இஸ்லமாபாத்: மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான லக்வி விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’ மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் லக்வி பாகிஸ்தானில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பாகிஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதே வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாகவும் இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகும் ஆப்கானியர் ஒருவரை கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தம்மை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாக அவர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி லக்வி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு தவறிவியதால் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து லக்வி எந்நேரமும் விடுவிக்கப்படலாம். ஆனால் லக்வியை விடுவிக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி விடுதலை: இந்தியா கண்டனம்
இது ‘இங்கிலாந்தின் மகள்’: நிர்பயா ஆவணப் படத்துக்கு பதிலடி
புது தில்லி: தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த விவகாரத்தில், திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளி தினேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து, ஆவணப் படம் ஒன்றை உருவாக்கினார் பிரிட்டிஷ் பெண் லெஸ்லீ உட்வின். இது இந்தியாவில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த ஆவணப் படத்தில் தினேஷ் சிங் கூறிய கருத்துகள், இந்தியாவில் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. எனவே, அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தடையை மீறி, உலக அளவில் அந்த ஆவணப் படத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்பியதுடன், யுடியூப் இணையத்தில் பதிவேற்றி, பலர் அதனைப் பார்க்க வழி செய்தது. இந்நிலையில், இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பி, இந்தியாவை மோசமான வகையில் சித்திரித்த லெஸ்லி உட்வினின் ஆணவத்தை கண்டிக்கும் வகையில், இங்கிலாந்தின் மகள் என்ற ஆவணவப் படத்தை எடுத்துள்ளார் இந்தியர் ஒருவர். இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துக் காட்டும் வகையில், இங்கிலாந்தின் மகள் ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளார். இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள ஹர்வீந்தர் சிங், பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளனர் என்றார். இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்குக் காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்று ஹர்வீந்தர் சிங் குற்றம் சாட்டுகிறார். இந்த ஆவணப் படம் இப்போது பதிலுக்கு பதிலாகக் கூறப்படுகிறது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=twUmDDMX9tU”]
சபரிமலை பங்குனி உத்திர திருவிழாவுக்காக நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக 24-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கும். மாசி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை கடந்த மாதம் 17-ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. அதன் பின்னர் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை 5.30-க்கு திறக்கிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். எல்லா நாட்களிலும் காலை 5.15 மணி முதல் பகல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். இந்த நாட்களில் உதயாஸ்மனபூஜை, சகரஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற பூஜைகளும் நடைபெறும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக வரும் 24-ம் தேதி மாலை நடை திறக்கிறது. 25-ம் தேதி காலையில் கொடியேற்று விழா நடக்கிறது, தொடர்ந்து விழாவில் தினமும் இரவு ஸ்ரீபூதபலி என்ற நிகழ்ச்சி நடக்கிறது. 26-ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் ஏப்ரல் 2ஆம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உற்சவபலி நடக்கிறது, 9ஆம் நாள் விழாவில் இரவு சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். 3ஆம் தேதி காலை எட்டு மணிக்கு யானை மீது சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.இதற்க்கான ஏற்பாடுகளை சபரிமலை தேவசம் போர்டு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
எதிர் வரும் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் இல்லை: தோனி
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் எதிர்வரும் போட்டிகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யப் போவதில்லை என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நாளை மார்ச் 14ம் தேதி, இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில், தற்போதுள்ள சூழலில் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறினார். மேலும் வீரர்கள் அனைவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். ஒருவேளை திடீர் காயம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றார். களத்தில் பங்கேற்கும் போது பிட்சுக்கு ஏற்றவாறு செயல்படுவதே இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்திலும் பிட்ச்கள் சற்று வேறுபட்டு காணப்படும் அதை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும். மேலும் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது பேட்ஸ்மென்கள் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர் என்றார்.
தற்கொலை செய்த நெல்லை வேளாண் அதிகாரி டைரியை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
நெல்லை: நெல்லை வேளாண் துறையில் உதவி செயற்பொறியாளாராகப் பணியாற்றிய திருமால்நகரை சேர்ந்தச் முத்துகுமாரசாமி (57) கடந்த 20ந்தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு முத்துகுமாரசாமியின் உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள், பணி நியமனம் செய்யப்பட்ட ஓட்டுநர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், முத்துகுமாரசாமியின் டைரியைக் கைப்பற்றி, அதில் முத்துக்குமாரசாமி எழுதிவைத்துள்ள பண விவகாரம் குறித்த தகவல்கள், அலுவலகக் குறிப்புகள், அரசியல் பிரமுகர்களின் பெயர்கள்ஆகியவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: கொலை என விசாரணையில் தகவல்
பெங்களூரு: பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், முதல்கட்ட விசாரணையில் யத்தீஷ் தனது தாய்-தந்தை, 3 சகோதரிகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து அவர்களைக் கொன்றுவிட்டு, பின்னர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. யத்தீஷ் எதற்காக தனது குடும்பத்தினரைக் கொலைசெய்தார் என்பது தெரியவில்லை என்றும், கொலைசெய்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏன் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20ந்தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்து போராட்டம்: கருணாநிதி
சென்னை: 20ந் தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்தும் போராட்டம்நடத்தப் படுமென -கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; கட்சிப் பேதமின்றி அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளைகளோ கேட்கவே வேண்டியதில்லை. எனவே, மத்திய அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றிவிட்டு,மாநிலங்களவையிலும் நிறைவேற்றிட முயற்சிப்பதைக் கண்டித்தும்; அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமான அமைச்சர் மீதுகுற்ற நடவடிக்கைகள் எடுத்து, அவரை உடனடியாகக் கைது செய்வதோடு,வழக்கினை சி.பி.ஐ. மூலமாக விசாரிக்க ஒப்படைத்திட வேண்டு மென்பதை வலியுறுத்தியும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 20-3-2015அன்றுவெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், அனைத்து வருவாய்மாவட்டங்களிலும் ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்னால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் கருப்பு தினம்: உம்மன் சாண்டி
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரள சட்டசபையில் நிதியமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை இன்று நடத்தின. இதனால் அடிதடி ரகளை ஏற்பட்டு, சபையே போர்க்களம் போல் காட்சியளித்தது. இத்தகைய ஒரு நிகழ்வு ஒரு கறை என்று கருத்து தெரிவித்துள்ள உம்மன் சாண்டி, கேரள சட்டசபை வரலாற்றில் இன்று கருப்பு தினம். சட்டசபைக்குள் எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் வேதனையை தருகிறது. சபையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் இவ்வாறு போராடுவது மன்னிக்க முடியாத குற்றம். போராட்டக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். [su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”7″ tax_term=”212″ tax_operator=”0″ order=”desc”]
நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் 15 ம் தேதி துவக்கம் : முத்துக்கருப்பன்
நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் 15ம் தேதி துவங்குகிறது . இதுகுறித்து நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவுப்படி நெல்லை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. தங்கள் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறும் இடங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மண்டல தேர்தல் குழு பொறுப்பாளராக அமைச் சர் நத்தம் விஸ்வநாதன், தேர்தல் ஆலோசகர்களாக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ராசு, கொள்கை பரப்பு துணை செயலா ளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவர். நெல்லை, தச்சநல்லூர் பகுதி கழக தேர்தல், மானூர் வடக்கு, தெற்கு, சங்கர்நகர், நாராணம்மாள்புரம் பேரூராட்சி தேர்தல் டவுன் ராஜமயில் திருமண மண்டபத்திலும், பாளை, மேலப்பாளையம் பகுதி கழக தேர்தல் பாளை அருண்ஸ் மகால், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் வடக்கு, தெற்கு ஒன்றியம், திருவேங்கடம் பேரூர் கழக தேர்தல் சங்கரன்கோவில் ஜெய்சாந்தி திருமண மண்டபத்தில் நடக்கிறது. வாசுதேவநல்லூர் ஒன்றியம், சங்கரன்கோவில் ஒன்றிய கழக தேர்தல், புளியங்குடி நகரம், வாசுதேவநல் லூர், சிவகிரி, ராய கிரி பேரூர் கழக தேர்தல் சிவகிரி ஆர்கே நாச்சியார் திருமண மண்டபம், கடையநல்லூர், செங்கோட்டை, தென்காசி ஒன்றியம், செங்கோட்டை நகர கழக தேர்தல், கடையநல்லூர் நகரம், புதூர், அச்சன்புதூர், ஆய்குடி, சாம்பவர்வட கரை, வடகரை, பண்பொழி பேரூர் கழக தேர்தல் செங்கோட்டை பார்டர் இந்திரா திருமண மண்டபத்திலும் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

