Home Blog Page 5971

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும்: அன்புமணி

images politics anbumani ramados - 2026
சென்னை:
ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், மற்றும் ஆறுமுகம் மேற்கொண்டுள்ள இம்முயற்சி சரியானது; பாராட்டத்தக்கது ஆகும்.

உலகில் வேகமாக அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தமிழை உலகின் பல நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கும், தமிழ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இவர்கள் போராடி அனுமதி பெற்றுள்ளனர். தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி  செலுத்த வேண்டும் என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதில் ஆறில் ஒரு பங்கை அதாவது சுமார் 7 கோடியை தாங்களே செலுத்துவதாக இவர்கள் முன்வந்துள்ளனர். மீதமுள்ள நிதியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நன்கொடையாக திரட்ட அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கு உதவி செய்ய வேண்டியது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய  கடமையாகும். ஆனால், இது தொடர்பாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.

 தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்  தொடர்ந்து குரல் கொடுத்தன. அதன்பயனாக தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதாகவோ, தமிழ் மொழியை மற்ற நாடுகளில் பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பல நூறு கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட போதிலும் அதனால் தமிழுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  தமிழ் இருக்கை அமைக்கப்பட்டால் தமிழுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக ‘யோகா’ கலை இந்தியாவில் தான் தோன்றியது. ஆனால், அதன் பல்வேறு சிறப்புகளை அறிவியல்பூர்வமாக வெளிக்கொண்டு வந்தது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தான். கவலை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை போக்கவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தவும் யோகா கலை உதவுகிறது என்பதை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தான் நிரூபித்தது. யோகா கலை உலகம் முழுவதும் பரவி இருப்பதற்கு இத்தகைய ஆராய்ச்சிகள் தான் காரணமாகும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டால் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகள் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பது உறுதி. தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் போதிலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை வெளிக்கொண்டு வரப்படாத தமிழின் சிறப்புகள் நிச்சயமாக வெளிக்கொண்டு வரப்படும் என்பதில் ஐயமில்லை. மேலும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களின்  குடும்பங்கள் தமிழ் படிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். இந்த  முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி  இயன்ற அளவுக்கு உதவி செய்ய முடிவு செய்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. தமிழ்த் தாய் சிலை அமைப்பது வரவேற்கப்பட வேண்டியது தான் என்றாலும், தமிழ்த் தாயை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்வதற்கான இந்த முயற்சி அதைவிட முக்கியம் ஆகும். எனவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல், சமஸ்கிருத மொழி குறித்த ஆராய்ச்சிக்கும், பிரச்சாரத்திற்கும் பெருமளவில் நிதி உதவி செய்யும் மத்திய அரசு அதைவிட மூத்த, இனிய மொழியான தமிழ் மொழியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு வகை செய்யும் இத்திட்டத்திற்கும் நிதி  வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்: ராமதாஸ்

images politics RAMADOSS pmk - 2026
சென்னை:

சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்திய முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். அமைச்சரின் தூண்டுதலால்  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் விஜயபாஸ்கருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுக்கள் எழுந்துள்ளன. உள்ளூரில் மக்கள் நலப் பணிகளை செய்வதில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள், கருப்பட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, கணேசன் ஆகியோர் தங்கள் பகுதியில் மருத்துவமனை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது இல்லத்தில் அனுமதி வாங்கி சந்தித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

அவர்களை வீட்டுக்குள் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘ எனக்கு எதிராக கொடி பிடிக்கிறீர்களா?  வலையர் (முத்தரையர்) சாதியை சேர்ந்த உங்களால் என்னை எதுவும் செய்யமுடியாது’’ என்பதில் தொடங்கி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பெண் என்றும் பார்க்காமல் இப்படி திட்டுவது சரியா எனக் கேட்ட போது, ஊராட்சி ஒன்றியத் தலைவர் கெங்கையம்மாள் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக காவல் நிலையத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள காவல்துறை  அதிகாரிகள் மறுத்து விட்டனர். மாறாக அமைச்சர் தூண்டுதலில் அவர்கள் மீண்டும் மிரட்டப்பட்டுள்ளனர்.

முத்தரையர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரைக் கண்டித்து புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் கூடுதலான முத்தரையர்கள் புதுக்கோட்டை நகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, மீமிசல், திருமயம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 20 மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி மோதல் அவர்களுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அ.தி.மு.க.வில் தமக்கு பிடிக்காதவர்களை அவர்களின் சமூகத்தின் பெயரைக் கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அமைச்சர் திட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை அதிமுக ஆதரிக்கிறதா என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.

அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அம்பேத்கர் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு

images tamilnadu ABKM PressMeet Chennai - 2026
சென்னை:

அம்பேத்கரின் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு ஆகியவற்றை வெகுவிமரிசையாகக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் எம்.எல்.ராஜா வெளியிட்ட அறிக்கை:

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத செயற்குழு கூட்டம் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் (தலைவர்) மற்றும் பொது செயலாளர் திரு.சுரேஷ் பையாஜி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து 400கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இரங்கல் தீர்மானம்:
நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து மறைந்த பலருக்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் சுவாமி தயானந்த சரஸ்வதி, மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமா, மற்றும் புல்லாங்குழ் இசைக் கலைஞர் டாக்டர் என்.ரமணி ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது 90 ஆண்டுகளைக் கடந்து 91 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களின் பேராதரவினைப் பெற்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயன் செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 10,500 ஷாகாக்கள் (தினசரிக் கூடுதல்கள்) அதிகரித்துள்ளன. நாட்டில் தற்போது நாடெங்கிலும் தற்போது 32,000 இடங்களில் மொத்தம் 50,400 ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடைபெற்று வருகிறது. மிலன் என அழைக்கப்படுகிற வாரக் கூடுதல்கள் 13,620 நடைபெற்று வருகின்றனர். 8000 சங்க மண்டலி என அழைக்கப்படுகிற மாதாந்திரக் கூடுதல்கள் நடைபெற்று வருகின்றன.

தினசரி சங்க ஷாகாவில் பங்கேர்ப்பவர்களில் 66% மாணவர்கள் ஆவார். சங்க தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர்களில் 91% 40 வயதுக்கும் குறைவானவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 கிராமங்களில் கிராம வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேவை மற்றும் கிராம முன்னேற்றப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வேலைகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன.

நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல். இணைந்து வேலை செய்திட முன்வருவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 4 வருடங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். வலைதளத்தின் வாயிலாக மாதந்தோறும் 1000 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து வந்தனர். ஆனால் தற்போது அது 8000 ஆக உயர்ந்துள்ளது.

60 சதவிகித சங்க ஷாக்காக்கள் கிராமப் புறங்களிலும் 40 சதவிகித ஷாக்காக்கள் நகர்ப் புறங்களிலும் நடைபெற்று வருகின்றன. நாட்டிலுள்ள 90 சதவிகித தாலுக்காவில் சங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.

நாடெங்கிலும் 53,000 க்கும் அதிகமான மண்டலகள் உள்ளன. (10 – 12 கிராமங்கள் அடங்கியது ஒரு மண்டல்) அதில் 50 சதவிகித மண்டல்களில் ஆர்.எஸ்.எஸ்.வேலை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மண்டல் பகுதிகளுக்கும் சங்க வேலை சென்றடைந்திட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, நீர் நிலைகளைப் பாதுகாத்து பராமரிப்பது, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது நாட்டின் மிக முக்கியமான ஒரு பணியாகும். எனவே வரும் காலங்களில் இம்மாதிர் நீராதாரப் பணிகளில் அதிக கவனம் கொடுத்து வேலை செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு துவங்கியுள்ள “ஸ்வச்ச பாரத்” திட்டம் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மக்களும் மிகுந்த பலனைத் தரும் அத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற சங்க ஸ்வயம்சேவகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கடந்த ஆண்டு நாகபுரி விஜயதசமி விழா உரையில் ‘கிராமங்கள் மற்றும் நகரங்களில் அனைத்து ஜாதியினருக்கும் ஒரு பொது மாயானம்தான் இருக்க வேண்டும். கோவில்களில் எவ்வித தடையுமின்றி அனைத்து ஜாதியினரும் அனுமதிக்கப்பட வேண்டும். ஊரில் உள்ள நீர்நிலைகளில் அனைத்து ஜாதியினரும் பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். சமுதாயத்தில் சமத்துவம் நிலவிட பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்றாவது தலைவராக இருந்த பாலாசஹெப் தேவரஸ் அவர்களின் நூற்றாண்டு, பாபா சாஹேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 125 பிறந்த ஆண்டு, காஷ்மீரில் பிறந்த பல்கலை வித்தகர் அபிநவ குப்தாவின், 1000வது ஆண்டு விழா மற்றும் ஏகாத்மத மாணவ தர்ஷன் கோட்பாட்டினை வழங்கிய தீனதயால் உபாத்யாய அவர்களின் 100 வது ஆண்டு விழாக்களை நாடெங்கிலும் கொண்டாடிட ஆர்.எஸ்.எஸ். செயற்குழு முடிவெடுத்துள்ளது. அடுத்த வருடம் சமுதாய சமத்துவத்தை பக்தி மார்க்கத்தின் வாயிலாக மக்களிடையே பரப்பிய ஸ்ரீராமானுஜரின் 1000வது ஆண்டினை வெகு விமர்சையாகக் கொண்டாடிட அதற்காக திட்டமிடவும் இச்செயற்குழு தீர்மானித்துள்ளது.

உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசனும் இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன் குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசம்!

 
 
தில் இருந்தால் நேரடியாக பேசனும்.இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். என ஹசீனா சையத்துக்கு எதிராய்நடிகை குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசமாய் திருப்பூரில் காங்கிரஸ் மாநாட்டில் பேசியுள்ளார்
 
 
காங்கிரஸ் கட்சி நடிகைகளை நம்பி இல்லை என கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்துக்கு பதிலளித்த குஷ்பு தங்கபாலு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை என சில நாட்களுக்குமுன் கருத்து கூறியிருந்தார்.
 
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் குஷ்புவின் அந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
மேலும் அவர் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும் தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது” என அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சையத் குஷ்புவின் அந்த கருத்துக்கு திருப்பூரில் இன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இதற்கு பதிலளித்தார் குஷ்பு.
 
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை. நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை.
 
ஆனால் ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார். உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும் பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன் என்றார் கடும் கோபத்துடன் ஆவேசமாய் ஆவேசமாக.
 
மேலும் தமிழக காங்கிரஸ் கடந்த ஓராண்டில் ஓஹோ என வளர்ந்து வருகிறது. சென்னையில் நான் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். சத்யமூர்த்தி பவன்எனக்கு எங்கே இருக்கிறது என தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாகதான் சத்யமூர்த்தி பவன் எங்கு இருக்கிறது என தெரிகிறது. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமே இப்போதுதான் தெரிகிறது. சத்யமுர்த்தி பவன் இந்த ஒராண்டாக தான் செயல்படுகிறது. இப்போது தான் தொண்டர்களும் வந்து செல்கிறார்கள் என்றும் குஷ்பு பேசினார்.

 

இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெறவிருக்கும் தமிழக திருநங்கை

 
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார்.
 
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த தமிழகத்தை சேர்ந்த திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர் அவர்பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
 
சென்னை உயர் நீதிமன்றம் பிரித்திகா யாஷினி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. ஆனால் திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது.
 
அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
 
மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகா யாஷினியை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம்.
 
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்தார் பிரத்திகா யாசினி . வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கூறியது நீதிமன்றம்.
 
அதனால் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையதால் பிரத்திகா யாசினி எழுத்துத்தேர்வுக்கு அவர் அனுமதிக்கப்பட்டு
தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
 
மேலும் எறி பந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக தமிழக அரசு அறிவித்து அவரை நிராகரித்தது.
 
அந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு பிரத்திகா யாசினி நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு 05-11-2015 இன்று விசாரணைக்கு வந்தது. ‘
 
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர் என்றும் அவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி வழங்க வேண்டும். மேலும் அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.
 
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார். தமிழக திருநங்கை பிரித்திகா யாஷினி. ஏற்கனவே காவல்துறை பணியில் இந்திய அளவில் 2 திருநங்கைகள் காவலராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ராமர் பிறந்தது அயோத்தியில் இல்லை பாகிஸ்தானில்தான் : அப்துல் ரஹீம் குரேஷி்

 
 
 
அகில இந்திய முஸ்லிம் சட்டவாரிய துணை பொதுச்செயலரும் செய்தித் தொடர்பாளருமான அப்துல் ரஹீம் குரேஷி் இந்து கடவுளான ராமர் பிறந்தது பாகிஸ்தானில்தான்… அயோத்தியில் இல்லை என்று தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருப்பதால் புதிய தற்போது சர்ச்சை உருவாகி யுள்ளது.
 
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அகில இந்திய முஸ்லிம் சட்டவாரியமும் ஒருதரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அப்துல் ரஹீம் குரேஷி, “Facts of Ayodhya Episode (Myth of Ram Janmabhoomi)” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் எழுதப்பட்டுள்ளதாவது: வேதங்கள், புராணங்களில் கங்கை நதிக் கரையில் ராமர் பிறந்ததாக குறிப்பிடப்படவில்லை.
 
ராமரின் தந்தை தசரதன் ஆட்சி செய்த சப்த சிந்து என்பது ஹரியானா, பஞ்சாப்பில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக கிழக்கு ஆப்கானிஸ்தான் வரை விரிந்து கிடக்கும் பகுதி. இந்திய தொல்லியல் ஆய்வறிஞர் ஜாஸு ராமின் கருத்துப் படி, ராமர் பிறந்த இடம் பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் என்ற மாவட்டத்தில்தான். தற்போது இந்த நகரம் ரஹ்மான் தேரி என்று அழைக்கப்படுகிறது. முன்னர் இது ராம் தேரி என அழைக்கப்பட்டது.
 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கட்டுக் கதைகள் கிளப்பிவிடப்பட்டன. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக இந்த கதைகள் சொல்லப்பட்டன. இந்துக்களின் ‘யுகங்கள்” அடிப்படையில் ராமர் பிறந்தது என்பது 24 அல்லது 28வது திரேதா யுகத்தின் இறுதியில் எனப்படுகிறது. அதாவது சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்ததாக இது குறிப்பிடப்படுகிறது. உலகில் எங்குமே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
சில நூல்களில் ராமர் கி.மு 5561 அல்லது கி.மு.7323 ஆகிய ஆண்டுகளில் பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கு எந்த ஒரு ஆதாரமுமே இல்லை. கி.பி. 1574ஆம் ஆண்டு துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில்தான் தற்போதைய அயோத்தியில் ராமர் பிறந்ததாக குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
 
ராமர் பிறந்தது அயோத்தியில் இல்லை பாகிஸ்தானில்தான் என அப்துல் ரஹீம் குரேஷி் எழுதியுள்ளதால் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.
 

 

நமக்கு நாமமே : ஸ்டாலினை கிண்டல் செய்த பிரேமலதா

images tamilnadu premalatha - 2026

நாமக்கல்:

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி வித்தை காட்டும் ஒருவர் “நமக்கு நாமமே” என்பதை உணர வேண்டும் என்று பிரேமலதா, திமுக., பொருளாளர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்து பேசினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“நான் யாரையும் குறை கூறி ஓட்டு கேட்கவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக தேமுதிக.,வுக்கு வாக்களிக்கச் சொல்கிறேன். தமிழகத்தில் ஒருவர் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கிறேன் என்று சைக்கிள் ஓட்டி வித்தை காட்டுகிறார். ஆனால் நமக்கு நாமமே என்பதை அவர் உணர வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது டைரியில் போலிஸ் துணை சூப்பிரண்டு என்றால் டம்மி என்று எழுதி வைத்திருக்கிறார். இதிலிருந்தே அவர் எந்தளவுக்கு மேல்அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலை எனில், சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று மக்கள் யோசிக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின் மூலம் ரூ.5800 கோடி சுருட்டல் : மு.க.ஸ்டாலின்

 
 
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தைராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் மேற்கொண்டு மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடிய போது அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின் மூலம் ரூ.5800 கோடி சுருட்டப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
வாலாஜாவில் மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார். முதலில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளை, அதை தடுக்கும் வழிகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர்.
 
அதற்கு பதிலளித்து ஸ்டாலின் அவர்களிடம் கூறியதாவது:
 
மணல் கொள்ளையில் ஈடுபடும் குவாரிகளை எதிர்த்தும், கொள்ளையை எதிர்த்து போராடி வரும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். கரூர் மற்றும் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே ஆறுகளை கொள்ளையடித்து வருகின்றனர்.
 
கடந்த நான்கரை ஆண்டுகாலமாக மக்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டு வருகிறது, எந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்து வருகின்றீர்கள் என்று உங்களுக்கே தெரியும். உங்களுடைய கருத்துக்களையும், மனுக்களையும் அளித்துள்ளீர்கள். அந்த மனுக்களை ஆய்வு செய்தும், சிந்தித்தும், வரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து அறிவிக்கப்படும்.
 
 
அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை நீங்களே தெரிவித்துள்ளீர்கள். தாம்பரம், பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டம், பூந்தமல்லி கூட்டு குடிநீர் திட்டம் என 15 திட்டங்கள் பாதியளவில் நிறைவு பெற்று, மீதி பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. மணல் கொள்ளையால் 1.25 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. 300 ஏரிகள் வறண்டுள்ளன. மணல் அள்ளுவதால் ரூ.5,825 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கு வெறும் ₹76 கோடி மட்டுமே வருகிறது. மற்ற பணத்தை எல்லாம் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மணல் கடத்தலை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் இயற்கை வளங்கள் மற்றும் ஆற்று மணல் கொள்ளைகளை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு அமைக்கப்படும். அதில் சமூக சேவகர், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இணைந்து மணல் கொள்ளை தடுக்கப்படும்.
 
மேலும் மணல் வருமானத்தில் ஒரு ைபசா கூட வேறு எங்கும் செல்லாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மணல் கடத்தலை தடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படும். மணல் தடுப்பதில் எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் ஒழிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
 
 
 
 
 
.

ஃபோர்ப்ஸின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர் பட்டியல்: மோடிக்கு 9 வது இடம்

images india pm modi - 2026

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 15 வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று பிரபல பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பொருளாதார இதழ் வெளியிட்டது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடம் பிடித்திருக்கிறார். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2 வது இடமும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3 வது இடமும் பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் மோடி 15 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பத்து இடங்களில் போப் ப்ரான்சிஸ் 4 வது இடத்திலும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் 5 வது இடமும் பிடித்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜ் ஆகியோர் 6 வது மற்றும் 10 வது இடங்களில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

கருணாநிதியை கடும் காட்டமாக தேடிவர சொல்லும் விஜயாகாந்த்

 
நீங்கள் ஒருமுறை எங்களை தேடிவந்தால் என்ன? நாங்கள்தான் உங்களைத் தேடிவர வேண்டுமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுகவிற்கு கடும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
 
பரமத்தி வேலூர் அருகே தேமுதிக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் “இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
 
இந்த கூட்டத்தை பணம் கொடுத்து ஏற்பாடு செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அதற்கு நான் அவரிடம் “அப்படி கூட்டியிருந்தால் நாங்கள் ஆட்சியை பிடித்திருப்போம்” என்று கூறினேன். எப்பாடு பட்டாவது அதிமுக மற்றும் திமுக கட்சிகளை இந்த முறை ஆட்சியில் அமர விட மாட்டேன்” என்று பேசினார்.
 
மேலும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கடைசி நிமிடத்தில் மதிமுகவும் தேமுதிகவும் தேர்தல் நெருங்கும் மாறினாலும் மாறும் என்று கூறியிருக்கிறார். எல்லா கட்சிகளும் உங்களை தேடி வர வேண்டுமா? நீங்கதான் வாருங்களேன்” என்று கருணாநிதி பேச்சுக்கு கடும் காட்டமாக பதிலடி கொடுக்கும் வகையில் விஜயகாந்த் பேசினார்.
 
தேமுதிக, திமுக கூட்டணியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் விஜயகாந்தின் பேச்சு அரசியல் விமரச்சகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.