Home Blog Page 6289

நான் (பொட்டை) குருடுதான்

நான் (பொட்டை) குருடுதான்) கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன்.10482143_599228513527816_46027082804070919_n சீடர்களைச் சீண்டி விளையாடியது மட்டுந்தானா? குருவான தம்மையுமே எப்படியெல்லாம் பரிஹஸித்துக் கொண்டிருக்கிறார்? சிறக்க வைக்கும் சிரிப்பாக மட்டுமன்றி உருக்க வைப்பதாகவும், உள்ளம் குருதி சுரக்க வைப்பதாகவும்கூட ஹாஸ்யம் செய்து கொண்டிருக்கிறார். ‘OUR SINCEREST LAUGHTER ‘WITH SOME PAIN IS FRAUGHT’ என்ற கவி வாக்கு எவ்வளவு உண்மை எனக் காட்டும் நகைச்சுவையில் தம்மையே நையாண்டி செய்து கொண்டிருக்கிறார். பெரியவாள் காடராக்ட் ஆபரேஷன் ஆகிச் சில நாட்களுக்குப் பிறகு. ஓர் அம்மாள் பெரியவாள் திருமுன் திடுமெனப் பாட ஆரம்பிக்கிறாள் பொருத்தமான.பாடல் குரு ப்ரசம்ஸை யாகத் தியாகையர் அருளியுள்ள “நீ சித்தமு நிர்மலமு நிச்சலமநி” என்ற தந்யாஸி ராகப் பாடல். சாஸ்திர தர்மத்திற்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்ந்து காட்டிய ராமபிரானை குருஸ்வரூபமாகத் துதிக்கும் பாடலை, அதே குண நலம் படைத்த நம் குருவின் முன் பாட வேண்டுமென்று அப்பெண்மணிக்குத் தோன்றியது மிகப் பொருத்தந்தான். ஆயினும் உச்சரிப்பு சரியாயிருக்க வேண்டும் என்ற முக்யமான அம்சத்தைக் கவனிக்கவேயில்லை. ஸம்ஸ்கிருதத்திலும்,தெலுங்கிலும் க,ச,ட,த,ப முதலியவற்றிலுள்ள வல்லொலி, மெல்லொலி மாறுபாடுகளைக் கவனிக்காமல் பாடினாள். கிருதியில் ஓரிடத்தில் குரு அஞ்ஞான இருளைப் போக்கும் ஞான சூரியனாதலால் “குருடே பாஸ்கரடு” என்றும், அடுத்து அவரே மங்கலம் நல்குபவர் என்பதால் “குருடே பத்ருடகு” என்றும் வருகிறது.இவ்விரு இடங்களிலும் “gurude” என்பதை அவள் “Kurude” என்று பாடியது,”நல்ல பாட்டைக் கெடுக்கிறாளே!” என்று வருத்தம் தந்தது. அவள் போன பிற்பாடு குருநாதர் “குருடு” பற்றிக் குறிப்பிட்டார். குருடு மட்டுமின்றிச் செவிடுமாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர். அவள் அவ்வளவாக உரத்த குரலில் இன்றி, அதிலும் பேச்சாக இன்றிப் பாட்டாகப் பாடியதில், ku-வுக்கும் gu-வுக்கும் எப்படி மாறுபாடு கண்டாரோ? “அவ பாடினது மட்டுமில்லே, நீ எழுதினாலும் அப்படித்தானே போடுவே?” என்று சீண்டினார்’!. ஆம் தமிழில் ga-கார, ka-காரங்கள் இரண்டிற்கும் ஒரே ‘க’தானே போட வேண்டும்? “பொட்டை,பொட்டை….! இந்த gurudu நெஜமாகவே kurudu-தான். நெஜத்தைத்தான் அவ பாடிட்டுப் போய்ட்டா.(கண்களைத் தொட்டுக்கொண்டு). இந்தக் குருட்டை ஆபரேஷன் பண்ணி ஸரி ஆக்கலாம்.ஆனா, பூரணமான குரு-ன்னா இருக்க வேண்டிய ஞான த்ருஷ்டியிலே நான் (பொட்டை) குருடுதான். அதை ஆபரேஷன் ஸரி பண்ணாது!” என்று ஒரு போடு போட்டார். இது ‘குருடு”வை வைத்து செய்தது,”மடாதிபதி” “பீடாதிபதி” என்பவைகளை வைத்து அவர் சிரித்துச் சிரித்து ஒரு சமயம் சொன்னதும் அவரொருத்தரால்தான் முடியும்.

அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற வலுவான தலைவர் ஹிட்லர்: காங்கிரஸ் டிவிட்!

cong-tweetsபுதுதில்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்த கருத்தை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளது. ஹிட்லருக்கு இருந்த அரசு மிகவும் பலமான அரசு. ஆனால், ஹிட்லர் ஜெர்மனியை எவ்வளவு தூரம் அழிவுப்பாதையில் கொண்டு சென்றார்…. -என்று கருத்து தெரிவித்திருந்தார் ரகுராம் ராஜன். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன், நமது நாட்டில் மிக வலுவான அமைப்பு ரீதியான அடித்தளங்கள் உண்டு. நீதித்துறை, எதிர்க்கட்சி, ஊடகம், என்.ஜி.ஓ., ஆனால், அரசும் செயல்படுத்தும் விதமும் இன்னும் வலுவாக வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆளும்போது, அரசு நிர்வாகம் மிகச் சரியாக இருந்தது. ரயில்கள் குறித்த நேரத்தில் வந்தன. நமது நாட்டில் 1975-77 நெருக்கடி நிலையின் போதான சூழல் போல்! அவரது அரசு வலுவானதுதான்…ஆனால், அவர் எடுத்துச் சென்ற விதம்… ரயில்கள் நேரத்துக்கு ஓடுவது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல, ஆனால் அவை சரியான திசையில், இலக்கினை நோக்கிய திசையில் சரியாகச் செல்ல வேண்டும்… என்று கூறியுள்ளார் ரகுராம் ராஜன். காங்கிரஸ் கட்சி அவரது பேச்சில் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, மோடியை கிண்டல் அடிப்பதாக இன்று டிவிட்டரில் கருத்தைப் பதிவு செய்துள்ளது. ரகுராம் ராஜன், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த எமர்ஜென்சியையும் குறிப்பிட்டுப் பேசியிருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

செம்மொழி நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்ததற்கு செம்மொழி ஊழியர்கள் சங்கம் பாராட்டு

  சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவன பதிவாளரை திரும்ப அழைத்த அரசின் செயலுக்கு பாராட்டி, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆரோக்கியதாஸ் வெளியிட்ட அறிக்கையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராக இருந்து வரும் முனைவர் மு.முத்துவேலு என்பாரின் அயல்பணிக்காலம் இரண்டுஆண்டுகள் மட்டுமே ஆனால் தமிழக அரசையும், மத்திய அரசையும் ஏமாற்றி இன்றுவரை பணியில் தொடர்ந்துவருகிறார்.அவரால் பாலியல் மற்றும் சாதிய வன்முறைக்கு ஆளான நிறுவன பெண்பணியாளர் அவர்மீது வழக்குத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முதல் நீதி கேட்டு சட்டரீதியாக போராடிவருகிறார். இது தொடர்பாக ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே பதிவாளரைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சமுதாயத்திற்கும் நீதிகிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை மடல் பலமுறை அனுப்பியும் உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டதுறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் மனு அளித்தது . கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட செம்மொழி நிறுவன பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 07.08.2014 ஆம் நாள் காவல்துறை மானியக் கோரிக்கையின் விவாதத்தில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை, பதிவாளர் மு.முத்துவேலு அவர்களை மீண்டும் அவரது தாய்துறைகே திரும்ப சேருமாறு அறிவுறுத்தியது. இதனை அறித்த பதிவாளர் முத்துவேலு செம்மொழி நிறுவன பொறுப்பு இயக்குநர் பூமா-வுடன் கலந்து பேசி அவர் மூலமாக மேலும் 1 ஆண்டு பணிநீட்டிப்பு வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கல்லூரிக் கல்வி இயக்ககம் அதனை மறுத்து அவரை உடனே கல்லூரியில் சேர்ந்து விட்டு அக் கல்லூரியின் ஒப்புதல் ஆணையை தருமாறு கடுமையாக அறிவுறுத்தி மீண்டும் ஆணையிட்டது. இதனை அறிந்த பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் செம்மொழி நிறுவன வளாகத்திலேயே மக்களின் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துப்பலகை வைத்துள்ளனர். – என்று கூறப்பட்டுள்ளது. thamizayvu-uziyar

நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்

chennai-port சென்னை: நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 12 பெரும் துறைமுகங்களில், எண்ணூர் தவிர உள்ள மற்ற 11 பெரும் துறைமுகங்களும், இந்திய பெரும் துறைமுகச் சட்டம் 1963-ன் கீழ் துறைமுக பொறுப்புக் கழகங்களாக செயல்பட்டு வருகின்றன. பெரும் துறைமுகங்களை இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும், துறைமுகத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் துறைமுக தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அந்தந்த துறைமுக நிர்வாகங்களிடம் நேற்று முறைப்படி இதற்கான வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய திமுக., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்

TN-assembly சென்னை: தேமுதிக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தேமுதிகவினர் மீதான நடவடிக்கை குறித்து பேச அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பணியாற்ற முடியாது என்று பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்றால் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை இருக்கும். அதனால் நீண்ட நாட்கள் அவர்களால் பணியாற்ற முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து திங்கள்கிழமை வரை நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடர் வரையுடன் சஸ்பெண்ட் நடவடிக்கையை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்றார். அதற்கு, ‘திங்கள்கிழமை வரைதானே’ என்று நான் கேட்டேன். அதற்கு பேரவைத் தலைவர், ஆமாம் என்று தலையாட்டினார். அதற்காக பேரவைத் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தேன். பத்திரிகைகளில்கூட அப்படித்தான் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இப்போது ‘ஆளுநர் இந்தக் கூட்டத்தொடரை முடித்து வைக்கும் வரை தேமுதிக உறுப்பினர்கள் பேரவை நடவடிக்கையில் கலந்துகொள்ளக் கூடாது’ என்கிறார் பேரவை தலைவர். பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் முடிந்த பிறகுதான் இந்தக் கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைப்பார். அதுவரை தேமுதிகவினர் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கக் கூடாது என்கிறார். இப்போது, பேரவைத் தலைவர் யாருடைய பரிந்துரைக்கும் செவி சாய்க்கவில்லை என்கிறார். காரணம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்கவே வாய்ப்பு தரப்பட்டுள்ளது என கட்டம் கட்டி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை கிடைத்துவிடுமோ என கருதி, பட்ஜெட் கூட்டத் தொடர் வரை தேமுதிகவினர் உள்ளே வரமுடியாது என்று கூறினர். அவர்களிடம் பெருந்தன்மை இருக்கும் எனக் கருதி மீண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்காததால் வெளிநடப்பு செய்தோம்” என்றார். இது போல், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் இந்த நடவடிக்கை சரியானதல்ல. இதை பேரவைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். [su_posts posts_per_page=”10″ tax_term=”212″]

கோவை மாவட்ட காங்கிரஸார் 6 பேர் நீக்கம்: ப.சிதம்பரம் கண்டனம்

p-chidambaramசென்னை: கோவை மாவட்ட காங்கிரஸார் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பில், கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒருவரிடம் விளக்கம் கேட்காமலும் விசாரணை நடத்தாமலும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் ஒப்புதலைப் பெறாமலும் கட்சியின் உறுப்பினரை நீக்கமுடியாது. இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்… என்று ப.சிதம்பரம் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா எதிர்ப்பு

narendramodi புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மேற்கொண்ட அருணாசலப் பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான வடகிழக்குப் பகுதி மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும், அது திபெத் என்றும் அந்நாடு வரைபடம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அங்கு தில்லிக்கான ரயில் சேவையைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாகக் கண்டிராத வளர்ச்சியை அருணாச்சலப் பிரதேச மாநிலம் அடுத்த 5 ஆண்டுகளில் காணும் என்றார். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இது இருதரப்பு உறவுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளது. மேலும் “அருணாச்சலப் பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்காது” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜப்பான், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறியதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. “இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தாயார். ஆனால் அருணாசலப் பிரதேசத்தில் அல்ல… ஆனால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே ஜப்பான் பார்க்கிறது” என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் கிஷிடா கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்து, ஜப்பானை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: பண்ருட்டி வேல்முருகன்

சென்னை: பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் நடத்துகிற ‘சமூக நீதி’க்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 18 நீதிபதி இடங்கள் காலியாக இருக்கிறது. காலியாக உள்ள 18 நீதிபதிகளை நியமிப்பது என்பது ஒரே நேரத்திலும் அனைத்து ஜாதி, மத, பாலின பிரிவினருக்குமானதாகவும் குறிப்பாக இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படுவதுமாக இருப்பதுதான் ஜனநாயகத் தன்மை கொண்டதும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதுமாகும். இதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் முதன்மையான நியாயமான நீதியுமான எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கேட்ட போது, ஏற்கெனவே 9 நீதிபதிகள் பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் எஞ்சிய 9 பேரை நீங்கள் சொல்கிற அடிப்படையில் நியமிக்கிறேன் என்றும் கூறியிருப்பது இந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகும். நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் யார்? எந்த சமூகத்தினருக்கு முன்னுரிமை என்பதை அறியமுடியாத வெளிப்படைத்தன்மையற்ற முறைதான் இதற்கு காரணம்.. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விழுக்காட்டினரே இருக்கக் கூடிய ஒரு சமூகமே பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொள்கிற ‘கபளீகரம்’ செய்து கொள்கிற “நூற்றாண்டுகால போக்கு” இப்போதும் நீடிக்கிறது.. சமூக நீதியின் தாய் மண்ணாகிய தமிழ்நாடு இதை பொறுத்துக் கொண்டிருக்காது என்பதை வெளிப்படுத்துவதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்.. இந்த நீதித்துறையில் சமூக நீதிக்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன் வழக்கறிஞர் சமூகத்துக்கு பக்க பலமாக என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கறிஞர்களின் முதன்மை கோரிக்கைகளான, நீதிபதிகள் பதவிகளுக்கான பரிந்துரை அனைத்தையும் ஒரே பட்டியலாக அனுப்ப வேண்டும்; இதுவரை பிரதிநிதித்துவப்படாத சாதியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்; காலி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பிறமாநிலத்தைச் சேர்ந்தோரை பரிசீலிக்கக் கூடாது; மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றவும் வென்றெடுக்கவும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரும் பிரிவினரும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்து சமூக நீதிக்கான போராளிகளாகப் போராடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு: நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க, உள்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். பிரகாசன் வீட்டில் புதன்கிழமை மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில், நீதிபதியும் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதி வீடு மீது நடத்திய தாக்குதல் சம்பவம் என்பது நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நீதித் துறையின் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம்களில் ஒன்றாகும். சட்டத்தை செயல்படுத்தவும், ஜனநாயகம் தழைக்கவும் நீதித் துறையில் சுதந்திரம் அவசியமாகிறது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. சம்பவம் நடக்கவிருப்பதை உளவுப் பிரிவு போலீஸார் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கத் தவறியுள்ளனர். பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நீதிமன்றங்கள்தான் காப்பாற்றுகின்றன என்று நம்புகின்றனர். நீதிபதிக்கே அச்சுறுத்தல் ஏற்படுமானால், நீதிமன்றங்களுக்கு வரும் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட நீதிபதியின் உயிருக்கு சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அவருக்கு ராமநாதபுரம் எஸ்.பி. உடனடியாக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது வீட்டில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்துறை முதன்மைச் செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் செய்யவேண்டும். மேலும், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்… – என்று உத்தரவிட்டனர்.

சூரத் ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மோடி பாராட்டு

narendramodi பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் பெறும் தொகையினை கங்கை நதி தூய்மைப் படுத்தும் இயக்கத்துக்கு சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதன்படி குஜராத் மாநிலம் சூரத்தில் ஏலம் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக மோடி பயன்படுத்திய அவர் பெயர் கொண்ட கோட் சூட், ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. இதனிடையே இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஏலத்தை நல்லமுறையில் நடத்தியவர்களுக்கும் பாராட்டையும் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் மோடி. இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி: