட்டுகள் அல்ல, போலி நோட்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனைவி மூலம் அமைச்சர் லஞ்சம் வாங்குவதை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இது பற்றி சி.ஐ.பி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதுபற்றி முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் அமைச்சர் சபை கூட்டத்தில் இருந்தபோது இந்த வீடியோ விவகாரம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளின் முழு விவரங்களையும் கேட்டு இருக்கிறேன். அதை ஆய்வு செய்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சர் விவகாரம் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி ராமதாஸின் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடை கோரிய மனு உச்ச நீதிமன்றதில் தள்ளுபடி

 

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்டுள்ள இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசில் கடந்த 2004-2009-ம் ஆண்டுக்கு இடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரின் மகனான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவரது பதவிக்காலத்தின்போது இந்தூர், லக்னோவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்தி அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அன்புமணி தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் 20-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவறு செய்திருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் கிடைத்திருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மேற்கண்ட இரு வழக்குகளிலும் தன்மீது குற்றம்சுமத்தி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

சுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர் மற்றும் கோபால கவுடா அடங்கிய அமர்வின்முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில்தான் அவர் இதற்கு நிவாரணம் பெற வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், அன்புமணி ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

வைகோ தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை: 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தங்களின் அன்புத் தாயார் திருமதி மாரியம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (6.11.2015) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், திருமதி மாரியம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். திருமதி மாரியம்மாள் அவர்களை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– என்று கூறியுள்ளார்.

ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் கைது

91154518c6f0cafa827116d9e4363014 L - 2026

பெங்களூர்:
பெங்களூரில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மினி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையில் கூறியபோது,

”பெங்களூரு அருகில் உள்ள லகொண்டனஹள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சில் 19 வயது பெண் ஏறினார். அப்போது கீளினர் மஞ்சுநாத்திடம் (23) பஸ் ஓட்டுநர் ரவி (26) பஸ் ஓட்டுமாறு கூறிவிட்டு, ஓடும் பஸ்சில் அந்தப் பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விட்டுச் சென்றுவிட்டனர். அந்தப் பெண் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரின் பேரில் ஓட்டுநர் ரவி மற்றும் கிளீனர் மஞ்சுநாத் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சுளிபெல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த விஜயகாந்த்

images tamilnadu dmdk leader vijayakanth - 2026

சென்னை:

தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் டி. ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தன்னை மனுதாரராக சேர்க்கக் கோரி விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், அவரது மனுவை கடந்த ஜூலை 22-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, விஜயகாந்த் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கிறோம். அதனால் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இன்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், பேரவை நிகழ்வுகளை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என்றும், தாம் பங்குதாரராக உள்ள கேப்டன் டி.வி.யில் அதை ஒளிப்பரப்பத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பைரவ வழிபாடு; பைரவர் ஆலயங்கள்

kasi kalabhairava - 2026

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்.
இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.

அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.

தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, “காளி’ என பெயர் சூட்டினாள்.

காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, “பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, “காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, “காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, “வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.

பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

நவக்கிரக பைரவர்

பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்டமி செவ்வாய்

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.

செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

தேங்காய் மூடி விளக்கு

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.

பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்

பைரவர்!

kasi kalabhairava - 2026

சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.

* பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு “பைரவர்’ என்பது பெயராயிற்று.

* பைரவருக்கு சேஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. சேஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

* பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஞ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.

* காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.

* தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

* பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

* அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

* பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.

பைரவரின் அருள் கிடைக்க

*சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும்.

* பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது.

பைரவருக்குரிய மந்திரம்
பைரவருக்கான பல மந்திரங்களில் மூன்று மட்டுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

ஓம் பைரவாய நமஹ’
‘ஓம் ப்ராம் பைரவாய நமஹ’
‘ஓம் நமோ ருத்ராய கபாலியாய பைரவாய
த்ரைலோக்ய நாதாய
ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா’

சிவாஜி சிலையை அகற்றுவது எப்போது?: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

images tamilnadu sivaji statue - 2026

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கபட்டுள்ள சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்று ஒரு வாரத்தில் பதில் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை முன்பு காமராஜர் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைத்த பிறகே சிவாஜி சிலையை அகற்ற முடியும் என்றும், அதற்கு பல துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்திருந்தது. எனவே, சிவாஜி சிலையை அகற்றுவதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தேவைப்படுவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக நெடுஞ்சாலை துறை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் மீதுள்ள அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஓடும் பஸ்சில் இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்த டிரைவர், கிளீனர் கைது

ஓடும் பஸ்சில் 19 வயது இளம் பெண்ணை பஸ்சின் டிரைவர் ரவி (26) மற்றும் கிளீனர் மஞ்சு (23) ஆகியோர் மாறி மாறி கற்பழித்த கொடூர சம்பவம் பெங்களூரின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது

பெங்களூர் கே.ஆர்.புரம் அடுத்த ஒசக்கோட்டை என்ற புறநகர் பகுதியை சேர்ந்தவர் 19வயது இளம் பெண்.
அவர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார் . அந்த பெண், நேற்று காலை பணிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ்ஸை வழிமறித்து ஏறினார். அந்த பஸ்சில் டிரைவர் மற்றும் கிளீனரை தவிர வேறு யாரும் பயணம் செய்யவில்லை.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டிரைவரும், கிளீனரும், ஓடும் பஸ்சிலேயே மாறி மாறி, அந்த இளம் பெண்ணை கற்பழித்துள்ளனர்.

காம கொடூரகளின் நோக்கம் நிறைவேறியபிறகு,
லகொன்டே கிராஸ் பகுதியில் அப்பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.

பெருத்த வலி காரணமாக தனியார்மருத்துவமனையொன்றில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து
டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.