Home Blog Page 6000

வெளிநாடு சென்ற பிரதமர் மோடி இந்தியா வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த இந்தியதனது ஏழுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா வருவதற்காக புறப்பட்டார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி, டப்ளின் நகரில் அந்நாட்டு அதிபர் எண்டா கென்னியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர், 23-ம் தேதி நியூயார்க் நகருக்கு வந்த அவர் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைத்த பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், புவி வெப்பமாயதல், உலகஅமைதி, தீவிராவாத ஒழிப்பு, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் சுமார் 500 பேருக்கு விருந்து அளித்த மோடி, இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தொழிற்சாலைக்கு சென்ற அவர் அங்கு புகை வெளியிடாதபடி பேட்டரியால் இயங்கும் கார்கள் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார்.

பின்னர், சிலிக்கான் வேல்லி பகுதி என அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் நகருக்கு சென்று பேஸ்புக் நிறுவனத்தை பார்வையிட்டார். பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க்குடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிம் குக்(ஆப்பிள்), சாந்தனு நாராயணன்(அடோபி), சத்யா நாதெள்ளா(மைக்ரோசாப்ட்), பால் ஜேக்கப்ஸ்(குவால்காம்), சுந்தர் பிச்சை(கூகுள்), ஜான் கேம்பர்ஸ்(சிஸ்கோ) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

சான் ஜோஸ் நகரில் சுமார் இருபதாயிரம் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர், நேற்று நியூயார்க் நகருக்கு திரும்பிய அவர், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.

மோடியை பார்த்த ஒபாமா அவரை கட்டியணைத்து உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவ நிலை மாற்றத்தை தடுத்தாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரையும் அவர் சந்தித்தார். கத்தார் நாட்டு அமீர், ஷேக் தமின் பின் ஹமாத் அல் தானி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியாட்டோ ஆகியோரையும் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு தனது தனி விமானம் மூலம் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

விமானத்தில் ஏறி புறப்படும்போது, தனது அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு சந்திப்புகளின் விளைவாக இந்தியாவுக்கு ஆதாயமான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதாகவும், தனக்கும், தன்னுடன் வந்திருந்த குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை : கைவிரித்த அமெரிக்க அதிபர் ஒபாமா

 காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அவர்களே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை தங்களுடையது என்று பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்துதல், தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவிற்குள் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய செயல்களை இடைவிடாது செய்துவருகிறது.

இந்தியா திருப்பி அடிக்கும்போது, ஐ.நா. சபையில் புகார் தெரிவிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பது பாகிஸ்தானில் நெடுநாளைய விருப்பமாக உள்ளது. ஆனால், தற்போது பாகிஸ்தானின் ஆசைக்கனவில் மண் விழுந்துள்ளது.

காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விவகாரம். அவர்களே பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் நிதிநிலையை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

இதுவும் ஒரு 110 அறிவிப்பு. ‘‘மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பத்துலட்சம் கடன் கொடுக்கப்படும். அதில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்’’ என்று 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இன்னும் அது நிறைவேறவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாதவர், ஆட்சி போகும் நிலையில் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவார்?

தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது மகளிர் சுயஉதவிக் குழுக்களை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. இப்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கைபேசி என்று அறிவிக்கிறார். தேர்தல் நாடகத்தை தொடங்கி விட்டார். இனி எஞ்சியிருக்கின்ற நாட்களில் இது போன்ற அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது.

சட்டமன்றத்திற்கு அரை மணி நேரம் வரும் ஜெயலலிதா தேர்தல் அறிவிப்புகளை வெளியிடத்தான் வருகிறார். ஏற்கனவே மாநில நிதி நிலைமை மோசம். 2.11 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருக்கிறது. நிதி நிலைமை பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா 110 அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

இதுவரை அவர் அறிவித்த பல அறிவிப்புகள் ‘‘வெற்று அறிவிப்புகளாகவே’’ கடந்துபோயிருக்கின்றன. இந்த அறிவிப்பும் கடந்து போகும்.

1989-ல் மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கியது தி.மு.க. அரசு. அவர்களுக்கு கடன் கொடுத்தால் தானே கைபேசி பயன்படுத்த முடியும். முதலில் சுயஉதவிக் குழுக்களுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி கடன் கொடுக்கட்டும். பிறகு கைபேசி கொடுக்கலாம் என மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளர்.

 

வெளிநாடு சென்ற பிரதமர் மோடி இந்தியா வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த இந்தியதனது ஏழுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா வருவதற்காக புறப்பட்டார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி, டப்ளின் நகரில் அந்நாட்டு அதிபர் எண்டா கென்னியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர், 23-ம் தேதி நியூயார்க் நகருக்கு வந்த அவர் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைத்த பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், புவி வெப்பமாயதல், உலகஅமைதி, தீவிராவாத ஒழிப்பு, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் சுமார் 500 பேருக்கு விருந்து அளித்த மோடி, இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தொழிற்சாலைக்கு சென்ற அவர் அங்கு புகை வெளியிடாதபடி பேட்டரியால் இயங்கும் கார்கள் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார்.

பின்னர், சிலிக்கான் வேல்லி பகுதி என அழைக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் நகருக்கு சென்று பேஸ்புக் நிறுவனத்தை பார்வையிட்டார். பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க்குடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிம் குக்(ஆப்பிள்), சாந்தனு நாராயணன்(அடோபி), சத்யா நாதெள்ளா(மைக்ரோசாப்ட்), பால் ஜேக்கப்ஸ்(குவால்காம்), சுந்தர் பிச்சை(கூகுள்), ஜான் கேம்பர்ஸ்(சிஸ்கோ) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

சான் ஜோஸ் நகரில் சுமார் இருபதாயிரம் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர், நேற்று நியூயார்க் நகருக்கு திரும்பிய அவர், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.

மோடியை பார்த்த ஒபாமா அவரை கட்டியணைத்து உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவ நிலை மாற்றத்தை தடுத்தாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரையும் அவர் சந்தித்தார். கத்தார் நாட்டு அமீர், ஷேக் தமின் பின் ஹமாத் அல் தானி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியாட்டோ ஆகியோரையும் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு தனது தனி விமானம் மூலம் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

விமானத்தில் ஏறி புறப்படும்போது, தனது அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு சந்திப்புகளின் விளைவாக இந்தியாவுக்கு ஆதாயமான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதாகவும், தனக்கும், தன்னுடன் வந்திருந்த குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’ 
 
அன்பே அருளே புத்தகத்தில் 
ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்
 
 
நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன்.

அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

 
அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு’ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.
 
“இது எப்படிடா உனக்கு கிடச்சுது?” என்று ஆச்சிரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.
 
அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.
 
இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
 
‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.
 
‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்க்கும் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் கைது

தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்த  இரண்டு கொள்ளையர்கள் வத்தலக்குண்டு மணப்புரம் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசு விரைவு போக்குவரத்துக் கழக டெப்போவில் கிளீனிங் வேலை செய்வதற்கான கான்ட்ராக்டை  அதே டெப்போவில் காவலாளியை பணியாற்றி வரும் ஒருவர்தான் எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகனும் அவரது நண்பரும்  கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளீனராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு டெப்போவில் தனி அறைகள் உள்ளன. 

 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் உள்ள மணப்புரம் தங்க நகைக்கடன் நிறுவனத்தில் கடந்த 22ஆம் தேதி முகமூடி கொள்ளையர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, ரூ.17 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பகல் நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்து விட்டு, இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் செயலில் கிளீனர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கிளீனராக பணியாற்றி வந்த முருகனையும், அவரது நண்பரையும் திண்டுக்கல் காவல்துறையினர் நேற்றிரவு திடீரென கைது செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறைகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான  பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

இதையடுத்து, இரண்டு பேரையும் திண்டுக்கல் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காவடி, தீச்சட்டி நேர்த்திக்கடன் கட்டண ரத்துக்கு இந்து முன்னணி வரவேற்பு

சென்னை:

காவடி, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் கட்டணங்களை ரத்து செய்யப்படும் என்ற அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், தமிழக முதல்வர் தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அறநிலையத் துறை அமைச்சர் இன்று சட்டமன்றத்தில் கொடுத்துள்ள அறநிலையத் துறை சம்பந்தமான அறிவிக்கையில் காவடி, தீச்சடிப் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரிடம் கோயிலில் பெறப்பட்டு வந்த கட்டணத்தை  தமிழக முதல்வரின் ஆணைப்படி ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது.

சாமானியன் தன் கஷ்டத்தை இறைவனிடம் முறையிட்டு மன ஆறுதல் அடையவும், தனது வேண்டுதல் நிறைவேற்றிய இறைவனுக்கு தான் வேண்டிக்கொண்ட நேர்த்திக் கடனை செலுத்த வரும்போது, அதுவும் விசேஷ நாட்களில் கட்டணம் வசூலிப்பது எத்தனை பெரிய தண்டனை! பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையில் இப்படிப்பட்ட இடைவெளியை கட்டணம் என்ற வகையில் ஏற்படுத்துவதை இந்து முன்னணி தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக, மக்களின் ஆதரவோடு எதிர்த்துப் போராடி வருகிறது.

இதுபோல ஆலய தரிசனக் கட்டணத்தையும் தமிழக முதல்வர் அவர்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் தரிசனம் செய்ய தகுந்த ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்ய வேண்டும். இறைவனைக் காட்சிப் பொருளாக்கி கட்டணக் கொள்ளை அடிப்பது கொடுமையானது. கோயில்களில் ஏராளமாக சொத்துக்கள் இருக்கின்றன, அதுமட்டுமல்ல வருடா வருடம் காணிக்கையும், வருமானமும் அதிக அளவில் வரும் நிலையில் இறைவனைக் காண கட்டணம் கேட்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

சிறுபான்மையினர் நல அமைச்சரின் அறிவிப்பில் வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் உதவிகள் முதலியன இடம் பெறுகிறது. ஆனால், அறிநிலையத்துறை அமைச்சரின் அறிவிக்கையில் கோயில்களைப் பாதுகாக்க, கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, வாடகை பாக்கி வசூலிக்க, ஆலய மற்றும் பக்தர்களின் வசதிக்கான அரசின் நிதி உதவி குறித்த எந்த குறிப்பும் இல்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி. எஸ்.பி. ராஜன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை செய்த விஷ்ணுபிரியா எழுதிய டைரி, அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் இன்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜன் ஒப் ஒப்படைத்தார்.

திருச்சி விமான நிலையத்துக்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட அன்புமணி வேண்டுகோள்

திருச்சி:
திருச்சி விமான நிலையத்துக்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:
 
திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நாட்டிற்கு சேவை செய்த தலைவர்கள் மற்றும் நாட்டுக்கு பெருமை சேர்த்த தலைவர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர்களின் பெயர்களை வானூர்தி நிலையங்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் சூட்டுவது வழக்கமாக உள்ளது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப் பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்த தலைவர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டிருப்பதுடன், சென்னை விமான நிலையத்தின் முனையங்களுக்கு சிறந்த அடையாளமும் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கும்  இதேபோல் பெயர் சூட்ட மத்திய&மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஆனால், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது நல்வாய்ப்புக்கேடானது.

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்;  அண்டை நாட்டு மன்னர்களுடன் நல்லுறவைப் பேணியதுடன், போர்க்களங்களில் அவர்களுக்கு உதவியவர்; சேர, சோழ, பாண்டியர்கள் என  மூவேந்தர்களின் ஆளுகைக்குள் இருந்த தரைப்பகுதிகளை பெரும்பிடுகு மன்னரும், அவரது வம்சாவளியினரும் ஆட்சி செய்ததாக அவர்களின் தலைநகராக விளங்கிய செந்தலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். இத்தகைய சிறப்பு மிக்க பெரும்பிடுகு மாமன்னரின் பெயரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சூட்டுவது தான் அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாகும்.

ஏற்கெனவே, திருச்சி மாவட்டத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்ட போது, திருச்சி மாவட்டத்தின் பெயரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பெயர்  நீக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசரின் பெயர் சூட்டப்படுவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதை மதிக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

பேஸ்புக் தலைமையகத்தில் மோடி: 5 கேள்விகள் ஆயிரம் பதில்கள்!

அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஃபேஸ்புக் தலைநகரான மெல்னோ பார்க்கில் அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர்  மார்க் சக்கர்பெர்க் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்தியாவை 20 ட்ரில்லியன் பொருளாதார இயங்குதளமாக மாற்றுவதே இச்சந்திப்பின் மூலம் தெரிவிக்க விரும்பும் தனது இலட்சியம் என்று தெளிவுறுத்தினார், பிரதமர்.

இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்தத் திரு.மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார். அந்தக் கேள்வி பதில் கலந்துரையாடலின் விவரங்கள் இதோ: 

கேள்வி 1:-

கேட்டவர் : மார்க் சக்கர்பெர்க்

இந்திய அரசியலிலும், அரசு செலுத்துவதிலும், திட்டங்கள் தயாரிப்பதிலும், சமூக வலைதளங்களின் பங்களிப்பு என்ன?

பதில் : ‘ரியல்டைம் ந்யூஸ்’ எனப்படும் உடனடிச் செய்திகளைப் பகிர்வதில் பெரும் பங்காற்றுகின்றன சமூக வலைதளங்கள். முன்பெல்லாம் ஆட்சியாளர்கள் தவறு செய்தால், மக்கள் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்; தற்போது ஐந்து நிமிடங்களில் மக்கள் தீர்ப்பளித்து விடுகின்றனர்; என் செயல்பாடுகளையே கூட, சமூக வலைதளங்களில் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர்.


பன்னாட்டுக் கொள்கைகளிலும் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இஸ்ரேல் ப்ரதமரை நான், ஹீப்ரியூ மொழியில் வாழ்த்தியதும், அவர் எனக்கு ஹிந்தியில் நன்றி தெரிவித்ததும் சமூக வலைதளங்களின் சாதனையே.

கேள்வி 2:

கேட்பவர் : வீர் கஷ்யப், பாபாஜாப்ஸ் நிறுவனம்

டிஜிட்டல் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், இந்தியாவில் டிஜிட்டல் கட்டுமானங்களுக்காக நீங்கள் செய்யவிருக்கும் முதலீடு என்ன?

பதில் :  இன்றைய சூழலில், ‘ஹை-வே’ எந்த அளவு முக்கியமோ அதே அளவு ‘ஐ-வே’ வும் முக்கியம். அதாவது, வெளியுலகக் கட்டுமானக்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இணையக் கட்டுமானம் விளங்குகிறது.

இந்தியாவிலுள்ள 600,000 க்ராமங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ‘ஆப்டிக் ஃபைபர்’ வசதியுடன் கூடிய இணையத்தின் வசதி ஏற்படுத்தித் தருவதே எனது திட்டமாகும்.

பணத்தை எங்கு முதலீடு செய்வதென்று தெரியாமலிருக்கும், உலகப் பெரு முதலீட்டாளர்களுக்கு நான் இந்தியாவின் விலாசத்தை வழங்குகிறேன்.


கேள்வி 3

கேட்பவர் : டி.எஸ். கரோனா, அமெரிக்க வணிகர்

’மேக் இன் இந்தியா’ திட்டம் வெற்றி அடையும் என்று நினைக்கிறீர்களா?

பதில் : தடம்புரண்ட இரு சக்கர வாகனத்தைத் திருப்புவது எளிது; ஒரு பெரிய இரயிலைத் தடம் திருப்புவது கடினம்; அரசாங்கத்திற்கு கொஞ்சம் அவகாசம் தேவை.

40 ஆண்டுகளாக வங்கிக் கணக்குக் கூட இல்லாத, 180 மில்லியன் குடிமக்களுக்கு, இந்த அரசு, 100 நாட்களுக்குள் வங்கிக் கணக்குத் திறந்து கொடுத்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் 3டி மந்திரத்தை நம்புகிறோம்

அது முறையே, டெமாகிரஃபி, டெமாக்ரசி, டிமாண்ட் அதாவது,

மக்களியல், குடியரசு, மற்றும் பொருளாதாரத் தேவை இங்கு நிறைந்திருக்கிறது.

நான்காவது ’டி’ யாக ‘டி-ரெகுல்ரைசேஷன்’  அதாவது, முறைச்சுருக்குதல் யுக்தியைக் கையாள்கிறேன். இதன் மூலம் அரசாங்கத்தைச் சுருக்கி, வளர்ச்சியை மேம்படுத்துவேன். எனவே ’மேக் இன் இந்தியா’ திட்டம் நிச்சயம் வெற்றியுடன் நிறைவேறும்.

கேள்வி 4

கேட்பவர் ; முனைவர் இரஞ்சனா குமாரி

பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்கு என்ன?

பதில்: உலகிலேயே, பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாடு நம் பாரத பூமிதான். 50 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கும் இந்த மனித சக்தியை, வீட்டிற்குள் பூட்டி வைக்க இயலாது. ‘பேட்டி பசாஓ, பேட்டி படாஓ’ திட்டத்தின் மூலம் எத்தனையோ க்ராமத்துப் பெண்கள் கல்வி பெற்று முன்னேறி வருகின்றனர். அடுத்த கட்டமாக, முடிவெடுக்கும் பொறுப்புகள் இருக்கும் பணியிடங்களுக்குப் பெண்கள் வர வேண்டும் என்பதே என் கனவு.

கேள்வி 5

கேட்பவர் : மார்க் சக்கர்பெர்க்

எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. நாம் இருவருமே குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள்; எனவேதான் என் தாய் தந்தையரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் தாயைப் பற்றிய உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?

முதலில் உங்கள் தாய்க்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தையே இணைக்கும் ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக அவர் பெருமைப்பட வேண்டும்.

என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் இரண்டு பேரை மறக்க முடியாது.

ஒன்று ஆசிரியர்; மற்றொன்று தாய்.

என் தாய் தான் என் வாழ்வின் ஆக்க சக்தி. சிறிய வயதில், நான் டீ விற்றுக்கொண்டிருந்தேன். இன்று உலகின் மாபெரும் குடியரசின் ப்ரதம மதிரியாக வீற்றிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் என் தாய்தா.

என்னைப் பொறுப்புடன் வளர்ப்பதற்காக அவர் உழைக்காத நாளேயில்லை.

{இந்தச் சொற்களை உதிர்க்கையில் தன்னையும் மீறித் தொண்டை செறுமி, கண்ணில் சிறு துளிகள் பனிக்கின்றன. அதைக் கட்டுபடுத்திக் கொண்டு பதிலளிக்கிறார் ப்ரதமர்.}

என் தாய்க்கு  படிக்கத் தெரியாது; ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லுவார்.

தள்ளாத இந்த வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். தினந்தோறும் செய்திகள் கேட்பார்.

என் தாய் மட்டுமல்ல; நம் நாடு முழுவதும் இலட்சக்கணக்கானத் தாய்மார்கள், தங்கள் பிள்லைகளின் கனவுகளை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகின்றனர். அந்தத் தாய்மார்களின் ஆசிர்வாதம் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கட்டும்.

என்று, ப்ரதமர் தன் பதிலை நிறுத்திக்கொண்டவுடன், அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

முகனூலுடன் இணைந்திருப்பது உலகத்துடம் இணைந்திருப்பதற்குச் சமம் என்று கூறிய பிரதமர், இந்த சந்திப்பின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.