நார்வேயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2014-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘குக்கூ’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘காவியத் தலைவன்’ படத்தில் நடித்த சித்தார்த் தேர்வாகியிருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருது ‘காவியத் தலைவன் படத்திற்காக வேதிகாவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குனராக வசந்தபாலன், சிறந்த ஒளிப்பதிவாளராக வெற்றிவேல் மகேந்திரன் கயல் திரைப்படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளராக ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களுக்காக சந்தோஷ் நாராயணன் தேர்வாகியிருக்கின்றனர். சிறந்த பாடகிக்கான விருது ‘என்னமோ எதோ’ படத்தில் புதிய உலகை என்ற பாடலை பாடியதற்காக வைக்கிறோம் விஜயலட்சுமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘காவியத் தலைவன்’ படத்தில் வரும் “வாங்க மக்கா வாங்க ” பாடலுக்காக ஹரிச்சரனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடலாசியர் விருது ‘குக்கூ’ படத்திற்காக யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது அமரர்.இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்காக இயக்குனர் ர.பார்த்திபன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. கே.எஸ்.பாலச்சந்திரன் விருது நடிகர் விவேக் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நார்வே தமிழ் திரைப்பட விழாவில் “தமிழர் விருதுக்காக” தமிழ்நாட்டுக்கு அப்பால், தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள படங்களும், கலைஞர்களும். சிறந்த படமாக கே.எஸ் துறை இயக்கத்தில் வெளியான உயிர்வரை இனித்தாய் திரைப்படமும், சிறந்த இயக்குனராக ஸ்டீபன் அவர்களும்(9C ஒஸ்லோ ), சிறந்த நடிகராக ஜெயசாந் கனகலிங்கம் (9C ஒஸ்லோ) அவர்களும், சிறந்த நடிகையாக நேர்வினி டெரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 26-ந் தேதி நடக்கவுள்ளது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=ifHkKaTjf1E”]
6 வது நார்வே தமிழ் திரைப்பட விழா 2015 -தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த திரைப்படமாக “குக்கூ” தேர்வு
மலேசிய விமானக் கண்காட்சியில் வெடித்துச் சிதறிய 2 விமானங்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் பயிற்சியின் போது 2 விமானங்கள் நடுவானில் வெடித்துச் சிதறின. அதில் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் உடனே குதித்துத் தப்பினர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமானக் கண்காட்சி நாளை துவங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் இந்தோனேஷியா உள்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் பங்கேற்கின்றன. இந்நிலையில், லங்காவி தீவில் நேற்று மாலை இந்தோனேஷியாவைச் சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கை மற்றொரு விமானத்தின் இறக்கையில் உரசியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்துச் சிதறின. இந்த 2 விமானங்களிலும் இருந்த 4 விமானிகளும் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினர். விமானங்களில் இருந்து வெடித்துச் சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகள் மற்றும் கார்களில் பட்டு எரிந்ததால், அவையும் தீப்பிடித்து சேதமடைந்தன. பாராசூட் மூலம் தரையில் குதித்து படுகாயம் அடைந்த 4 விமானிகளும் பின்னர் லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்சாமுதீன் ஹுசைன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். (ஏபிசி நியூஸ்) https://www.youtube.com/watch?v=xI_hvGMZYG4
ஈராக் திக்ரித்தில் சதாம் கல்லறை சண்டையில் சேதம்
பாக்தாத்: ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து ராணுவம் மீட்டெடுத்த திக்ரித் பகுதியில், சதாம் உசேனின் கல்லறை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக ராணுவம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கின் திக்ரித் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்க ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போரிட்டது. அதைத் தொடர்ந்து சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அவரது உடலை அதில் இருந்து தோண்டி, வேறு இடத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கல்லறை மட்டும் இருந்தது. இந்நிலையில், அங்கே சண்டை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதலில் சதாம் உசேன் கல்லறை முற்றிலும் அழிந்து சேதம் அடைந்தது. தற்போது அங்கு கான்கிரீட் கூரைகளின் இடிபாடுகள் மட்டுமே கொட்டிக் கிடக்கின்றன. தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரித் பகுதியை மீட்டு விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
ரயில் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
புதுதில்லி ரயிலில் பயணச் சீட்டு பெற்ற பின்னர் பணம் செலுத்தும் புதிய வசதி குறிப்பிட்ட இணையதளம் மூலம் ஜன.1 அன்று தொடக்கப்பட்டதாக அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். மத்திய ரயில்வே துறையின், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இ-டிக்கெட் சேவைக்கு, பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டத்தை 01.01.2015 அன்று முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கீழ்வரும் இணைய தளங்கள் மூலம் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் வசதி அல்லது இணைய வழி பணம் செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். i. www.bookmytrain.com ii. Bookmytrain App on Android platform. iii. Bookmytrain App on Windows platform. iv. Bookmytrain App on BlackBerry platform. v. Bookmytrain App on iOS platform. பயணம் தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தங்களது பயண சீட்டை பதிவு செய்யலாம். பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் வேகமாக பெருகிவரும் கருத்துகளை வைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் இன்று தெரிவித்தார்.
டிராபிக் ராமசாமிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
சென்னை: தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிராபிக் ராமசாமி, ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது: ரணில் மீண்டும் உறுதி
புது தில்லி: எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வி.க்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், “இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும், யாராவது எங்களது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் அவர்களைச் சுடும் உரிமை இலங்கைக் கடற்படைக்கு உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல” என்று கூறியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன்னால், சென்னையில் இருந்து இயங்கும் செய்தி சேனலான தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ரணில் விக்ரமசிங்க, “அனுமதியின்றி என்னுடைய வீட்டுக்குள் யாரேனும் நுழைந்தால், அவர்களை நான் சுட முடியும், அதனால் அவர்கள் உயிரிழக்கலாம். நான் இதனைச் செய்ய சட்டம் அனுமதித்துள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழையும் மீனவர்களைச் சுட கடற்படைக்கு அதிகாரம் உள்ளது,” என்று கூறினார். ரணீலின் இக்கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இப்படி தெரிவித்திருக்கக் கூடாது என்று அவர் வருத்தம் தெரிவித்ததாக சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் மீண்டும் அதே கருத்தையே ரணில் இப்போது தெரிவித்துள்ளார். விக்ரமசிங்க மேலும் கூறுகையில், இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், இரு நாடுகளும் மீனவர் பிரச்னையை சுமூகமாகப் பேசித் தீர்க்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
தில்லியில் காங்கிரஸாரின் போராட்டம்; தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். லேசான தடியடியும் நடத்தப் பட்டது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் இன்று தில்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை இளைஞர் காங்கிரசார் பேரணியாகப் புறப்பட்டு வந்தனர். பேரணியில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த்சர்மா, அம்பிகா சோனி, ரேணுகா சௌத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, ராகுல் காந்தி வீட்டில் உளவுத் தகவல் சேகரித்து, மன்மோகன் சிங்குக்கு நிலக்கரிச் சுரங்க முறைகேடு விவகாரத்தில் சம்மன் அனுப்பப் பட்டது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நாடாளுமன்ற சாலை அருகே வந்ததும் போலீசாரின் தடுப்புகளையும் மீறி தொண்டர்கள் செல்ல முயன்றனர். இதனால், போலீஸாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து லேசான தடியடியும் நடத்தப்பட்டது. எம்பி ராஜ்பாப்பர் தலைமையில் ரந்தீப் சூரஜ்வாலா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். ரந்தீப் சூரஜ்வாலா பேசும்போது, விவசாயிகளுக்கு எதிராக் பாஜக அரசு செயல்படுகிறது என்பதை இன்று வெளிப்படுத்தி விட்டது என்றும் அதை எதிர்த்து காங்கிரஸ் போராடும் என்றும் கூறினார்.
ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி: ஆபத்தான நிலையில் சிகிச்சை
மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் – மாண்ட்சோர் மாவட்ட எல்லையில், ரத்லாம்- ஆக்ரா போர்ட் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது 8 வயதுச் சிறுமி ஒருவர் பொதுப் பெட்டியில் இருந்து திடீரெனத் தூக்கி வீசப்பட்டார். ரயிலில் இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுமியின் தந்தை கான்வர்லால், ரத்லாமில் இருந்து நிம்பாகெராவுக்கு அந்த ரயிலில் சென்றுள்ளார். அப்போது, இருக்கையில் அமர்வதற்காக ஏற்பட்ட தகராறில் முகமத் தஸ்லிம் (45) என்பவர் சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளார். அந்தச் சிறுமியின் தந்தை கன்வர்லால் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு எழுந்து சென்ற நேரத்தில், அந்தச் சிறுமியை முகமது தஸ்லிம் அவ்வாறு ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளாராம். கீழே விழுந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தண்டவாளத்தின் அருகே விழுந்த அந்தச் சிறுமியை போலீசார் பார்த்துள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரயில்வே போலீசார், முகமது தஸ்லிம்மை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி தூக்கி வீசப்பட்டது தொடர்பாக போலீஸார் தகவல் அறிந்ததும், அந்த ரயில், அடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. முகமது தஸ்லிம் அங்கே கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அரசுத் திட்டங்களைப் பெற ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: அரசின் நல திட்டங்களின் பலனைப் பெறுவதற்கு ஆதார் அட்டை எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது நிலையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை குறித்து கட்டாயப்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டின் உத்தரவை பின்பற்றுமாறும் அது மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டும் 2013 அக்டோபரில் ஆதார் எண்ணை அரசுத் திட்டங்களைப் பெற கட்டாயமாக்க வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை தள்ளுபடி செய்தது தனி நீதிமன்றம்.
ரோஹித், ஜடேஜா குறித்து கவலையாக உள்ளது: தோனி மனம் திறந்த கருத்து
உலகக் கோப்பை தொடரில் ரோகித் மற்றும் ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து கேப்டன் தோனி மனம் திறந்த கருத்து தெரிவித்துள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறது. விளையாடிய லீக் சுற்றின் முதல் கட்ட ஆறு போட்டிகளிலும் அனைத்திலும் வென்றுவிட்டது. மேலும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்த ஆறு போட்டிகளில் முதல் ஐந்து போட்டிகளில் வெற்றி சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஆக்லாந்து போட்டியில் துவக்க வீரர்கள் ரன் சேர்க்கத் தடுமாறி ஒரு அச்சத்தை ஏற்படுத்தினர். இருப்பினும், ஒருவர் நன்றாக விளையாடாவிட்டாலும் வேறு ஒருவர் நன்றாக விளையாடி அதை சரி செய்து விடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயம் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்திய அணி வரும் 19ஆம் தேதி அன்று காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பெரிய அளவில் விளையாடி பெயர் சேர்க்கவில்லை. அதுபோல், துவக்கம் முதலே ரவிந்திர ஜடேஜா, அணிக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவுக்கு அணி நிர்வாகம் அதிகம் செலவழித்துள்ளது. அவரது காயம் இன்னொரு பலவீனமாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆக்லாந்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் ஒரே ஓவரில் 25 ரன் கொடுத்து, அந்த அணியின் கேப்டன் டெய்லர் ரன் சேர்க்க ஜடேஜாவின் பந்து வீச்சு உதவியது. ஆனாலும், ஜடேஜா பேரில் நம்பிக்கை வைத்து அதற்கு அடுத்த ஓவரையும் அவரே வீசுவதற்கு தொடர்ந்து தோனி கொடுத்தார். அவருடைய நம்பிக்கையை வளர்ப்பதற்கு இது உதவியதாக விமர்சகர்கள் கூறினர். ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் கவலைக்குரியதாக கணிக்கப்பட்டாலும், ஜிம்பாப்வே போட்டியில் 71 ரன்களைக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காத அவரது பந்துவீச்சும் இப்போது கவலையைக் கொடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா குறித்து தோனி கூறியபோது, ஜடேஜாவின் ஆட்டம் வேதனையாகவுள்ளது. இருப்பினும் அவர் களத்தில் நன்றாகவே பந்து வீசுகிறார். அவர் மேலும் தனது ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும். இருந்தாலும், அவர் அணியின் முக்கிய நபர். கடந்த உலகக் கோப்பை முதல் அவரை மேம்படுத்த பல வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.. அதற்கு ஏற்றவாறு ஜடேஜாவுக்கு களத்தில் வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை என்றார். ஆல்ரவுண்டரான ஒரு சுழற்பந்து வீச்சாளரால் பெரிதும் எதிரணியை சீர்குலைத்து விட முடியாதுதான். ஆனாலும் ஜடேஜா முதல் இரு போட்டிகளில் சரியாக செயல்பட்டார். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டிகளில். ஆனால் இது குறித்து தோனி கூறியபோது, ஆக்லந்து போட்டி குறித்து அதிகம் கவலைப்படவில்லை. அதில் எல்லைக்கோடு குறைவான நீளமே கொண்டது. அஸ்வின் பந்துவீச்சில் கூட ரன் எடுத்துவிட முடியும் என்று கூறினார். அவரின் நம்பிக்கை, வரும் போட்டிகளிலும் ஜடேஜா நிச்சயம் விளையாடும் அணியில் இருப்பார் என்பதை வெளிக்காட்டுகிறது. அதே நேரம், 6 இன்னிங்சில் பங்கேற்று மொத்தம் 159 ரன்கள் எடுத்துள்ள ரோஹித் சர்மா நிலை அடுத்த கேள்விக் குறி. ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து கேப்டன் தோனி கூறுகையில், ரோகித்தின் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. அவரால் ரன் குவிக்க முடியவில்லையே தவிர, ஆட்டத்திறனில் எவ்வித மாற்றமும் இல்லை. விரைவில் ரோகித்தின் நிலை மாறும் என நம்புகிறேன்… என்றார். ரோஹித், ஜடேஜா இருவர் குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் குறித்த கவலையை ஜிம்பாப்வேயுடனான போட்டியின் பிறகு தோனி பகிர்ந்து கொண்டார். ரோஹித் எவ்வளவு ரன் அடிக்கிறார் என்பது முக்கியமல்ல, எவ்வாறு பேட்டிங் செய்து எந்த முறையில் தன் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார். 31.8 ஓவர் விளையாடி இரண்டு அரை சதம் அடித்து 159 ரன் எடுத்துள்ள ரோஹித்தின் ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிகிறது என்பது தோனியின் எண்ணம். அந்த இரண்டு போட்டிகளும் யுஏஇ (57) மற்றும் அயர்லாந்த்(64) ஆகிய அணிகளுடன். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே நபரான ரோஹித்தின் தற்போதைய தடுமாற்றம் தோனிக்கு ஒரு அணித் தலைவராக உள்ளூர கவலையை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிகிறது. ரோஹித்தின் ஃபார்ம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், துவக்கம் சரியாக அமையாத பட்சத்தில், நடுவரிசைதான் அணியை தாங்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். இந்நிலையில், நடுவரிசை குறித்து கருத்து தெரிவித்த தோனி, ரோஹித் போதுமான அளவு செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இதனிடையே ரோஹித், ஜடேஜா இருவரும் இந்த உலகக் கோப்பையில் திணறி வருவதாகவும், ஆனால், இந்தியா அவர்கள் இருவரையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜான்டி ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தின் பின்னர் அவர் கருத்து தெரிவித்தபோது, தோனி, ரெய்னா ஆட்டத்தை வீடியோவில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் குறித்து கேள்விகள் எழுகின்றன. இந்த உலகக் கோப்பையில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து தோனியும் கருத்தில் கொள்ள வேண்டும். அஜிங்யா ரஹானேவை துவக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறக்கிவிட்டு, ரோஹித்தை பின்வரிசையில் இறக்கலாம்… என்றார் ஜாண்டி ரோட்ஸ்.

