Home Blog Page 5990

லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் கோரிக்கை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அவர், துறைமுக ஊழியர்களோடு சேர்ந்து சில இடங்களை சுத்தம் செய்தார். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழியை ஏற்று அதனை கடைபிடிக்க வேண்டும். நமக்கு மகாத்மா காந்தி வழிகாட்டியாக உள்ளார். இந்தியா தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பிரதமர் தூய்மை இந்தியா திட்டதை தொடங்கி வைத்து உள்ளார். அதனை 125 கோடி மக்களும் கையில் எடுத்து செய்ய வேண்டும்’’ என்று கூறினார் .
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடியை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக இலங்கை பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண மீனவர்கள், அரசுக்கு அவகாசம் தர வேண்டும். அதுவரை மீனவர்கள் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும். தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க தயாராக உள்ளோம். இலங்கை அரசு முடிவை தெளிவாக கூறவேண்டும்.

நாடு முழுவதும் சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு நிதி ஆதாரம் அவசியம். இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மக்கள் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். கட்டணத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை மாற்றம் செய்ய ஆய்வு செய்து வருகிறோம், அதற்கு அவகாசம் தேவை. எனவே லாரி உரிமையாளர்கள் மக்கள் நலனை கருதி போராட்டத்தை கைவிட வேண்டும்.

கடற்கரை கிராமங்களை இணைத்து 200 சிறிய துறைமுகங்கள், பெரிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சில சிறிய துறைமுகங்கள் பெருந்துறைமுகங்களாக மாறுகின்றன. அதில் குளச்சல் துறைமுகமும் ஒன்றாகும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

- 2026

- 2026
- 2026

- 2026

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா… அது நல்லாருக்குமா?

காந்தி ஜெயந்தி என்றதும்… எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு வந்தனர்.

காந்திஜியின் உதவியாளராக இருந்த திரு.கல்யாணம் 14 வருடங்களுக்கு முன்… ஒரு முறை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்துக்கு வருமாறு சொல்லியிருந்தார். சில அரிய புகைப்படங்கள் காட்டுகிறேன் என்றார். போய்ப் பார்த்தேன். நான் சென்ற அந்த நேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட்டில் வசிக்கும் திரு.கல்யாணம், கீழே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளை விளக்குமாறு கொண்டு பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே அவரிடம் காரணம் கேட்டேன்… “காந்திஜி கட்டளை” என்றார்.

எல்லா வசதிகளும் இருந்தும், உடன் அதிகம் பேர் இருந்தும் தனக்கான வேலையை தான் பார்ப்பது, தன் இருக்குமிடத்தை தானே தூய்மைப் படுத்துவது… இப்படியாக அந்தப் பேச்சு சென்றது. 

(நானும் கூடத்தான். எனக்கான வேலைகளை நானே செய்து கொள்கிறேன். சமைப்பதும், துவைப்பதும், தூய்மைப் படுத்துவதும் என… [ அட…. இது வேறு வழியில்லாமல்… காலத்தின் கட்டாயம்ங்க… அதையெல்லாம் இப்படித்தான் காந்தி ரேஞ்சுக்கு நாங்களும்தான்னு விளம்பரப்படுத்திக்கணும்… இல்லைன்னா எந்தப் பய நம்ம மதிப்பான்? எல்லாத்துக்கும் ஒரு வெளம்பரம் தேவைப்படுது இல்ல..?!! ]

ஆக.. அப்படியாக… அந்த வகையில்… நாமும் காந்தி வழியில் நடக்கிறோம்; அதை இந்த காந்தி ஜெயந்தியில் ஊருக்கு நல்லது சொல்வோம்னும், உண்மை தெரிந்தது சொல்வோம்னும் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டு… ஒரு புத்தகம் குறித்த தகவலையும் சொல்லிவிடலாம் என்று தோன்றியதன் பேரில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். )

மயிலாப்பூரில் அமைந்த – வயதுக்கு மீறிய – நட்புகளில் ஒருவர் நாடகப்பணி அருணகிரி. ம.பொ.சி ரேஞ்சுக்கு வெளுத்த முறுக்கிய மீசையுடன் வருவார். ஒல்லியான உருவம். நாடகங்கள் பல எழுதியவர். சென்னை வானொலியில் வைத்து எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால்… சென்னை வானொலி நிலையத்தில் மாதம் ஐந்தாறு முறை சென்றபோதே பல பேருடைய அறிமுகம் கிடைத்தது எனலாம். நாடகக் கலைக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அருணகிரி ஐயாவுக்கு நாடகப்பணி அருணகிரி என்றே பெயரும் சேர்ந்து அமைந்துவிட்டது. நாடகம், திரைக்கலை, நாடகக் கலைக்காக பத்திரிகைகளை நடத்தியவர்.

ஒரு முறை “ஊருக்கு ஒரு மனிதர்” என்ற நாடகத்தின் அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அடியேன் மஞ்சரி இதழாசிரியர் பணியில். 2005 ல் ! பத்து வருடங்கள் ஓடி விட்டன. இப்போதும் பசுமையாக நினைவில் உள்ள சம்பவம்.  இந்த நாடகத்தை 1998ல் எழுதி மேடை ஏற்றினாராம். அந்த நாடக நூலுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டும் என்றார். அடடா.. சார். நான் முப்பது வயதைக் கடக்காத ஒரு சிறு இளைஞன். என்னிடம் போய்…. என்று இழுத்தேன். வற்புறுத்தி பிரதியைக் கொடுத்து விட்டு சொன்னார்… இந்த நாடகம் இளைஞர்களிடம் செல்ல வேண்டும். நீங்கள் தேசியம் தெய்வீகம் இரண்டிலும் ஆழமான பற்று கொண்டவர். மேலும் அணிந்துரை என்று யாரிடம் கொடுத்தாலும், ஓரிரு பக்கங்களுக்கு மேல் எழுதித் தரமாட்டார்கள். நீங்கள் இதனை முழுதாகப் படித்து, எனக்கு ஐந்தாறு பக்கம் வருவது போல்… பெரிதாக எழுதித் தரவேண்டும்… என்று அன்புக் கட்டளை  இட்டார்.

அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். காந்தியவாதியாக ஒருவர் எப்படி ஊரைத் திருத்துகிறார்; இளைஞர்கள் துணையுடன் … என்ற வகையில் அமைந்த கதை. அதற்கு அடியேன் எழுதிய அணிந்துரையை  விருப்பமுள்ளவர்கள் படித்து அனுபவிக்கலாம். அவற்றின் ஒளிப்பட நகல் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது

சீக்கியர்களுக்கு பணியிடங்களில் தலைப்பாகை அணிய இங்கிலாந்தில் கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது 26 வருடங்களுக்கு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியாளர்கள் மட்டும் ஹெல்மட் அணிவதில் இருந்து விலக்கு அளித்து “டர்பன்” என கூறப்படும் தலைப்பாகை அணிந்து கொள்ளலாம். ஆனால் பிற துறைகளைச் சேர்ந்த சீக்கியர்கள், ஹெல்மட் கட்டாயம் அணி வேண்டும் என்றும், அதற்கு மாறாக தலைப்பாகையை அணிந்தால், நடவடிக்கை எடுக்கவும் இங்கிலாந்தின் முந்தைய சட்டம் வகை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீக்கியர்கள் பல ஆண்டு காலமாக போராடி வந்தனர்.

இந்நிலையில் அவர்களது கோரிக்கையை தற்போது ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து அரசு தேவையான சட்ட திருத்தம் செய்து, பெரும்பாலான பணியிடங்களிலும், துறைகளிலும் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளது.

முன்னோர்களின் ஆசியை பெற உகந்த நாட்கள்

  உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடையவும் மிண்டும் பிறப்பெடுத்தோ அல்லது ஆவியாகவோ அலையாமல் தெய்வத்தை அடைய வேண்டி தர்ப்பண வழிபாடுகளை, மஹாளய பக்ஷ சிரார்த்தங்கள் போன்றவற்றை செய்ய வேண்டிய முக்கியமான நாட்கள் மஹாளய பக்ஷ நாட்கள் ஆகும்.

ஒரு வருடத்தில் நாம் ஆற்ற வேண்டிய பித்ரு பூஜைகளை முறையாக செய்ய இயலவில்லை எனில் நாம் படும் மனவருத்தம் கணக்கற்றது. அப்படிபட்ட ஒரு நிலைமை ஏற்பட்டு கர்ம காரியங்களை முறையாக செய்ய இயலாமல் போனால் இந்த 16 நாட்களில் நாம் செய்யும் தினசரி தர்ப்பணம், தீர்த்த நீராடல், படையல்,அன்னதானம் போன்றவற்றை செய்து பித்ருக்களின் ஆசியை நாம் பெறமுடியும்.

எவ்வித துன்பமும் இல்லாத வாழ்வு அமையவும், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களும் மஹாளய பக்ஷ தர்ப்பண பூஜைகளை கட்டயமாக மேற்கொள்ள வேண்டும். மஹாளய பக்ஷ திதிகளுக்கு உரித்தான பலாபலன்கள் மகத்தானவை.

இந்த மஹாளய பக்ஷ திதிகள் பாத்ரபத மாதத்தின் பௌர்ணமி ( பாத்ரபத மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஆவணியில் சில நாட்களும் புரட்சியில் சில நாட்களும் ) தினத்தில் துவங்கி தொடர்ந்து வரும் அமாவாசை வரையுள்ள காலமாகும்.ஒவ்வொரு வருடமும் மஹாளய அமாவாசை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் தான் வரும்.அன்றைய தினத்தில் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு பித்ரு பூஜைகளை, தர்ப்பணாதிகளை செய்து பயன் பெறலாம்

ஒருவர் தம் முன்னோர்களுக்கு வருடத்தில் 96 முறை பித்ரு பூஜைகளையும் தர்ப்பண காரியங்களையும் செய்ய வேண்டும். இதில் இந்த மஹாளய பக்ஷ நாட்கள் மிக முக்கியமான நாட்களாகும்.

மஹாளய பக்ஷத்தில் நாம் கொடுக்கும் திலதீர்த்தம்
(எள் தீர்த்தம்) நம் முன்னோர்கள் மட்டுமல்லாமல் பித்ரு லோகத்தில் உள்ள அனைத்து பித்ருக்களுக்கும்
(மனிதன் அல்லாது மற்ற ஜீவராசிகளின் பித்ருக்களுக்கும்) உணவாக அமைகிறது. ஆகவே மிகுந்த பயனை ஏற்படுத்தக் கூடியது.

ஒருவரின் வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் மகிழ்ச்சி ஆனந்தம் இல்லை என்றால் அவரின் முன்னோர்கள் திருப்திப்படவில்லை என்று அர்த்தம். ஆகவே முன்னோர் கடனை ஆற்றுவதே நம் முதற்கடன்.

இந்த மஹாளய பக்ஷ நாட்கள் அனைத்திலும் வழிபட வாய்ப்பு இல்லை என்றாலும் மஹாளய அமாவாசை கலத்தில் மட்டுமாவது முன்னோர்களை வழிபட்டு பயன் பயன் பெறலாம் என்பது ஐதீகம் .

‘கத்துக்குட்டி’ தடைகளை வெல்லும்: வைகோ

கத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது இல்லை. திரைப்படங்களிலும் நாட்டம் இல்லை. தமிழ் ஈழத்தின் துயரைச் சித்தரிக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தையும், தாயகம் வரும் அகதிகளின் துயரத்தைச் சித்தரிக்கும் ராவண தேசம் திரைப்படத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் புதிய பிரதி என்பதால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தையும் கண்டேன்.

ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி நிருபராக இயங்கிய தம்பி சரவணன் 2009 ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் நெருப்பில் கருகிக் கிடந்போது என்னுடனே இருந்ததால் நட்பு கொண்டேன். தான் இயக்கிய கத்துக்குட்டிதிரைப்படத்தை முன் திரையிடலில் பார்க்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி அழைத்தபோது, மூன்று முறை நான் தேதி கொடுத்தும் தவிர்க்க இயலாத நிகழ்வுகளால் அத்திரையிடல் இரத்தாயிற்று. அதுகுறித்து அவர் என் மீது வருத்தம் கொள்ளாமல், மீண்டும் வலியுறுத்தியதால் முன்திரையிடலில் கத்துக்குட்டி திரைப்படம் பார்த்தேன்; மெய்சிலிர்த்துப்போனேன். இன்றைய திரைப்படங்களால் தமிழ்ச் சமூகம் சீரழிகிறதே! என்று நொந்துபோன என் மனதுக்கு அம்மனப் புண்ணை ஆற்றும் மருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.

உழுது பயிர் விளைவித்து உலகோரை வாழ வைக்கும் உழவர் பெருமக்கள் தாங்க முடியாத துன்பத்திற்கும், அல்லலுக்கும் ஆளாகி நலிந்து நொறுங்கிக் கிடக்கின்றனர். அவர்களது வாழ்வைச் சூறையாடும் கார்ப்ரேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வாட்டி வதைக்கும் அரசாங்கங்கள், சுற்றுச் சூழலை நாசமாக்குவது, குறிப்பாக காவிரி தீர மக்களின் எதிர்காலத்தை நாசமாக்க வளைத்துவிட்ட மீத்தேன் எரிவாயுத் திட்டம் இவற்றை எல்லாம் எதிர்த்து மக்கள் போர்க்கொடி உயர்த்தும் உணர்வினை கத்துக்குட்டி திரைப்படம் பிரமிப்புடன் ஏற்படுத்துகிறது.

இத்திரைப்படத்தில் இரத்தம் கொட்டும் வன்முறைக் காட்சிகள் இல்லை; ரெட்டை அர்த்த ஆபாச பேச்சுகள் இல்லை; காமக் களியாட்டங்கள் இல்லை; மது அருந்தும் காட்சிகளைக் கொண்டே மதுவின் தீமையைச் சித்தரிக்கிறது.

பசுமை குலுங்கும் செந்நெல் வயல்கள், நெஞ்சை ஈர்க்கும் கிராமத்து வாழ்க்கை, விவசாய நிலங்களை அபகரிக்கும் ஆபத்து அனைத்துமே உள்ளத்தைக் கவர்கின்றன. மீத்தேன் எரிவாயுவை எதிர்த்து என் போன்றவர்கள் ஆயிரம் மேடைகளில் பேசுவதால் ஏற்படும் தாக்கத்தை இந்த ஓர் கத்துக்குட்டி திரைப்படம் அற்புதமாக ஏற்படுத்துகிறது. இத்திரைப்படத்தை அரசியல் தலைவர்களும், கலை உலக படைப்புப் பிரம்மாக்களும் காண வேண்டும் என விரும்பி, செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நான்கு பிரேம் முன்திரையிடல் அரங்கத்தில் நானே திரையிட ஏற்பாடு செய்தேன். இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களும், படைப்புப் பிரம்மாவாக நான் மதிக்கும் பாரதிராஜா அவர்களும் கத்துக்குட்டி திரைப்படம் கண்டார்கள்; பாராட்டிப் போற்றினார்கள்.

அக்டோபர் 1 ஆம் தேதி கத்துக்குட்டி திரைப்படம் தமிழகம் எங்கும் திரையிடப்படும் என்ற விளம்பரச் சுவரொட்டிகளைக் கண்டு மகிழ்ந்தேன். ஆனால், ஒன்றாம் தேதி காலையில் தொலைக்காட்சிகளில் கத்துக்குட்டி திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தடை! என்ற செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இயக்குநர் சரவணனிடம் விசாரித்தபோது, முதல் நாள் வரையிலும் நேசமாகப் பேசிவந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் உடனடியாக குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் என்று முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடை ஆணை பெற்றுவிட்டார். ஏன் என்றே புரியவில்லை என்றார். நீதிமன்றத்தில் படம் திரையிடப்படுவதற்கு முதல் நாள் வழக்குத் தொடுத்து அன்றே தடை விதிப்பது பெரும்பாலும் நடைபெறுவது இல்லை.

தயாரிப்பாளரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. பணத்தைச் செலுத்துவதற்கு தவணை நிபந்தனை நீதிமன்றம் விதித்திருக்கலாம். நீதிமன்றத்தை நான் குறைகூறுவது முறையல்ல. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நீதி தேவதையைப் பற்றி எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தை திரையிட திரையரங்கள் கிடைப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும்கூட கத்துக்குட்டி எதிர் நீச்சல் போட்டு வெல்வான் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

- 2026

- 2026
- 2026

- 2026

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா… அது நல்லாருக்குமா?

காந்தி ஜெயந்தி என்றதும்… எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு வந்தனர்.

காந்திஜியின் உதவியாளராக இருந்த திரு.கல்யாணம் 14 வருடங்களுக்கு முன்… ஒரு முறை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்துக்கு வருமாறு சொல்லியிருந்தார். சில அரிய புகைப்படங்கள் காட்டுகிறேன் என்றார். போய்ப் பார்த்தேன். நான் சென்ற அந்த நேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட்டில் வசிக்கும் திரு.கல்யாணம், கீழே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளை விளக்குமாறு கொண்டு பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே அவரிடம் காரணம் கேட்டேன்… “காந்திஜி கட்டளை” என்றார்.

எல்லா வசதிகளும் இருந்தும், உடன் அதிகம் பேர் இருந்தும் தனக்கான வேலையை தான் பார்ப்பது, தன் இருக்குமிடத்தை தானே தூய்மைப் படுத்துவது… இப்படியாக அந்தப் பேச்சு சென்றது. 

(நானும் கூடத்தான். எனக்கான வேலைகளை நானே செய்து கொள்கிறேன். சமைப்பதும், துவைப்பதும், தூய்மைப் படுத்துவதும் என… [ அட…. இது வேறு வழியில்லாமல்… காலத்தின் கட்டாயம்ங்க… அதையெல்லாம் இப்படித்தான் காந்தி ரேஞ்சுக்கு நாங்களும்தான்னு விளம்பரப்படுத்திக்கணும்… இல்லைன்னா எந்தப் பய நம்ம மதிப்பான்? எல்லாத்துக்கும் ஒரு வெளம்பரம் தேவைப்படுது இல்ல..?!! ]

ஆக.. அப்படியாக… அந்த வகையில்… நாமும் காந்தி வழியில் நடக்கிறோம்; அதை இந்த காந்தி ஜெயந்தியில் ஊருக்கு நல்லது சொல்வோம்னும், உண்மை தெரிந்தது சொல்வோம்னும் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டு… ஒரு புத்தகம் குறித்த தகவலையும் சொல்லிவிடலாம் என்று தோன்றியதன் பேரில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். )

மயிலாப்பூரில் அமைந்த – வயதுக்கு மீறிய – நட்புகளில் ஒருவர் நாடகப்பணி அருணகிரி. ம.பொ.சி ரேஞ்சுக்கு வெளுத்த முறுக்கிய மீசையுடன் வருவார். ஒல்லியான உருவம். நாடகங்கள் பல எழுதியவர். சென்னை வானொலியில் வைத்து எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால்… சென்னை வானொலி நிலையத்தில் மாதம் ஐந்தாறு முறை சென்றபோதே பல பேருடைய அறிமுகம் கிடைத்தது எனலாம். நாடகக் கலைக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அருணகிரி ஐயாவுக்கு நாடகப்பணி அருணகிரி என்றே பெயரும் சேர்ந்து அமைந்துவிட்டது. நாடகம், திரைக்கலை, நாடகக் கலைக்காக பத்திரிகைகளை நடத்தியவர்.

ஒரு முறை “ஊருக்கு ஒரு மனிதர்” என்ற நாடகத்தின் அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அடியேன் மஞ்சரி இதழாசிரியர் பணியில். 2005 ல் ! பத்து வருடங்கள் ஓடி விட்டன. இப்போதும் பசுமையாக நினைவில் உள்ள சம்பவம்.  இந்த நாடகத்தை 1998ல் எழுதி மேடை ஏற்றினாராம். அந்த நாடக நூலுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டும் என்றார். அடடா.. சார். நான் முப்பது வயதைக் கடக்காத ஒரு சிறு இளைஞன். என்னிடம் போய்…. என்று இழுத்தேன். வற்புறுத்தி பிரதியைக் கொடுத்து விட்டு சொன்னார்… இந்த நாடகம் இளைஞர்களிடம் செல்ல வேண்டும். நீங்கள் தேசியம் தெய்வீகம் இரண்டிலும் ஆழமான பற்று கொண்டவர். மேலும் அணிந்துரை என்று யாரிடம் கொடுத்தாலும், ஓரிரு பக்கங்களுக்கு மேல் எழுதித் தரமாட்டார்கள். நீங்கள் இதனை முழுதாகப் படித்து, எனக்கு ஐந்தாறு பக்கம் வருவது போல்… பெரிதாக எழுதித் தரவேண்டும்… என்று அன்புக் கட்டளை  இட்டார்.

அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். காந்தியவாதியாக ஒருவர் எப்படி ஊரைத் திருத்துகிறார்; இளைஞர்கள் துணையுடன் … என்ற வகையில் அமைந்த கதை. அதற்கு அடியேன் எழுதிய அணிந்துரையை  விருப்பமுள்ளவர்கள் படித்து அனுபவிக்கலாம். அவற்றின் ஒளிப்பட நகல் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கு பிரச்சாரம்

கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம்  பகுதிளில் காங் கட்சி சார்பில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை  முன்னிட்டு மதுவிலக்கு தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.
   கீழப்பாவூர்  நகர, வட்டார காங் கட்சி சார்பில்  மகாத்மாகாந்தி பிறந்த நாள் விழா தீவிர மதுவிலக்கு பிரச்சார நாள்  விழாவாக கொண்டாடப்பட்டது.   கீழப்பாவூரரில்  மகாத்மாகாந்தி, காமராஜ் உருவ சிலைக்கு நெல்லை மேற்கு மாவட்ட காங் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர் . மற்றும் பாவூர் சத்திரத்தில் காமராஜர்  சிலைக்கு காங் கட்சியினர்  திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர் . கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர் வலமாக சென்று பொதுமக்களிடம் ,  மது ஒழிப்பு துண்டு பிரசுரங்களை  வழங்கி மதுவிலக்கு குறித்த  தெரு முனைப் பிரச்சாரம் செய்தனர்    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்வன் ,மாவட்ட  செயலாளர்கள் பொன்கணேசன், ஆறுமுகப்பாண்டி, , மாநில கலை இலக்கிய அணி தலைவர்  ஆலடி சங்கரையா, கீழப்பாவூர்  நகர செயலாளர்  குமரேசன், வட்டார காங் தலைவர்கள் பால்துரை, தங்கரத்தினம், உட்பட பலர்கலந்துகொண்டனர்
இதுகுறித்து மேற்கு மாவட்ட காங் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் காங் கட்சி சார்பில் தீவிர மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய தமிழக காங் தலைவர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார் இதனை தொடர்நது நெல்லை மாவட்டத்தில் காங் கட்சி சார்பில் அனைத்து கிராமங்களிலும் தீவிர மதுவிலக்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது என்றார்
 
ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை நாடக விமர்சனம்!

2.bp.blogspot.com SmdphI2gZUc Vg5kbQp4IHI AAAAAAAAKfo VHeg8zA2ot4 s640 nadakappani1 - 2026

4.bp.blogspot.com - 2026
3.bp.blogspot.com rWiq8qilGJY Vg5kdK4iGiI AAAAAAAAKgA 6VL6UBhFMvQ s640 nadakappani3 - 2026

3.bp.blogspot.com - 2026

காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா… அது நல்லாருக்குமா?

காந்தி ஜெயந்தி என்றதும்… எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு வந்தனர்.

காந்திஜியின் உதவியாளராக இருந்த திரு.கல்யாணம் 14 வருடங்களுக்கு முன்… ஒரு முறை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்துக்கு வருமாறு சொல்லியிருந்தார். சில அரிய புகைப்படங்கள் காட்டுகிறேன் என்றார். போய்ப் பார்த்தேன். நான் சென்ற அந்த நேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட்டில் வசிக்கும் திரு.கல்யாணம், கீழே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளை விளக்குமாறு கொண்டு பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே அவரிடம் காரணம் கேட்டேன்… “காந்திஜி கட்டளை” என்றார்.

எல்லா வசதிகளும் இருந்தும், உடன் அதிகம் பேர் இருந்தும் தனக்கான வேலையை தான் பார்ப்பது, தன் இருக்குமிடத்தை தானே தூய்மைப் படுத்துவது… இப்படியாக அந்தப் பேச்சு சென்றது. 

(நானும் கூடத்தான். எனக்கான வேலைகளை நானே செய்து கொள்கிறேன். சமைப்பதும், துவைப்பதும், தூய்மைப் படுத்துவதும் என… [ அட…. இது வேறு வழியில்லாமல்… காலத்தின் கட்டாயம்ங்க… அதையெல்லாம் இப்படித்தான் காந்தி ரேஞ்சுக்கு நாங்களும்தான்னு விளம்பரப்படுத்திக்கணும்… இல்லைன்னா எந்தப் பய நம்ம மதிப்பான்? எல்லாத்துக்கும் ஒரு வெளம்பரம் தேவைப்படுது இல்ல..?!! ]

ஆக.. அப்படியாக… அந்த வகையில்… நாமும் காந்தி வழியில் நடக்கிறோம்; அதை இந்த காந்தி ஜெயந்தியில் ஊருக்கு நல்லது சொல்வோம்னும், உண்மை தெரிந்தது சொல்வோம்னும் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டு… ஒரு புத்தகம் குறித்த தகவலையும் சொல்லிவிடலாம் என்று தோன்றியதன் பேரில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். )

மயிலாப்பூரில் அமைந்த – வயதுக்கு மீறிய – நட்புகளில் ஒருவர் நாடகப்பணி அருணகிரி. ம.பொ.சி ரேஞ்சுக்கு வெளுத்த முறுக்கிய மீசையுடன் வருவார். ஒல்லியான உருவம். நாடகங்கள் பல எழுதியவர். சென்னை வானொலியில் வைத்து எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால்… சென்னை வானொலி நிலையத்தில் மாதம் ஐந்தாறு முறை சென்றபோதே பல பேருடைய அறிமுகம் கிடைத்தது எனலாம். நாடகக் கலைக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அருணகிரி ஐயாவுக்கு நாடகப்பணி அருணகிரி என்றே பெயரும் சேர்ந்து அமைந்துவிட்டது. நாடகம், திரைக்கலை, நாடகக் கலைக்காக பத்திரிகைகளை நடத்தியவர்.

ஒரு முறை “ஊருக்கு ஒரு மனிதர்” என்ற நாடகத்தின் அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அடியேன் மஞ்சரி இதழாசிரியர் பணியில். 2005 ல் ! பத்து வருடங்கள் ஓடி விட்டன. இப்போதும் பசுமையாக நினைவில் உள்ள சம்பவம்.  இந்த நாடகத்தை 1998ல் எழுதி மேடை ஏற்றினாராம். அந்த நாடக நூலுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டும் என்றார். அடடா.. சார். நான் முப்பது வயதைக் கடக்காத ஒரு சிறு இளைஞன். என்னிடம் போய்…. என்று இழுத்தேன். வற்புறுத்தி பிரதியைக் கொடுத்து விட்டு சொன்னார்… இந்த நாடகம் இளைஞர்களிடம் செல்ல வேண்டும். நீங்கள் தேசியம் தெய்வீகம் இரண்டிலும் ஆழமான பற்று கொண்டவர். மேலும் அணிந்துரை என்று யாரிடம் கொடுத்தாலும், ஓரிரு பக்கங்களுக்கு மேல் எழுதித் தரமாட்டார்கள். நீங்கள் இதனை முழுதாகப் படித்து, எனக்கு ஐந்தாறு பக்கம் வருவது போல்… பெரிதாக எழுதித் தரவேண்டும்… என்று அன்புக் கட்டளை  இட்டார்.

அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். காந்தியவாதியாக ஒருவர் எப்படி ஊரைத் திருத்துகிறார்; இளைஞர்கள் துணையுடன் … என்ற வகையில் அமைந்த கதை. அதற்கு அடியேன் எழுதிய அணிந்துரையை  விருப்பமுள்ளவர்கள் படித்து அனுபவிக்கலாம்.

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.”

முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

யதா ஸந்திதாநம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம்

(கிழக்கு தாம்பரத்தில் 30-09-2015 அன்று திரு சுந்தர் குமார் தன் உபன்யாஸத்தில் (சுப்ரமண்ய புஜங்கம்) அற்புதமாக விளக்கிக் கூறினார்-மேற்படி ஸ்லோகத்தின் நாலாவது வரியில் உள்ள
பராஸக்தி புத்ரம் என்பற்கான விளக்கம்)

.

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.
விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய்
.
இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம்
ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.

ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.

பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்
ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.

‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.

“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.
ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.

இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.

இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.

இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.

ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.

ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.
யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.

ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.

வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.
அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள்.

யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.

பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.

அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.

அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.

இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.

ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்;

அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.

இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது

அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர வைகோ கூட்டணியில் இருந்து விலகிய மனிதநேய மக்கள் கட்சி

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகளும் ஒருங்கிணைந்து ‘‘மக்கள் நல கூட்டணி’’யை உருவாக்கின.

இந்த கூட்டணி அ.தி. மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சில கூட்டங்களிலும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மக்கள் நல கூட்டணியை தேர்தல் கூட்டணியாக மாற்ற தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டினார். அதோடு அவர் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பிறகு அந்த கூட்டணி, 5 கட்சி கூட்டணி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் 5 கட்சி கூட்டணி உடைந்தது.

இதுபற்றி மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “மக்கள் பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து போராடவே நாங்கள் கை கோர்த்தோம். மற்றபடி அது அரசியல் கூட்டணி அல்ல” என்றார்.

இதையடுத்து மனித நேய மக்கள் கட்சி 2016 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்தது. 2011–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.முக.வுடன் சேர்ந்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது.

ஆனால் 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சிக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் மீண்டும் தி.மு.க. வுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று அந்த கட்சி முடிவு செய்தது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜவாஹிருல்லா, “2014 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுடன் கீழ்மட்ட தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட வில்லை. எனவே மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை” என்றார்.

இந்த நிலையில், சமீப காலமாக மனித நேய மக்கள் கட்சியின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியுள்ளன. வைகோ, திருமாவளவன் கூட்டணியில் சேர்ந்தால் ஓட்டுக்களை பிரிக்கத்தான் முடியுமே தவிர, வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, தி.மு.க.வுடன் 2016 தேர்தலில் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை பாராட்டி பேசத்தொடங்கியுள்ளார். சென்னையில் நடந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்து இருப்பதற்காக அவர் ஜெயலலிதாவை மிகவும் புகழ்ந்து பேசினார். சட்டமன்றத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது ஜவாஹிருல்லா அதற்கு ஆதரவு தெரிவித்தார்.

இது தவிர சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பாராட்டியும் ஜவாஹிருல்லா பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க.வுடன் மீண்டும் மனித நேய மக்கள் கட்சி நெருங்கியுள்ளது.

எனவே 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் மனித நேய மக்கள் கட்சி தங்கள் பக்கம் இருப்பதை விரும்புகிறார்கள். எனவே சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கும் போது மிக எளிதாக அ.தி.மு.க.வுடன் மனித நேய மக்கள் கட்சி கை கோர்க்கும் என்று கூறப்படுகிறது.