Home Blog Page 6224

கோடைக்காலம் தொடங்குவதால் தண்ணீர் பந்தல் திறக்க விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை:

கோடைகாலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் பந்தல் திறக்குமாறு தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்கள் இந்தக் கோடையைச் சமாளிப்பதற்கு தேமுதிகவினர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர், நீர்மோர், தர்ப்பூசணி, போன்றவற்றை மக்களுக்கு வழங்கி தாகத்தைத் தணிக்க வேண்டும். தேமுதிக நிர்வாகிகள் கோடை முழுவதும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் மார்ச் 25ல் தாக்கல்: ஒரு மாதம் நடைபெறும் கூட்டத் தொடர்!

TN-assembly சென்னை: தமிழக அரசின் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 25ஆம் தேதி தாக்கலாகிறது. 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் அறிவிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ‘‘மார்ச் 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 25-ந் தேதி அவைக்கு அளிக்க வேண்டும் என்றும் 2015-16-ம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 28-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார். 2014-2015-ம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை 28-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் நாள் குறித்துள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, 25-ந் தேதி தமிழக பட்ஜெட்டை நிதித் துறையத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் 2015-2016-ம் ஆண்டுக்கான வரவு-செலவு, புதிய திட்டங்கள், வரி மாற்றங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன், அன்றைய கூட்டம் முடிந்துவிடும். மரபுப்படி அடுத்தநாள் விடுமுறை. மீண்டும் 27-ந் தேதி சட்டசபை கூடும். அன்று ஆளுங்கட்சி தரப்பில் பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும். இந்த தீர்மானத்தின் மீது அனைத்துகட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். சில தினங்கள் நடக்கும் இந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். பின்பு ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கையை அந்தந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து நிறைவேற்றியவுடன், அந்தந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஏறத்தாழ ஒரு மாத காலம் நடக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று, சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் சபாநாயகர் தலைமையில் நடக்கும் சட்டசபையின் அனைத்துகட்சி தலைவர்களின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்படும். அப்போது எத்தனை நாட்கள் இந்த கூட்டம் நடக்கும், எந்தெந்த நாளில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று முடிவெடுக்கப்படும். அடுத்த வருடம் அதாவது, 2016-ல் தமிழகத்தில் நடைபெறுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…”

10482143_599228513527816_46027082804070919_n

“அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” (உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு”)

சொன்னவர்-டாக்டர் எஸ்,வி.நரசிம்மன். கட்டுரை-எஸ்.லட்சுமிசுப்பிரமணியம். (கட்டுரையின் சாராம்சம்) ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr  S V  நரஸிம்மன் பெரியவாளை தரிசிக்க வந்தார். “கல்கத்தால நல்ல சென்டரான எடத்ல, நல்ல விசாலமா ஒரு வீட்டை வாங்கு. மண்டபம் வெச்ச மாதிரி வீடு. அதுல வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு தனியா ஒரு ஸாமவேத பாடசாலை ஒண்ணை ஆரம்பி! ஏதாவது வீடு இருக்கா?” “அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு வாடகைக் கட்டடத்ல இருக்கு. அது நல்ல சென்டரான எடம்..” “ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த கட்டடத்தை வாங்கிடு! பஜனை ஸமாஜ்காரா அவா பாட்டுக்கு அதுல இருக்கட்டும்.” “அதை வாங்கணும்ன்னா நெறைய ஆகும் பெரியவா….எங்கிட்ட அவ்ளவ் பணம் இல்லியே! ” “எவ்ளோவ் ஆகும்?” “கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!..” பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும் ஆசையாக இருந்தது. அதே சமயம் பணத்துக்கு என்ன செய்வது? என்ற கவலையும் சேர்ந்தது. “நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” புன்னகைத்தார். ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா? பெரியவா சொல்லிவிட்டார் என்பதால் உடனே மெட்ராஸ் வந்தார். அண்ணாத்துரை ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாகஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அன்றே கல்கத்தா போய்ச் சேர்ந்தார். பஜனை ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர் ஆஸுடோஷ் முகர்ஜி, பெரிய்..ய கோடீஸ்வரர். அவரை நேரில் சந்தித்து இது பற்றிப் பேசுவதற்காக அவருடைய பங்களாவுக்குச் சென்றார் நரஸிம்மன்.(அஷ்டோஷ் முகர்ஜி) இவர் உள்ளே நுழைந்ததும் “வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!…” என்றார் ஆஸுடோஷ் முகர்ஜி. இவருக்கோ ஒரே ஆச்சர்யம்!(அஷ்டோஷ் முகர்ஜி) “நேற்று இரவு என்னுடைய கனவில் அன்னை மஹா காளி வந்தாள்! நீங்கள் குடுக்கும் பணம் எதுவானாலும் வாங்கிக்கொண்டு, அந்தக் கட்டடத்தை குடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டாள். அன்னையோட உத்தரவை நிறைவேற்ற, உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பெங்காலியில் மிகுந்த நெகிழ்வோடு கூறினார். திரு.நரஸிம்மன் மானசீகமாக பெரியவாளின் திருவடிகளை நமஸ்கரித்தார். என்ன லீலை இது? “நீ…இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!…” ….என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ…..ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது! பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் “உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு” என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார். உடனேயே  மளமளவென்று  காரியங்கள் நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, “வேத பவன்” என்ற பெயரில் பெரியவா சொன்னமாதிரி ஸாம வேத பாடசாலையும் தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது

திண்டல்கிரி வேலாயுதசுவாமி

thindal

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப, மேற்கு மலை தொடர்ச்சி முழுவதிலும் கந்தக் கடவுளாம் குமரக்கடவுள் குடிகொண்டிரு¢கும் திருக்கோவில் களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வரிசையில், ஈரோடு மாவட்டத்தில், அழகிய ஓர் திண்டு போல் தோற்றம் அளிக்கும் சிறு குன்றின்மேல் அழகிய ஓர் சூழலில் அமைந்துள்ளது.

திருக்கோவில். சுமார்750 வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலாகும். அடிவாரத்தில் அரச மரத்தின் கீழும், படிகள் ஆரம்பிக்கும் இடத்திலும் யானை முகத்தோனை தரிசிக்கலாம். தந்தி முகத்தோனை வணங்கி 109 படிகள் ஏறிச் சென்றால், அழகே உருவான தெய்வீக குழந்தையான முருகப்பெருமான் கையில் வேலுடன் ஈசான்ய திசையை நோக்கி அருட்காட்சி தருகிறார். தனியதோர் அறையில் வள்ளி தெய்வானையுடன் உற்சவமூர்த்தி காட்சி தருகிறார். 1977, 1991, 2001, 2011 என்று முறையாக நான்கு முறை கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. தினமும் நான்கு கால பூஜைகள் செவ்வனே நடைபெறுகிறது. அதுமட்டுமா அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, தைபூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களிலும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சஷ்டி அன்று பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். மேலும் பங்குனி உத்திரம், ஆடி 18, தைபூசம் போன்ற நாட்ளில் தீர்த்த காவடி யும் எடுத்து வருகின்றனர். முருகப் பெருமா னுக்கு தங்க ரதமும் உண்டு. சத்ரு சம்ஹார அர்ச்சனை: முருகப் பெருமானுக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை மிகவும் விசேஷமானது. நமது வாழ்க்கையில் சத்ருக்களால் ஏற்படும் உபாதைகள் மற்றும் தீய தொல்லைள் நீங்க சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நிவர்த்தி கிடைக்கும். இக் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 10.30, 12.30, 5.30 மற்றும் 7.30 மணிக்கு முறையே நான்கு காலங்களிலும் சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கு பின்புறத்தில் தன்னாசி யப்பர் ஜீவசமாதி அமைந்துள்ளது. இச்சித்தர் பெருமான் இங்கு தங்கி முருகப்பெருமானை வழிபட்டதாக கருதப்படுகிறது. இங்கு பக்தர் கள் அமர்ந்து தியானம் செய்தும் வழிபட்டும் செல்கின்றனர். கோவிலை சுற்றி ஊஞ்சல் மரம் இருப்பதால், அதுவே ஸ்தல விருக்ஷமாக கருதப்படுகிறது. மேலும், சற்று இறங்கி சென் றால் அங்கு ஓர் தீர்த்த சுனையும் உள்ளது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்று சிறப்பு மிக்க இத்தலத்திற்கு தனிப்பட்ட திருப்புகழ் ஏதும் இல்லாவிடினும் கவிஞர்களால் தொகுக்கப் பட்ட 100 பாடல்கள் கொண்ட திண்டல்கிரி வேலாயுதசாமி சதகம் என்று ஒன்று உள்ளது. மேலும் இத்திருக் கோவிலில் உள்ள முருகப் பெருமான் பலர் கனவில் வேட உருவத்திலும், குழந்தை வடிவிலும் சென்று காட்சி தந்து கோவிலுக்கு வரவழைத்து ஆட்கொண்ட தாகவும் அர்ச்சகர் திரு செந்தில் நாத குருக்கள் தெரிவித்தார். இவ்வருள் வள்ளலை வாய்ப்பு கிடைப்பின் அவசியம் தரிசிக்கலாமே. கட்டுரை: முனைவர் சாந்தி விஸ்வநாதன், கோவை

“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…””

“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”” (நேற்று 16-03-2015 பொதிகை டிவி,யில்) தினமும் காலை 7 மணிக்குஇந்திரா சௌந்திரராஜன் காஞ்சி பெரியவர் பற்றி உரையாற்றுவார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிடும்போது. ‘பெரியவாள் தன் ஞாபக சக்தியை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்த சம்பவம் நிகழப்படவில்லை. ஒரு சதாவதானி கூட இதை சொல்ல முடியும் . முத்தாய்ப்பு ஒன்று வைத்தாரே!-‘ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே’அதுதான் ஹைலைட். அது நமக்காக,) தொகுத்தவர்-டி,எஸ்.கோதண்டராம சர்மா. முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும், தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி. பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள். கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள். பெரியவாள் கேட்டார்கள்: “இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?” “ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.” “கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…” “அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…” “ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…” “ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…” “அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?” “சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…” “எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?” “ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..” “வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?” “புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..” “ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தையே…நடக்கிறதா?” “கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”246400_479182102136836_1433845875_n கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை! கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள். அப்போது பார்த்தது, கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ? பாட்டி சொன்னாள், “பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….” பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போலே, ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தவர்களையெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்! “ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…? ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…” மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை? கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன? பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?

தென் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மாற்றம்

நெல்லை: தென் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம்… 1.சுமித்சரன்—நெல்லை சரக டி.ஐ.ஜி.—- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. 2.முருகன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி— நெல்லை சரக டி.ஐ.ஜி. 3.துரை— தூத்துக்குடி எஸ்.பி.—– சிவகங்கை மாவட்ட எஸ்.பி. 4.அஷ்வின் கோட்னிஸ் — சிவகங்கை மாவட்ட எஸ்.பி.—- தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. 5.நரேந்திரன் நாயர்—— நெல்லை எஸ்.பி.—— விழுப்புரம் எஸ்.பி 6.விக்கிரமன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.—- நெல்லை எஸ்.பி. 7.சாந்தி எஸ்பி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு —— மதுவிலக்கு புலனாய்வு பிரிவு எஸ்.பி. 8.தேவராணி எஸ்பி .மதுவிலக்கு புலனாய்வு பிரிவு ——எஸ்பி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு.

ஃபைபர் ஆப்டிகல் மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இராணி

புது தில்லி: மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் தகவல், தொலைத் தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தை தற்போது அமல்படுத்தி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் திறனை அதிகரிக்கவும், எப்போதும் எங்கு வேண்டுமானாலும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களுக்கும் இது உதவும். இந்த இயக்கத்தின் கீழ், தேசிய மேம்பட்ட பயிலும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பொறியியல், அறிவியல் துறைகளின் 810 பாடப்பிரிவுகள் இணைய தளத்தில் ஏற்கனவே உள்ளன. ஊடக மையங்களும் கல்வி தொடர்பு சங்கமும் இணைந்து எட்டு இளநிலைப் பாடங்களுக்கு இணைய உள்ளடக்கத்தைத் தயார் செய்துள்ளன. 770 பரிசோதனை கொண்ட ஒன்பது பொறியியல் அறிவியல் துறைகளில் 126க்கும் மேற்பட்ட கணிணி ஆராய்ச்சி கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. 1500 குரல் வழி இணையதளத்தில் உள்ளன. வடிவமைப்புகாகவும் பல்வேறு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல், தொலைத்தொடர்பு மூலம் தேசிய கல்வி இயக்கத்தின் கீழ் ஒரு ஜி.பி.பி.எஸ் கண்ணாடி இழை மூலம் 403 பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (மகாராஷ்டிரா உட்பட நாட்டில் பல்கலைக்கழகங்கள் அளவிலான நிறுவனங்கள்) இணைக்கப்பட்டுள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி மக்களவையில் இன்று தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நெல்லையைச் சேர்ந்த 3 பேர் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இன்று இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயம் அடைந்தனர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி(45) அங்குள்ள முருகன் கோயிலில் அர்ச்சராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு, உறவினர்களான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த கிட்டு என்ற கிருஷ்ணன்(45), அவரது நண்பர்கள் 5 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விருந்தினர்களாக வந்து தங்கியிருந்தனராம். பின்னர் இங்கிருந்து ஒரு வாடகைக் காரில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலிக்குத் திரும்பியுள்ளனர். அந்தக் காரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சேவுகராஜன்(35) என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் சென்ற கார், அருப்புக்கோட்டையை அடுத்த சுக்கிலநத்தம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் கிட்டு என்ற கிருஷ்ணன்(45), அவரது நண்பர்களான இசக்கிமுத்து(42), மணிகண்டன்(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த பாலமுருகன்(32), ராமு(36) ஓட்டுநர் சேவுகராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வு: மே 4 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  இந்த நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுவையில் நுழைவுதேர்வு நடக்கிறது.ஆன்லைன் மூலம், மே மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பொது பிரிவு, ஓ.பி.சி., ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு பிரிவினர்கள் ரூ.800 செலுத்த வேண்டும்.ஜிப்மர் நுழைவு தேர்வு மொத்தம் 200 வினாக்கள் என்ற வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு, கடந்தாண்டு 90 ஆயிரம்மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்கள் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் தகவல்களுக்கு ஜிப்மர் இணையதளத்தை பார்க்கலாம்.

நெல்லையில் 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ம்தேதி அன்று எரிவாயு 

நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. 
இதுகுறித்து ஆட்சியர்  கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு  செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம்,
முறைகேடுகள் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக  அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு  நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் வருகிற 24ம்தேதி அன்று பிற்பகல்  4 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய்  அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள்  தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.