Home Blog Page 5970

தமிழக காவல்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் நகை–பணம் கொள்ளை

 

கோவை மாவட்டம் போத்தனூர் லாயிடஸ் அவென்யூவை சேர்ந்தவர் நீஜாமுதீன் (வயது 60). தமிழக காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவர் தனது வீட்டை பூட்டி குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் பணம், விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அப்போது 4 கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். போலீஸ் உயர் அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி விழாவுக்கு தயாராகிறது திருச்செந்தூர்: நவ.12ல் கொடியேற்றம்

images tiruchendur - 2026

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நவம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் 7 நாட்கள் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து விரதமிருந்து சூரசம்காரம் முடிந்தவுடன் விரதத்தை முடிப்பர்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரும் நவ.12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். நவம்பர் 13ல் இருந்து 16 வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். நவம்பர் 17 அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30க்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 4.30க்குமேல் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

மறுநாள் 18ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் கந்தசஷ்டி திருவிழாவில் ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை முறையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத் துறையினரும், உயிர் மீட்பு படகுடன் மீன்வளத் துறையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் திருக்கோயில் வளாகத்தில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடன் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தீயணைப்புத் துறையினர் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்ட தீயணைப்பு ஊர்தியைத் தேவையான இடங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை மூலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை தாற்காலிகமாக சீரமைக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், மூன்று தாற்காலிகப் பேருந்து நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நடைபெற்ற நிகழ்ச்சியி சிறப்புரையில் பேசியதாவது:

நாட்டில் சிந்தனை,சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது.எழுத்தாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது. நாட்டில் அமைதி இல்லையென்றால், சுதந்திரம் இருக்க வாய்ப்பில்லை,அதேபோல் சுதந்திரம் இல்லாமல் அமைதி இல்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.

வைகோவின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவரது  இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.வைகோவின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 96 கடந்த உடல்நலக்குறைவால் சில நாட்களாகஅவதிப்பட்டு வந்த அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

வைகோவின் தாயார் காலமானா தகவல் சென்னையில் இருந்த வைகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர் விமானம் மூலம் நெல்லை புறப்பட்டு வந்தார்.

வைகோவின் தந்தை வையாபுரி. அவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு வைகோ, ரவிச்சந்திரன் என்ற 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். தி.மு.க.வில் வைகோ மாணவர் பருவத்தில் ஈடுபட்டதற்கு வைகோவின் தாயாரும் ஒரு காரணமாகும்.

பின்னர் வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியபோதும் மாரியம்மாளிடம் ஆசி பெற்றே கட்சியை தொடங்கினார்.அரசியல் மற்றும் சமூக பணிகளில் வைகோவின் தாயார் மாரியம்மாள் அதிக ஆர்வம் உடையவர்.

தமிழ முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இவரது வீட்டிற்குசென்று மாரியம்மாளை சந்தித்து பேசி உள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒருமுறையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டபோதும் மாரியம்மாள் தன்னந்தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

மாரியம்மாள்சமீபத்தில் மதுவிற்கு எதிராக கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தின் போதும் க லந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய 1,525 பேரை கைது செய்த  காவல்துறை

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த 1,525 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து கங்கையம்மாள் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் அதிமுக கட்சியில் பொறுப்பிலிருந்த அவரது கணவர் சொக்கலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தாய்சேய் நலவிடுதி கட்டுவது தொடர்பாக கங்கையம்மாள், சொக்கலிங்கம் இருவரும் தங்கள் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான விஜயபாஸ்கரை நேரில் சந்தித்தனராம்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர்களை சாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து முத்தரையர் சங்க நிர்வாகிகளிடம் சொக்கலிங்கம் தெரிவித்தாராம்.

விஜயபாஸ்கர் திட்டியதைக் கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக முத்தரையர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், கல்வீச்சு என காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையில் பெரும் பிரச்னை உருவானது

இந்த நிலையில், முத்தரையர் சங்க நிர்வாகி செல்வகுமார் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 1,525 பேரை கைது செய்த காவல்துறையினர்.
நேற்று கைது செய்தனர்.

முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி அளிக்காதது குறிப்பிடத்தக்கது

வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்தில் முதியவர் பலி : மூவர் கைது

கோவையில் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, செல்வபுரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வசித்து வருபவர் தேவி. அவரது மகன் நவீன் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

தேவியின் வீடு இரண்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் தேவியும் அவரது மகனும் வசித்துள்ளனர். மற்றொரு பகுதியில் தேவியின் தந்தை சண்முகம், சகோதரி துளசிமணி, கணவர் சிவக்குமார் வசித்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சண்முகத்தின் வீட்டுக்கு வெளியூரிலிருந்து புதிய நபர்கள் சிலர் சிவக்குமாருடன் வந்து சென்றுள்ளனர்.

வியாழக்கிழமை காலை சிவக்குமார் முதியவர் ஒருவரை சண்முகத்தின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அன்று காலை 11 மணிக்கு மேல் சண்முகம் வசித்த வீட்டில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

வெடி விபத்தால் சண்முகம் மற்றும் தேவி வசித்த வீட்டின் இரு பகுதிகளும் வெடித்து சிதறி தரைமட்டமாயின. வீட்டின் இருபக்கங்களிலும் உள்ள வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து சேதமாகின.

வெடி சப்தம் கேட்டு அருகில் வசிப்போர் சென்று பார்த்தபோது, வெடி விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அருகில் நாயும் இறந்து கிடந்தது. மேலும் தேவியின் மகன் நவீன் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்த கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் ரம்யாபாரதி, உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட போலீஸார் மற்றும் கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் எம்.சாகுல் அமீது, கோவை கோட்ட அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் வெடி விபத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சோதனை செய்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடைபெற்றது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து லாலா பட்டாசு எனப்படும் அதிக சப்தம் தரும் வெடிகள், வெடி மருந்துரசாயன பொருள்கள், அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட். அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிவகுமார், துளசிமணி, சண்முகம், தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 (ஏ) அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் 286 வெடிபொருளை வைத்து அலட்சியமாக நடந்து கொள்ளுதல் மற்றும் வெடிமருந்து தடை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவகுமார் தவிர மற்ற மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவகுமார் காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து காவல் துறையினர்கூறுகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அந்த வீட்டில் முறைகேடாக வெடிகளை சிவகுமார் வாங்கி வைத்திருந்துள்ளார். அங்கு பட்டாசு தயாரிக்கும் போதே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் தலைமறைவாக உள்ள சிவகுமார் பிடிபடும்போதே மட்டுமே தெரியும். இறந்தவர் யார் என்பதும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறையினர் கூறினர்

கடந்த 2011-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சிவகுமார் மீது ஏற்கெனவே செல்வபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து: முதியவர் சாவு

கோவை:

கோவையில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, செல்வபுரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வசித்து வருபவர் தேவி. இவரது மகன் நவீன் (வயது 19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தேவியின் வீடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் தேவியும் அவரது மகனும் வசித்துள்ளனர். மற்றொரு பகுதியில் தேவியின் தந்தை சண்முகம், சகோதரி துளசிமணி, கணவர் சிவக்குமார் வசித்து வந்தனர். சில நாள்களாக சண்முகத்தின் வீட்டுக்கு வெளியூரிலிருந்து புதிய நபர்கள் சிலர் சிவக்குமாருடன் வந்து சென்றுள்ளனர்.

முதியவர் ஒருவரை சண்முகத்தின் வீட்டுக்கு சிவக்குமார் வியாழக்கிழமை காலை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மேல் சண்முகம் வசித்த வீட்டில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சண்முகம் மற்றும் தேவி வசித்த வீட்டின் இரு பகுதிகளும் வெடித்து சிதறி தரைமட்டமாயின. வீட்டின் இரு பக்கங்களிலும் உள்ள வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து சேதமடைந்தன.

சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் சென்று பார்த்தபோது, வெடி விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அருகில் நாய் இறந்து கிடந்தது. மேலும் தேவியின் மகன் நவீன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற, கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் ரம்யாபாரதி, உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட போலீஸார் மற்றும் கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் எம்.சாகுல் அமீது, கோவை கோட்ட அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடைபெற்றது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, வெடி மருந்து, ரசாயன பொருள்கள், லாலா பட்டாசு எனப்படும் அதிக சப்தம் தரும் வெடிகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகுமார், துளசிமணி, சண்முகம், தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 (ஏ) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்), 286 (வெடிபொருளை வைத்து அலட்சியமாக நடந்து கொள்ளுதல்) மற்றும் வெடிமருந்து தடை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவகுமார் தவிர மற்ற மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவகுமார் தேடப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அந்த வீட்டில் முறைகேடாக வெடிகளை சிவகுமார் வாங்கி வைத்திருந்துள்ளார். மேலும் அங்கு பட்டாசு தயாரிக்கும் போதே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. முழு விவரங்கள் தலைமறைவாக உள்ள சிவகுமார் பிடிபடும்போதே தெரியும். இறந்தவர் யார் என்பதும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது என்றனர். சிவகுமார் மீது ஏற்கெனவே கடந்த 2011-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக செல்வபுரம் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சகிப்புத் தன்மை இல்லையாம்: விருதை திருப்பி கொடுத்தார் அருந்ததி ராய்

images india arunthadi roy - 2026

புதுதில்லி,

நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்தப் பட்டியலில் எழுத்தாளர் அருந்ததி ராயும் சேர்ந்துள்ளார். அவர், தனக்கு வழங்கபட்ட விருதை திருப்பி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

நான் என்னுடைய தேசிய விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்காக நான் அவமானப்படுகிறேன். அதே நேரம் என்னுடைய விருதை திருப்பியளிப்பதற்காக பெருமைப்படுகிறேன் – என்றார்.

தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி: மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

images india Shelfy with election symbol The prime minister dismissed - 2026
ஆமதாபாத்:

தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரத்தில், அவர் மீது தொடரப்பட்ட விதிமீறல் வழக்கை குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குஜராத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி ஒன்றுக்கு அருகே பிரதமர் மோடி நின்றுகொண்டு தங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையுடன் பேட்டியளித்தார். மேலும் அவர் தாமரையுடன் ‘செல்பி’ புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமீறல் என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குழு ஒன்று, இதில் நடத்தை விதிமீறல் இல்லை என அறிக்கை அளித்தது.

எனினும் இதை எதிர்த்து நிஷாந்த் வர்மா என்ற ஆம் ஆத்மி தொண்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகாரை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிஷாந்த் வர்மா மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா, மனுதாரரின் வழக்கு தகுந்த நடைமுறைகளின் படியே கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனவும் கூறி தள்ளுபடி செய்தார்.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செய்தி வெளியிடாமல் இருக்க ஊடகத் துறையினருக்கு லஞ்சம்?

புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் கறம்பக்குடி அதிமுக கட்சி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் திட்டியதைக் கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.

இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், கல்வீச்சு என காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையில் பெரும் பிரச்னை உருவானது.

அந்த பிரச்னையில் சிலர் தாக்குதல் நடத்தியதால் சிலருக்கு மண்டை உடைப்பு போன்ற பல்வேறு இரத்த காயங்களும் ஏற்பட்டன.

நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய பல ஊடக நிர்வாகங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
பணியாற்றுவோர் சென்று இருந்தனர்.

அப்போது பல முண்ணனி ஊடகங்களில் பணியாற்றுவோர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செய்தி வெளியிடாமல் இருக்க அமைச்சரின் பி.ஏ. அன்பானந்தத்திடம் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊடகத் துறையினர் லஞ்சம் பெற்றதால் பல முண்ணனி ஊடகங்களில் விஜயபாஸ்கருக்கு எதிரான செய்திகள் வெளியாகவில்லை என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தினரால் பரவலாகப் பேசிப்படுகிறது.

சில ஊடகங்களில் பணியாற்றுவோர் லஞ்சம் பெறாமல் மிக நேர்மையாகப் பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டுபவர்களால் கூறப்படுகிறது.

மேலும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தான அனைத்து செய்திகளையும், கீழே சொல்லப்படும் செய்திகளையும் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் பலர் ஊடகங்களில் பணியாற்றுவோரை செய்தி வெளியிடவும், வெளியிடாமல் இருக்கவும், லஞ்சம் கொடுத்து அவர்களது காரியத்தை சாதித்து விடுகின்றனர்.

சில ஊடகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் லஞ்சம் பெறாமல், லஞ்சம் கொடுப்பவர்களுக்குப் படியாமல் மிக நேர்மையாக பணியாற்றினாலும் அவர்களுக்கு மேல் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது ஊடகங்களின்
உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்டி அவர்களது காரியத்தை சாதித்து விடுகின்றனர்.

சோரம் போன பல ஊடகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என வாட்ஸ் ஆப்பில் செய்தியை பரவவிட்டுள்ளவர் கூறியுள்ளார்.