Home Blog Page 6030

சிவகார்த்திகேயனை தாக்கியது அஜித் ரசிகர்கள்!: நடிகர் ஸ்ரீகாந்த் ட்விட்டால் பரபரப்பு

சென்னை:

சமூக இணைய தளங்களில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கினார்கள் என்ற பரபரப்பு இன்னும் ஓயவில்லை, அதற்குள் இதற்குக் காரணம் அஜித் ரசிகர்கள் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கத்தில் வந்த தகவல் அடுத்த சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அஜித் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இதற்கான பின்னூட்டங்களும் அதிகமாக உலவுகின்றன.

நேற்று திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செல்லுகையில் மதுரை விமான நிலையத்தில் அவர் மீது ஒரு கும்பர் தாக்குதல் நடத்தியது. அந்த கும்பல் கமல் ரசிகர்கள்தான் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தச் சம்பவத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலர் #WeSupportSivaKarthikeyan என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி டுவீட் செய்து வருகின்றனர். இது தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கத்தில், ‘சிவகார்த்திகேயனை தாக்கியது அஜித் ரசிகர்கள் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை அஜித் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்த டிவிட்டர் கணக்கும் அனைவரும் பார்க்கும் வகையில் இல்லாமல், ப்ரைவஸியுடன் கூடியதாக, அழைப்பு அனுப்பி அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பார்க்கும் வகையில் உள்ளது.

ஏற்கெனவே இவரது பெயரில் இயங்கும் டிவிட்டர் தகவலில் ‘அஜித் ரசிகர்களை வைத்து முன்னேற வேண்டாம். சொந்த முயற்சியில் சிம்பு முன்னேற வேண்டும்’ என்று குறிப்பிட்டு அது ஒரு பிரச்னையானது. அப்போது ஸ்ரீகாந்த், தான் டுவிட்டர் பக்கத்திலேயே இல்லை, என் பெயரை வைத்து யாரோ செய்த வேலை இது’ என்று கூறி மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவிருக்கிறது  கங்கைக்கு இணையாக போற்றப்படும் ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்  புரட்டாசி திருவோணநன் நாளில் ஏக தின தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்துகொண்டு தீர்த்தத்தை  தெளித்துக் கொண்டால் கங்கையில் நீரடிய பலன் கிடைக்குமமென சாஸ்த்ரங்களும் ஆகமங்களும் கூறுகின்றன இந்த சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்(தெப்பகுளத்தில் ) அன்று காலை பெருமாள் எழுந்தருள்கிறார் காலை 7 மணியளவில் தெப்பகுளத்திற்க்கு வாஸ்த்து சாந்தி ,பிரவேச பலி ,சர்வ தோஷ ,நிவர்த்திக்காக புருஷசூக்த ஹோமம் ,கலசத்தில் வருண ஜெபம் ,கும்பாபிஷேகம் தொடர்ந்து பெருமாளுக்கு தெப்பகுளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெறும் ,பெருமாள் சப்பரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் பிராசதம் விநியோகம்நடைபெறும் மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெ உள்ளது

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவிருக்கிறது  கங்கைக்கு இணையாக போற்றப்படும் ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்  புரட்டாசி திருவோணநன் நாளில் ஏக தின தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்துகொண்டு தீர்த்தத்தை  தெளித்துக் கொண்டால் கங்கையில் நீரடிய பலன் கிடைக்குமமென சாஸ்த்ரங்களும் ஆகமங்களும் கூறுகின்றன இந்த சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்(தெப்பகுளத்தில் ) அன்று காலை பெருமாள் எழுந்தருள்கிறார் காலை 7 மணியளவில் தெப்பகுளத்திற்க்கு வாஸ்த்து சாந்தி ,பிரவேச பலி ,சர்வ தோஷ ,நிவர்த்திக்காக புருஷசூக்த ஹோமம் ,கலசத்தில் வருண ஜெபம் ,கும்பாபிஷேகம் தொடர்ந்து பெருமாளுக்கு தெப்பகுளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெறும் ,பெருமாள் சப்பரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் பிராசதம் விநியோகம்நடைபெறும் மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

தேர்தல் ஆணையம் எங்கள் வசம்: மே.வங்க பாஜக தலைவர் பேச்சு

சுரி (மேற்கு வங்கம்):

தேர்தல் ஆணையம் எங்கள் வசத்தில் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜோய் பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜோய் பானர்ஜி, மயூரேஸ்வர் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது,

தேர்தல் ஆணையம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது, அடுத்த தேர்தல் ராணுவத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினால் தோற்கடிக்கப்பட்டவர் இவர்.

அவர்கள் எங்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அது நடைபெறாது ஏனென்றால் ராணுவத்தின் கண்காணிப்பில் நடத்தப்படும் தேர்தல், தேர்தல் ஆணையம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. என்றார்.

இந்நிலையில், அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இவ்வாறு பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதை அடுத்து,, இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்: மதுரை ஆதீனம்

ஈரோடு:

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஈரோட்டுக்கு வந்திருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், செய்தியாளர்களிடம் பேசியபோது,

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராஜபட்ச மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு தூக்கு தண்டனை பெற்று தர ஐ.நா. சபை முன்வர வேண்டும் என்றார்.

மேலும், தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாமல் பிரிந்துள்ளன. வலுவான எதிர்க் கட்சி இல்லாத காரணத்தால், 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் அறிவிக்க கூடிய எந்த திட்டப்பணிகளும் மக்களை சென்றடையவில்லை என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. தொடர்புடைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பது குறித்து தினந்தோறும் கோட்டையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்ட மதுரை ஆதினம், திருச்செங்கோடு டிஎஸ்பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழக அரசு தயாராகவே இருக்கும். ஏனெனில் இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே அரசு விரும்புகிறது என்று கூறினார்.

விஷ்ணுப்ரியா மரணம்: நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாக, நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
முன்னதாக அவரது மரணத்துக்கு, அவரின் மேலதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விஷ்ணுப்ரியாவின் பெற்றோரும் தோழியும் கூறியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இன்று இந்த விவகாரத்தைக் கையில் எடுத்ததால் இது பெரிதானது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தனுஷ்கோடி – தலைமன்னார் சாலை அமைக்கும் திட்டம்: அடுத்த மாதம் பேச்சு

சென்னை:

தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரூ. 33 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை அமைக்கும் திட்டத்துக்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், அந்தந்த நாடுகளுடன் தரைவழி போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வங்கதேசம், பூடான், இந்தியா மற்றும் நேபாளம் இடையே தடையற்ற வாகன போக்குவரத்துக்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் பி.பி.ஐ.என். மோட்டார் வாகன ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையையும் இணைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அதன்படி தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான 22 கி.மீ., தொலைவு கடலில் பாலம் அமைத்தும், நீருக்கடியில் சுரங்கம் அமைத்தும் இணைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கியும் ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன், இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி இருநாட்டு செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இலங்கையில் அடுத்த மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு விசாரணையே போதும்: 47 நாடுகளுக்கு இலங்கை கடிதம்

கொழும்பு :

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, நீதித்துறை சுதந்திரத்தை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாக போர்க்குற்றத்தை விசாரணை செய்ய, உள்நாட்டு விசாரணையே போதும் என்று தெரிவித்து, 47 நாடுகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, கலப்பு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசு இவ்வாறு கடிதம் எழுதி வருகிறது. மேலும், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை ஆராய, சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் இலங்கையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் அனுப்ப தாமதம்: டாக்டருக்கு சரமாரி அடி உதை

லக்னோ:

உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடியான நேரத்தில், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அரசு டாக்டரை நோயாளியின் உறவினர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் நோயாளி ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சை அழைத்தனர். மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வர தாமதமாகிவிட்டது.

இது தொடர்பாக அரசு டாக்டரிடம் நோயாளியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் மருத்துவமனை விதிமுறைகள் குறித்துகூறினார். இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் டாக்டரை சரமாரியாக தாக்கினார்கள். காலால் எட்டி உதைத்தனர். உடனே மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்து டாக்டரை மீட்டனர். படுகாயம் அடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதனிடையே டாக்டர் தாக்கப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்த ஒருவர் அதை டாக்டரின் ‘வாட்ஸ் அப்’புக்கு அனுப்பினார். டாக்டர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்டசபை தீர்மானத்தால் பயன் ஏதுமில்லை: சுப்பிரமணிய சாமி

சென்னை: 

இலங்கைப் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.

நேற்று மாலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை.

நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து பேசினேன். அப்போது இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ்க் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன. மேலும் உள்நாட்டு விசாரணைக் குழுவில் வெளிநாட்டினர் இடம் பெறலாம் என்றும் ரணில் ஆலோசனை தெரிவித்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நண்பர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.