Home Blog Page 5999

35 நாட்களில் படப்பிடிப்பு ஓவர்… விரைவில் மிரட்ட வருகிறார் சத்யராஜ்!

“பர்மா” இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.

“ஜாக்சன் துரை” படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது. பர்மா மற்றும் ஜாக்சன் துரை ஆகிய இரண்டு படங்களையும் இயக்குனர் 35 நாட்களில் முடித்துள்ளதால் தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

போஸ்ட் புரடெக்ஷன் வேலை மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கிறது. படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே பெருந்தொகைக்கு “ஜாக்சன் துரை” படத்தின் தமிழ்நாடு திரையிடல் உரிமையை “தேனாண்டாள் பிலிம்ஸ்” வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் “ஜாக்சன் துரை” படத்தை திரையில் காணலாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.8½ கோடி செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி : ஜெயலலிதா அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

கல்வி வளர்ச்சியின் மூலமே மக்களின் பொருளாதார நிலை ஏற்றம் பெறும் என்பதாலும், சமூக பொருளாதார வேறுபாடுகள் களையப்படும் என்பதாலும், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவத்தை எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உயர் கல்வி துறைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் காரணமாக 2011–ல் உயர் கல்வியில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதாவது தற்போது 42.8 சதவீதத்தை எட்டி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

கடந்த 25–ந்தேதி உயர் கல்வித்துறை மூலம் செயல்படுத்த உள்ள பல அறிவிப்புகளை நான் இந்த மாமன்றத்தில் அறிவித்தேன். அப்போது 5 புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் என அறிவித்தேன்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லை. இம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தரமான உயர் கல்வி பெறும் பொருட்டு, தேனி மாவட்டம், வீரபாண்டியிலும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்காக அரசுக்கு ஒரு கல்லூரிக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் வீதம் மூன்று கல்லூரிகளுக்கு 25 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை இதன் மூலம் உருவாகும்.

மேலும், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் அரசுக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பு

கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் இன்று முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர்களின் காரசாரமான விவாதம், எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த வெளிநடப்பு என இந்த கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருந்தது.

இந்த கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம், கேள்வி-பதில் மற்றும் துறைவாரியாக அமைச்சர்களின் அறிவிப்புகளுடன், முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டடார். தற்போது தமிழக சட்டமன்ற கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை இழுத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த டிரைவர், கண்டக்டர் கைது

பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை ஒரு தனியார் பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சுக்குள் இழுத்துச் சென்று, நேற்றிரவு கொடூரமாக கற்பழித்து, சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள ஜான்சி மாநிலம், கோத்வாலி பகுதியில் நேற்றிரவு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவரும், கண்டக்டரும் அந்தப் பெண்ணை பலவந்தமாக இழுத்துச் சென்று, பஸ்சில் வைத்து கற்பழித்தனர்.

அவர்களிடம் இருந்து விடுபட அந்தப் பெண் போட்ட கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பஸ்சுக்குள் ஏறினர். அங்கு அலங்கோல நிலையில் கிடந்த பெண்ணை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், அந்த தனியார் பஸ் டிரைவர் பிரிஜேந்திரா, கண்டக்டர் ஜிதேந்திரா ஆகியோரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் : இரு தங்கைகளை சுட்டுக்கொலை செய்த வாலிபர்

கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து தனது இரு தங்கைகளையும் சுட்டுக்கொன்ற வாலிபர் தலைமறைவாகிவிட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 870 பெண்கள் இதுபோல் கவுரவக்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட லாகூர் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 41-வது வடக்கு சவுக் பகுதியை சேர்ந்த வாலிபரான உமர் ஹயாத் என்பவர், தனது இரு தங்கைகளும் அதேபகுதியை சேர்ந்த இரு வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்து அடிக்கடி அவர்களை அடித்து, உதைத்து தகராறு செய்துவந்தார்.

நேற்றும் இதுதொடர்பாக தனது தங்கைகளுடன் வாக்குவாதம் செய்த அவர், தனது குடும்ப கவுரவத்தை அந்த இரு பெண்களும் சீர்குலைத்து வருவதாக குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டை இரு தங்கைகளுமே மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த உமர் ஹயாத், அந்த இரு பெண்களையும் துப்பாக்கியால் துடிதுடிக்க சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி, தலைமறைவாகினார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், இரு பிரேதங்களையும் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கவுரவக்கொலை என்ற குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி மீண்டும் அக்டோபர் மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்தது. இன்று அவர் நாடு திரும்புகிறார்.

அடுத்த மாதம் (அக்டோபர்) முழுவதும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தவுள்ளார். அவர் பீகாரில் சுமார் 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அதன் பிறகு நவம்பர் மாதம் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இங்கிலாந்து நாட்டு அரசால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

 குஜராத் கலவரத்துக்கு மோடியே காரணம் என்று இங்கிலாந்து கூறி இருந்தது. எனவே மோடியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 நவம்பர் மாதம் 16, 17–ந் தேதிகளில் மோடி இங்கிலாந்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது ஏராளமான முதலீடுகளை ஈர்ப்பதோடு, புல புதிய ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திடுவார்.தீவிரவாதம், சுற்றுச்சூழல் தொடர்பாக அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேச உள்ளார்.

 இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக நவம்பர் 14, 15–ந் தேதிகளில் துருக்கி நாட்டுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அங்கு நடக்கும் ஜி–20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, தடையில்லா மின்சாரம், : தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. வளைகுடா போன்ற குறுகிய எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் செல்வது தவிர்க்க முடியாது. அதனால் வளைகுடா பகுதியை பொது எல்லையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக சட்ட மன்றத்தில் அறிவிக்கப்படும் என பொது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு வழி செய்ய வேண்டும். ஐ.நா.சபையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறாமல் போனதற்கு யார் காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திர திட்டத்துக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வருகிற 1–ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். அதற்கு மத்திய அரசு இடம் கொடுக்கக்கூடாது.

எனது சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. என்னுடைய 2–ம் கட்ட சுற்றுப்பயணம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அதன் பிறகு மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்போம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

மோடி ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே : கி.வீரமணி

மோடி ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே : கி.வீரமணி

கோவை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:–

பெரியார் பதவி ஆசை இல்லாமல் 95 வருட காலம் தொண்டாற்றினார். பாட்டாளி, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்தார். ஜாதியை ஒழிக்க பாடுபட்டார். பெரியாரின் சிந்தனை புரட்சியால் தான் காவல் துறையில் பெண்கள் பலர் உயரதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.

மோடி ஆட்சிக்கு வந்தால் பல மாற்றங்கள் நிகழும் என மக்கள் நினைத்தனர். ஆனால் மாற்றத்துக்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து தமிழகமுதலமைச்சர் பல முறை கடிதம் எழுதியும், கடிதம் மத்திய அரசிடம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேபாளம் நாடு மதசார்பற்ற நாடு என அறிவித்ததும், மோடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார். ஆனால், இலங்கை தமிழர் பிரச்சினையில் ஏன் தலையிடவில்லை.இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் ஐ.நா. மன்றம் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என அறிவித்தது. பன்னாட்டு விசாரணையில் மட்டுமே ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும்.

தற்போது, முதலாளித்துவம் கொண்ட அமெரிக்க நாடு இலங்கையில் உள்நாட்டு விசாரணை போதும் என தீர்மானம் நிறைவேற்றுவது கண்டனத்திற்குரியது என அவர் பேசினார்.