Home Blog Page 6001

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

 

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை யொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அகில இந்திய பார் கவுன்சிலுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்கள்

நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தியதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் 14 பேரை வழக்கறிஞர் தொழில் செய்ய இடைக்காக தடை விதித்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதேபோல, நீதித்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தை காலி செய்யும்படி சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று அறிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என்றால், சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தை பொறுத்தவரை வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பி, ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள்.

ஆனால், இன்று நடந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தின்போது, இதுபோன்ற ஊர்வலங்கள், கோஷங்கள், போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. 40வழக்கறிஞர்கள் வழக்கம் போல் இன்று கோர்ட்டில் ஆஜராகினார்கள். பல வழக்கறிஞர்கள், ‘அங்கி’ அணியாமல், கோர்ட்டுக்கு சென்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு நீதிமன்ற அறையில், சண்முகம் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மனுதாரர் ஆஜராகி, தன் வழக்கறிஞர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர் ஆஜராகவில்லை என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, நீங்கள் வாதாடுவதாக இருந்தால், வாதாடலாம் என்றார். அதை ஏற்று மனுதாரர் தன்னுடைய வழக்கு குறித்த விவரங்களை எடுத்துக்கூறி வாதிட்டார்.

இதையடுத்து, அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்கள். இதற்கிடையில் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜாகோபால் ஆஜராகி, ‘திருச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் உறுப்பினர்கள் 4 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய பார் கவுன்சிலின், உறுப்பினர்கள் இப்படி கலந்துக் கொள்வதால், தவறு செய்யும் வழக்கறிஞர் மீது எப்படி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும்? எனவே, இந்த 4 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சிலை கலைக்கவேண்டும்’ என்றார். இதற்கு நீதிபதிகள், பொருத்திருந்து பார்க்கலாம்’ என்று கூறினார்கள்.

மொத்தத்தில் சென்னை ஐகோர்ட்டு வழக்கம்போல் செயல்பட்டது. வழக்கறிஞர்களின் போராட்டத்தினால், வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

இதற்கிடையில், ‘சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘எங்களது போரட்டம் அகில இந்திய பார் கவுன் சில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துதான் நடத்து கின்றோம். மதுரை வழக்கறிஞர்கள் மீது இடைக்கால தொழில் செய்ய தடை விதித்தது தவறு. அவர்களுக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுத்து, விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி, அதன்பின்னர்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், நேரடியாக அவர்களை தொழில் செய்ய தடை விதித்துள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிபதிகளும், வழக்கறிஞராக பணியாற்றிய பின்னரே, அந்த பதவியை பெற்றுள்ளனர்.

நாங்கள் நீதிபதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வில்லை. மதுரை வழக்கறிஞர்கள் மீதான தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்’ என கூறினார்.

ஊழல் ஒழிப்பா? ஸ்டாலின் பேச்சால் தமிழக மக்கள் சிரிக்கிறார்கள்: பாமக.,

சென்னை:
சென்ற இடமெல்லாம் ஊழலை ஒழிக்க திமுக பாடுபடும் என்று ஸ்டாலின் பேசுவதைக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரியிலிருந்து நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழிக்கப்படும் என கூறி வருகிறார். அவரது இப்பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை… சிரிப்பைத் தான் ஏற்படுத்தியுள்ளது.

அஹிம்சையைப் பற்றி மகாத்மா காந்தியடிகள் போதித்த கருத்துக்கள் மக்களால் போற்றப்பட்டன. ஹிட்லரும், முசோலினியும், இடி அமீனும் அஹிம்சை பற்றி பேசியிருந்தாலோ, அல்லது இராஜபக்சே அஹிம்சை பற்றி பேசினாலோ அது முரண்பாடுகளின் மொத்த உருவமாகவும், நகைச்சுவையாகவும் மட்டுமே பார்க்கப்படும். ஊழல் ஒழிப்பு குறித்த மு.க. ஸ்டாலினின் கருத்துக்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலை தொடங்கி வைத்ததே தி.மு.க. தான் என்பதை  ஒட்டுமொத்த தமிழகமும் அறியும். பேரறிஞர் அண்ணா அவர்களின் 2 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாற்றும் எழவில்லை. ஆனால், 1969 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக கலைஞர் பதவியேற்ற சில ஆண்டுகளில் புதிய வீராணம் திட்ட ஊழலில் தொடங்கி, பூச்சிக்கொல்லி மருந்து  தெளிப்பு ஊழல் வரை மொத்தம் 28 ஊழல் குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டதையும், அக்குற்றச்சாற்றுகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான விசாரணை ஆணையம், அவற்றில் பெரும்பாலான குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரமிருப்பதாக உறுதி செய்ததையும் மக்கள் மறக்கமாட்டார்கள். அதுமட்டுமின்றி, ‘‘விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி’’ என்று நீதிபதி சர்க்காரியா ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட பெருமைக்குரிய கட்சி தி.மு.க. தான் என்பதும் எளிதில் மறக்கக்கூடிய ஒன்றல்ல.

இந்தியா ஊழல் நாடு என்ற தோற்றம் உலகம் முழுவதும் ஏற்பட்டதற்கு தி.மு.க. செய்த ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் காரணம் என்பதை மு.க. ஸ்டாலின் வேண்டுமானால் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த ஊழலில் கைமாறிய பணம் கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்காக எப்படி கொண்டு வரப்பட்டது? இந்த ஊழலை மறைக்க என்னென்ன தகிடுதத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன? என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இன்னும் இணையதளங்களில் காணப்படுகின்றன. இந்த உரையாடல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு சி.பி.ஐ. அமைப்பும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊழலை ஒழிக்கப்போவதாக கூறும் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த ஊழல்களில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. 2ஜி ஊழலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனஅதிபர் சாகித் பால்வா சென்னை வந்து ஸ்டாலினை  அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ. இராசாவும்  உடன் இருந்ததாகவும் அமலாக்கப்பிரிவின் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஸ்டாலினின் தனி உதவியாளர் இராஜாசங்கர், கணக்குத் தணிக்கையாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோரும் ஸ்டாலின் சார்பில் சில பேரங்களை பேசி முடித்தனர்; அதன்மூலம் ஸ்டாலினுக்கு பணம் கிடைத்தது என்றும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்  கூறப்பட்டுள்ளது.

இராசாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் சாதிக்பாட்சா அமலாக்கப்பிரிவு விசாரணையில்  அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இக்குற்றச்சாற்றுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 28.01.2011, 21.02.2011 ஆகிய நாட்களில் அமலாக்கப்பிரிவிடம் சாதிக்பாட்சா வாக்குமூலம் அளித்த நிலையில், 16.03.2011 அன்று அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். சாதிக்பாட்சா  தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டாரா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பவை எல்லாம் மு.க.ஸ்டாலினுக்கும், அவரைச்சுற்றியுள்ள சிலருக்கும் மட்டுமே தெரிந்த உண்மைகள் ஆகும்.
இவை ஒருபுறமிருக்க, தி.மு.க. அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஊழலே செய்யாதவர்களா… என்ற வினாவுக்கு உண்மையான பதிலை மு.க. ஸ்டாலின் அவர்களால் கூற முடியுமா? நிச்சயமாக முடியாது. அவர்கள் எந்த அளவுக்கு நியாயமானவர்கள் என்பதற்கு அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்குகள் தான் சாட்சி.

* முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருவாய்க்கு மீறி ரூ. 1.40 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
* முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.3.08 கோடி சொத்துக் குவித்ததாக 2003&ஆம் ஆண்டில் ஒரு வழக்கும், ரூ.1.75 கோடி சொத்துக்குவித்ததாக 2011&ஆம் ஆண்டில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
* முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர்  வருவாய்க்கு மீறி ரூ.21.22 கோடி சொத்துக் குவித்ததாக 2006 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுதவிர 2011 ஆம் ஆண்டில் புதிதாக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
* முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி மீதான ரூ.21.31 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. இராஜா, அவரது மனைவிகள் பரிமளா தேவி, உமாமகேஸ்வரி, மற்றும் உறவினர்கள் மீதான ரூ.3.32 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மீது ரூ.46 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
* முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது மனைவி சாந்தா, மகன் அருண் ஆகியோர் வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.4 கோடி சொத்துக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டும், ரூ.60 லட்சம்  சொத்துக்குவித்ததாக 2011 ஆம் ஆண்டும் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
* முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மனைவி மணிமேகலை ஆகியோர் வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.72.97 லட்சம் சொத்துக்குவித்ததாக 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* முன்னாள் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உறவினர் மூர்த்தி  ஆகியோர் மீது 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட ரூ.44 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு  மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
* முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மீது 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட ரூ.2.31 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
* முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்ட பிள்ளை, தாய் ராஜம் ஆகியோர் ரூ.28 லட்சம் சொத்துக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கும்,  ரூ.14.82 கோடி சொத்துக் குவித்ததாக 2011 ஆம் ஆண்டிலும் தொடரப்பட்ட வழக்கும் நாகர்கோவில்  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி பெரியகருப்பன், தமிழரசி ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகள் உண்மையல்ல… அவர்கள் அப்பாவிகள் என்று ஸ்டாலினால் கூற முடியுமா? திமுக அமைச்சர்கள் ஊழல் செய்ததாக கூறப்படும் தொகை குறைவாக காட்டப்பட்டுள்ளது, அவர்கள் இன்னும் அதிகமாகத் தான் ஊழல் செய்திருப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாமே தவிர ஊழல் செய்யவில்லை என்று கூற முடியாது.  தி. மு.க.வைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகும் போது வைத்திருந்த சொத்துக்களை விட 780 மடங்கு மதிப்புள்ள சொத்துக்களை, அமைச்சராக பதவி வகித்த அடுத்த 5 ஆண்டுகளில் சேர்த்துள்ளார். தமிழ்நாட்டை தி.மு.க. 22 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. இதில் அண்ணா ஆட்சி செய்த 2 ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள 20 ஆண்டுகளும் கலைஞர் தான் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் ஊழல் உருவாகி பெருக்கெடுத்து, ஆறாக ஓடியது. இதை எவரும் மறுக்கமுடியாது.
தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் தான் இப்போது ஸ்டாலினின் நண்பர்களாகவும்,  படைத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். ஊழல் வழக்கில் சிக்கிய அனைத்து அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர் முதல் துணைப் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர் வரையிலான பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று மு.க. ஸ்டாலின் கூறுவதைப் பார்க்கும் போது, ‘‘ யோக்கியர் வருகிறார்… சொம்பைத் தூக்கி உள்ளே வையுங்கள்’’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால், அ.தி.மு.க. ஊழல் சுனாமி. இந்த இரு கட்சிகளாலும் ஊழலை  ஒழிக்க முடியாது; இந்த இரு கட்சிகளையும் ஒழித்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு 50 ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளையடித்து வந்த இரு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர்.அடுத்த ஆண்டு தேர்தல் முடிவு வெளியாகும் போது இது தெரியும்.

கிரிக்கெட் நடைபெற்ற இடத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி : 9 பேர் பலி

பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்திகா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்த தீவிரவாதி, போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்து வெடிக்கச் செய்தான்.

இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதலில் கால்பந்து போட்டி நடைபெற்றபோதுதான் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது என்று கூறப்பட்டது. பின்னர், உள்துறை அமைச்சகம் அங்கு கிரிக்கெட் போட்டிதான் நடைபெற்றது என்று தெரிவித்தது.

உள்ளூர் அரசு அதிகாரிகள் இந்த போட்டியை பார்க்க வருவார்கள். அவர்களை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தாக்குதல் நடைபெற்றது. இதில் 50 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான் தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர். தலிபான் தீவிரவாத கும்பலைத் தவிர மற்ற சில பயங்கரவாதிகள் கும்பலும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. அந்த கும்பல் இதுபோன்ற மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையில் பெரும்பாலான வீரர்கள் அங்கிருந்து சென்றபின் தீவிரவாத தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகாரத்தில் இருந்து 2001ம் ஆண்டில் தலிபான்கள் வெளியேற்றப்பட்டாலும், அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்சினை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
 காவிரி பிரச்னையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகநிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துன்பத்தையும், துயரத்தையும் உலகில்வேறு எவரேனும் அனுபவிப்பார்களா? என்பது ஐயம் தான். அந்த அளவுக்கு எண்ணற்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசின் கண்ணுக்கு தான் அவர்களின் பிரச்சினைகள் தெரியவில்லை.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சியால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு அளவில் நடைபெறவில்லை. சம்பா சாகுபடியாவது செய்யலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விதை விதைத்து நாற்று நட்டிருந்த நிலையில், வறட்சி உச்சத்திற்கு சென்றிருப்பதால் காவிரி கடைமடை பகுதியில் பயிர்கள் காயத் தொடங்கியிருக்கின்றன. மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விட முடியும் என்ற நிலையில், சம்பாபயிரைக் காப்பாற்ற முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் போதிலும் தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கும் மனது வரவில்லை. சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி  காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை  அறிவித்திருக்கின்றனர். அனைத்து  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் 3 ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தான் உணவு படைக்கும் கடவுள் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு என்பதால், இப்போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவை தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை  உடனே அமைக்க வேண்டும், மேகதாது அணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

“அம்மா கைபேசி”: அறிவித்தார் ஜெயலலிதா

சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.15 கோடியில் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய “அம்மா கைபேசித் திட்டம்” என்பதை, விதி எண் 110-ன் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து இன்று சட்டசபையில் அறிக்கை வாசித்த முதல்வர்,

மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு 1991-ஆம் ஆண்டு உருவாக்கியது. மேலும், ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005 ஆம் ஆண்டு அதிமுக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புது வாழ்வுத் திட்டத்தையும் துவக்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். சுய உதவிக் குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிந்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்து கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.

விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள் வழங்கப்படும் அம்மா கைபேசி திட்டம் என்ற புதிய திட்டம் துவக்கப்படும்.

முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா கைபேசிகளை எனது தலைமையிலான அரசு வழங்கும் – என்று தெரிவித்தார்.

வெளிநாட்டில் தற்புகழ்ச்சிக்காக இந்திய மக்களை கேவலப்படுத்லமா?: மோடி மீது காங்கிரஸ் பாய்ச்சல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசியபோது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுக தாக்குதலை தொடுத்தார்.

காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது. அது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நமது நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒருவர் மீது ரூ.50 கோடியும், ஒருவரது மகன் மீது 250 கோடியும், வேறு ஒருவர் மகள் மீது 500 கோடியும், ஒருவரது மருமகன் மீது 1000 கோடியும், ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன என மோடி குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்வி, அன்னிய மண்ணில் இருந்துகொண்டு சொந்த நாட்டினரைப் பற்றி தரக்குறைவாக பேசும் மோடியின் நடவடிக்கையை அவமானகரமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய பிரதமர் கலிபோர்னியாவுக்கு சென்று தனது சொந்த நாட்டு மக்களை கிண்டல் அடித்தும், தன்னைப்பற்றி தற்புகழ்ச்சியாக பெருமையடித்துக் கொள்வதையும் கேட்கவே அவமானமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி வெற்றிகரமாகப் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தியாவின் பல்நோக்கு செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட்டை சுமந்து சென்று விண்ணில் வெற்றிகரமாக நிறுத்தியது பிஎஸ்எல்வி.

வானிலை மற்றும் விண்வெளி ஆய்வு தொடர்பான முன்னேற்றத்துக்கு பயன்படும் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் மையத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் அனுப்பிய உலக நாடுகளில் இந்தியாவும் 4வதாக இடம் பிடித்துள்ளது.

45 மீ உயரமும் 320 டன் எடையும் கொண்டது பிஎஸ்எல்வி-30 ராக்கெட். இந்த ராக்கெட், 1513 கிலோ எடை கொண்ட இந்தியாவின் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளுடன்,  அமெரிக்க நிறுவன செயற்கைக் கோள் உள்ளிட்ட மேலும் ஆறு வர்த்தக ரீதியிலான செயற்கைக் கோளுடன் வெற்றிகரமாகப் பாய்ந்து, குறிப்பிட்ட இலக்கில் நிலைநிறுத்தியது.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் தனது டிவிட்டரில்,

 

– என்று குறிப்பிட்டுள்ளார்

 

ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

 

கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 6,602 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 69 திட்டப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

 

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், பரங்கிப்பேட்டை, குமராட்சி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 17 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட, குடியிருப்புகள் மற்றும் 70 வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்கு 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம்; திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கு 42 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ள பாளையம், காஞ்சி கோயில், நள்ளம்பட்டி, பெத்தம் பாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் சென்னிமலை, பெருந்துறை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 492 ஊரகக் குடியிருப்புகளுக்கு 123 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

 

தேனி மாவட்டம், கடமலைக் குண்டுமயிலாடும்பாறை மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 16 ஊரகக் குடியிருப்புகளுக்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் என மொத்தம் 195 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களினால் 4 லட்சத்து 9 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர்.

 

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு மழை நீர் சேகரிப்பு இயக்கம், புதிய வீராணம் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், போன்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை பல்வேறு கால கட்டங்களில் எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இத்தகைய முன்னோடி முயற்சிகளினால் சென்னை பெருநகர் பகுதியில் நிலத்தடி நீராதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய நீராதாரங்களும், குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

 

சென்னை மாநகரின் வருங்கால குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காகவும், நீராதாரங்களை பாதுகாத்து, சீரமைப்பதற்காக, நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த இயக்கத்தின் கீழ், பெரிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள், அரசு கட்டடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பெரும் வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வடிவமைத்து நிர்மாணித்தல் மூலம் மேம்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரில் 15 பெரும் வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த வளாகங்களில் மாதிரி பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

இந்த இயக்கத்தின் மேற்குறிப்பிடப்பட்ட மாதிரி பணிகள் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

 

மிதிவண்டிகளின் பயன்பாட்டை, ஊக்குவிக்கும் வகையில், மிதி வண்டிகளுக்கென தனிப்பாதைகள், மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றிற்கு அருகில் பொது மிதி வண்டிகள் பயன்பாட்டு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும்.

 

திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான, வசதிகளை உள்ளடக்கிய மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்திற்கான தனித்தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.இந்த ஆண்டு, 10 நகராட்சிகள் மற்றும் 214 பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு, மேலாண்மை பணிகள் 69 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி பகுதிகளுக்கிடையே ரயில்வே சந்திக்கடவுகள் முறையே 2ஏ மற்றும் 2பி ஆகியவை அமைந்துள்ளன.

 இந்த இரண்டு சந்திக்கடவுகளிலும் நாளொன்றுக்கு மொத்தம் 14 முறை ரயில் போக்குவரத்திற்கு ஏதுவாக வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நிறுத்தப்படும் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 42,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

 

எனவே, மாநிலத்தின் தொழிற் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், பொது மக்களின் சிரமத்தை நீக்கும் வகையிலும், கால நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்திற் கொண்டும், மேற்படி சந்திக்கடவுகளுக்கு மாற்றாக எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

 

எண்ணூர் நெடுஞ்சாலையில், இந்திய எண்ணெய் நிறுவன கிடங்கின் வாயில் முதல், வைத்தியநாதன் மேம்பால சந்திப்பிற்கு முன்னர் வரை மேம்பாலம் அமையும். இதே போன்று, மணலி சாலையில், இந்திய எண்ணெய் நிறுவன கிடங்கு சந்திப்பின் மேம்பாலத்தில் தொடங்கி தற்போதுள்ள தரைப்பாலத்திற்கு முன்னர் முடியும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும்.

 

சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள 42 பகுதிகளில் 36 பகுதிகளுக்கு குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 பகுதிகளுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 பகுதிகளுக்கு கழிவுநீர் அகற்றும் வசதி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 பகுதிகளுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மற்ற பகுதிகளுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் திட்டங்களை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்த நடவடிக்கைளின் ஒரு பகுதியாக சென்னை மாநகரத்துடன் தெற்கு பகுதியில் இணைக்கப்பட்டுள்ள 11 பகுதிகளான பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஜல்லடாம் பேட்டை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்துரைப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் கொட்டிவாக்கம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு சோழிங்கநல்லூரில் கூடுதலாக நாளொன்றுக்கு 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய புதிய கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் 65 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 

நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும், மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய வகையிலான இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளால் தென் சென்னை பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

 

சென்னை மாநகரின் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மகாகவி பாரதியார் நகர், புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், வியாசர்பாடி, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், கீழ்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம், எழும்பூர், சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பட்டினப்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், அரும்பாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மொத்தம் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய குழாய்கள் மற்றும் விடுபட்ட தெருக்களுக்கு புதிய குழாய் பதிக்கும் பணிகள் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இம்மண்டலத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள், ஏழை எளிய மக்கள் ஆவர். 

எனவே, சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 119 தார் சாலைகள் மேம்படுத்தப்படும்.

 

1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளின் பெயர் பலகைகள் நிறுவப்படும். 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் 12 பூங்காக்கள் சீரமைக்கப்படும். 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 20 பள்ளிக்கூடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 31 பொது கழிப்பிடங்கள் நவீனப்படுத்தப்படும். 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 18 சத்துணவு மையங்களில் அபிவிருத்தி பணிகள் செயல்படுத்தப்படும். 1 கோடி ரூபாய் செலவில் மயான பூமி மற்றும் இடுகாடு புனரமைக்கப்படும்.

 

மேலும் சலவைக் கூட கட்டடங்களில் அபிவிருத்தி பணிகள் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுகாதார மையங்கள் அபிவிருத்தி பணிகள் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்படும். 6,000 எண்ணிக்கையிலான எல்.இ.டி மின் விளக்குகள் 15 கோடி ரூபாய் செலவில் பொருத்தப்படும். மொத்தத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

 

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1,260 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 750 பேருந்து நிறுத்தங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிதியாண்டில் எஞ்சியுள்ள 510 பேருந்து நிறுத்தங்களில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிழற் குடைகள் அமைக்கப்படும்.

 

துப்புரவு பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழுக்கால் சட்டை வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.117 கோடியில் மேம்பாலம்: சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த நான்காண்டுகளில் 41 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர்த் திட்டங்கள் 7,324 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 6,602 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 69 திட்டப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், பரங்கிப்பேட்டை, குமராட்சி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 17 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட, குடியிருப்புகள் மற்றும் 70 வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்கு 24 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம்; திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கு 42 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ள பாளையம், காஞ்சி கோயில், நள்ளம்பட்டி, பெத்தம் பாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் சென்னிமலை, பெருந்துறை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 492 ஊரகக் குடியிருப்புகளுக்கு 123 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம். தேனி மாவட்டம், கடமலைக் குண்டுமயிலாடும்பாறை மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 16 ஊரகக் குடியிருப்புகளுக்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் என மொத்தம் 195 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களினால் 4 லட்சத்து 9 ஆயிரம் மக்கள் பயன் பெறுவர். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு மழை நீர் சேகரிப்பு இயக்கம், புதிய வீராணம் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், போன்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை பல்வேறு கால கட்டங்களில் எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இத்தகைய முன்னோடி முயற்சிகளினால் சென்னை பெருநகர் பகுதியில் நிலத்தடி நீராதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய நீராதாரங்களும், குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகரின் வருங்கால குடிநீர் தேவை நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காகவும், நீராதாரங்களை பாதுகாத்து, சீரமைப்பதற்காக, நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தின் கீழ், பெரிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள், அரசு கட்டடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பெரும் வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வடிவமைத்து நிர்மாணித்தல் மூலம் மேம்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரில் 15 பெரும் வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த வளாகங்களில் மாதிரி பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த இயக்கத்தின் மேற்குறிப்பிடப்பட்ட மாதிரி பணிகள் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மிதிவண்டிகளின் பயன்பாட்டை, ஊக்குவிக்கும் வகையில், மிதி வண்டிகளுக்கென தனிப்பாதைகள், மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றிற்கு அருகில் பொது மிதி வண்டிகள் பயன்பாட்டு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான, வசதிகளை உள்ளடக்கிய மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்திற்கான தனித்தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு, 10 நகராட்சிகள் மற்றும் 214 பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு, மேலாண்மை பணிகள் 69 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். போக்குவரத்து நெரிசல் மிகுந்த எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி பகுதிகளுக்கிடையே ரயில்வே சந்திக்கடவுகள் முறையே 2ஏ மற்றும் 2பி ஆகியவை அமைந்துள்ளன. இந்த இரண்டு சந்திக்கடவுகளிலும் நாளொன்றுக்கு மொத்தம் 14 முறை ரயில் போக்குவரத்திற்கு ஏதுவாக வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நிறுத்தப்படும் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 42,000 என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தின் தொழிற் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், பொது மக்களின் சிரமத்தை நீக்கும் வகையிலும், கால நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்திற் கொண்டும், மேற்படி சந்திக்கடவுகளுக்கு மாற்றாக எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எண்ணூர் நெடுஞ்சாலையில், இந்திய எண்ணெய் நிறுவன கிடங்கின் வாயில் முதல், வைத்தியநாதன் மேம்பால சந்திப்பிற்கு முன்னர் வரை மேம்பாலம் அமையும். இதே போன்று, மணலி சாலையில், இந்திய எண்ணெய் நிறுவன கிடங்கு சந்திப்பின் மேம்பாலத்தில் தொடங்கி தற்போதுள்ள தரைப்பாலத்திற்கு முன்னர் முடியும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை மாநகரத்துடன் இணைக்கப்பட்டுள்ள 42 பகுதிகளில் 36 பகுதிகளுக்கு குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 பகுதிகளுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 பகுதிகளுக்கு கழிவுநீர் அகற்றும் வசதி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 பகுதிகளுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மற்ற பகுதிகளுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் திட்டங்களை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைளின் ஒரு பகுதியாக சென்னை மாநகரத்துடன் தெற்கு பகுதியில் இணைக்கப்பட்டுள்ள 11 பகுதிகளான பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஜல்லடாம் பேட்டை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்துரைப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் கொட்டிவாக்கம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு சோழிங்கநல்லூரில் கூடுதலாக நாளொன்றுக்கு 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய புதிய கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் 65 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும், மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய வகையிலான இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளால் தென் சென்னை பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள். சென்னை மாநகரின் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மகாகவி பாரதியார் நகர், புதிய மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், வியாசர்பாடி, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், கீழ்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம், எழும்பூர், சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பட்டினப்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், அரும்பாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மொத்தம் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய குழாய்கள் மற்றும் விடுபட்ட தெருக்களுக்கு புதிய குழாய் பதிக்கும் பணிகள் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இம்மண்டலத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள், ஏழை எளிய மக்கள் ஆவர். எனவே, சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 119 தார் சாலைகள் மேம்படுத்தப்படும். 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளின் பெயர் பலகைகள் நிறுவப்படும். 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் 12 பூங்காக்கள் சீரமைக்கப்படும். 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 20 பள்ளிக்கூடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 31 பொது கழிப்பிடங்கள் நவீனப்படுத்தப்படும். 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 18 சத்துணவு மையங்களில் அபிவிருத்தி பணிகள் செயல்படுத்தப்படும். 1 கோடி ரூபாய் செலவில் மயான பூமி மற்றும் இடுகாடு புனரமைக்கப்படும். மேலும் சலவைக் கூட கட்டடங்களில் அபிவிருத்தி பணிகள் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சுகாதார மையங்கள் அபிவிருத்தி பணிகள் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்படும். 6,000 எண்ணிக்கையிலான எல்.இ.டி மின் விளக்குகள் 15 கோடி ரூபாய் செலவில் பொருத்தப்படும். மொத்தத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1,260 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 750 பேருந்து நிறுத்தங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிதியாண்டில் எஞ்சியுள்ள 510 பேருந்து நிறுத்தங்களில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிழற் குடைகள் அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழுக்கால் சட்டை வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.