Home Blog Page 6300

முழுப் படமும் துபாயில்தான்!: “மணல் நகரம்” தயாரிப்பாளரின் அனுபவம்

manalnagaram தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு​ ​படம் முழுப்பட​​மு​ம் துபாயில் உருவாகியுள்ளது. என்றால் அது​​ ‘மணல் நகரம்’ தான் என்று, தான் தயாரித்த ‘மணல் நகரம்’ படத்தை முதன்முதலாக முழுதும் துபாயில் எடுத்துள்ள படத் தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார் தன் அனுபவங்ளைப் பகிர்ந்து கொள்கிறார்…. மொத்தம் 60 நாட்கள் முழுப்படத்தையும் அங்கே ​​முடித்திருக்கிறோம். ஒரே ஒரு காட்சிக்கு அனுமதி கிடைக்காததால் அதை மட்டும் இந்தியாவில் 3 நாட்கள் எடுத்தோம். துபாயில் படமெடுக்க ஏன் எல்லாரும் தயங்குகிறார்கள் தெரியுமா? அங்குள்ள சட்டதிட்டங்கள் கடுமையானவை. அனுமதி பெறுவதில் பல கட்டுப்பாடுகள், விதி முறைகள் இருக்கின்றன. முதலில் படத்தின் முழு திரைக்கதையையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அதுவும் அரபியில் மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும். அதைப் படித்து பரிசீலித்த பிறகுதான் அனுமதி கிடைக்கும். எந்தக்காட்சிக்கு எங்கு அனுமதி பெற்று இருக்கிறோமோ அங்குதான் எடுக்கவேண்டும். சற்று இடம் மாற்றினாலும்அனுமதி கிடைக்காது. ஒப்புக்கொள்ள மாட்டார்கள். படப்பிடிப்பு நடக்கும் போது அதுதான் அனுமதிவாங்கியிருக்கிறோமே என்று அலட்சியமாக இருந்து விட முடியாது. கையிலேயே அனுமதியை வைத்திருக்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அனுமதி கடிதத்தை கேட்பார்கள் காட்ட வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித அனுமதி இருக்கும். துபாயில் இருப்பதுபோல சார்ஜாவில் இருக்க முடியாது. மாறும். திடீரென்று எங்களை முற்றுகையிட்ட போலீஸ்! ஒரு வீட்டின் முன் நாங்கள் படக்குழுவினர் இருந்தோம். நாங்கள் படம்பிடிக்க அனுமதி பெற்ற பகுதிதான். படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கோணம்பார்க்க ஏற்பாடு செய்ய ஒரு இடத்தில் கேமராவை வைத்திருந்தோம். அது ஒரு வீட்டை நோக்கி இருந்தது திடீரென ஒரு போலீஸ் படை எங்களை முன்றுகையிட்டது. ‘இந்தக் கேமராவில் ஏன் இந்த வீட்டை படம் எடுக்கிறீர்கள்? ‘என்றார்கள். ‘இங்கே இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவே இல்லை. எடுக்கப் போகும் இடம் இந்த சாலைதானே தவிர விடல்ல’ என்றோம். ‘இது யார் வீடு தெரியுமா இது ஒரு ஷேக் வீடு. அது மட்டுமல்ல அவர் ஒரு நீதிபதி தெரியுமா?’ என்றார்கள். அங்கு எதையும் எடுக்கவில்லை என்றாலும் தூக்கி வாரிப்போட்டது. எடுத்ததை காட்டச் சொன்னார்கள். டிஜிட்டல் என்பதால் காட்டினோம் அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அப்போது நினைத்தோம் படத்தை பிலிமில் எடுத்திருக்கால் என்ன ஆகியிருக்கும்? என்று. என்னை ஏன் படமெடுத்தீர்கள்? மிரட்டிய பெண்மணி! ஒரு சாலையில் படமெடுத்துக் கொண்டு இருந்த போது.. ஒரு பெண்மணி சத்தம் போட்டபடி ஓடி வந்தார். என்னை ஏன் படமெடுத்தீர்கள் என்று சத்தம் போட்டார் அவர் பர்தா பேண்ட் போட்டிருந்தார். உங்களை எடுக்கவில்லை என்று கூறினோம். போலீசைக் கூப்பிட்டார். போட்டுக்காட்டினோம். நாங்கள் எடுத்ததைக் காட்டினோம். நாங்கள் எடுத்ததில் அந்தப் பெண்மணி வரவே இல்லை. அங்கு பெண்கள் பர்தாவுடன்தான் வருவார்கள். அப்படி படமெடுத்து புகார் கொடுத்தால் உடனே கைதுதான். உள்ளே போனால் வெளியே வருவது அவ்வளவு சுலபமல்ல .அவர்களிடம் நாங்கள் விளக்கினோம் எங்கள் கதையில் கூட பெண்களை கவர்ச்சியாகக் காட்டவில்லை. காதல் கதை என்றாலும் இவர்கள் மரத்தைச் சுற்றவில்லை. கட்டிப் பிடிக்கவில்லை அந்த அளவுக்கு கண்ணியமாகவே படமெடுத்து வருகிறோம் என்றோம் அனுமதிக்க மறுக்கப்பட்ட காட்சி! ஒரு மாடியிலிருந்து கீழே விழுந்து கிடப்பது போல எடுக்க வேண்டிய காட்சி அது. பலர் துரத்தி வரும்போது மாடியிலிருந்து கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல எடுக்க வேண்டும். துரத்துவது போல எடுத்தோம். ஒருவர் அடிபட்டுக் கிடப்பது போல செயற்கை ரத்தம் சிதறவிட்டிருந்தோம் இதை யாரோ நிஜம் என்று நினைத்து போலீசுக்கு போன் செய்து விட்டார்கள். போலீஸ் எங்களைப் பிடித்து விட்டது. படப்பிடிப்பு என்றோம். நம்பவில்லை. கேமரா எங்கே என்றார்கள் கேமராக்களை பல இடங்களில் மறைவாக வைத்து இருந்தோம்.இப்படி எடுக்கவே திட்டமிட்டோம். ஆனால் எல்லாமும் பார்த்துவிட்டு இந்தக்காட்சி எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். அந்தப் பகுதியில் சமீபத்தில்தான் ஒரு குழந்தை 5 வது மாடியிலிருந்து விழுந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த தாய் அதேபோல் கிழே குதித்து குழந்தையருகே விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். இது அங்கு பரபரப்பானதாம். எனவே மறுத்து விட்டார்கள். இந்தக் காட்சியை மட்டும்தான் இந்தியாவில் 3 நாட்கள் எடுத்தோம். கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் மணலில்! துபாயின் பாலைவனம் ஓர் அழகுதான் அங்கு பாலைவனத்தை புனிதமாக கருதுகிறார்கள்.ஒரு குப்பை இருக்காது.சுத்தமாக இருக்கும். அங்கே அசுத்தம் செய்தால் கைது செய்து விடுவார்கள். அங்குள்ள மணல் மெலிதாக மாவு போல இருக்கும். காற்றடித்தால் மூக்கில் புகுந்து விடும். அப்படிப்பட்ட மணலில் காலை வேளைகளில் எடுத்தால்தான் சூடும் குறைவு. காற்றும் குறைவு அங்கு சூர்யோதயம் அதிகாலை 5.30மணிக்கே வந்து விடும். 2 மணிநேரம் பயணம் செய்து அங்கு போய்ச்சேர வேண்டுமானால் 3.30.மணி க்கே புறப்பட்டுவிட வேண்டும். தங்கி இருக்கும் இடத்திலிருந்து 2 மணிநேரம் பயணம். பாலைவனத்தில் மட்டும் 1 மணிநேரம். பயணம். அதன்பிறகுதான் அந்த இடத்தை அடையமுடியும் போகிற வழியில் ஒரு கூடாரம் போட்டிருந்தோம். 11 மணி ஆகிவிட்டால் வெயில் கொளுத்தும். மணல் கொதிக்கும். எனவே 10.30மணிக்குள் முடிக்கும் அளவில் திட்டமிட்டிருந்தோம். கிரேன் ஷாட் எடுக்கும் போது கிரேன் மணலில் சறுக்கும். எனவே பலர் பிடித்துக் கொள்ள வேண்டும். 6.7.பேர் தேவை. இப்படி சிரமப்பட்டு எடுத்தோம். 10.30.ஆனதுமே மணல் சூடேறிவிடும் இருந்தாலும் நடிகர்கள் படக் குழுவினர் தாங்கிக் கொண்டு ஒத்துழைத்தனர். இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை.! அங்கு இந்தியர், பாகிஸ்தானியர் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்களிடம் பகையுணர்ச்சி இல்லை. துபாயைப் பொறுத்தவரை எல்லாருமே அவர்களை இந்தியர் என்றுதான் சொல்வார்கள். எங்கள் படத்தில் 6 நாட்டுக்காரர்கள் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்கள். எகிப்து. பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், துபாய், பாகிஸ்தான், இந்தியர் என்று 6 நாட்டுக்காரர்கள் நடித்துள்ளனர். துபாயில் சுமார் 57 லட்சம்பேர் வசிக்கிறார்கள் என்றால் அரேபியர்கள் 25 லட்சம், தமிழர் -மலையாளிகள் மட்டுமே 29 லட்சம் பேர் இருப்பார்கள். மிதியுள்ளதுதான் மற்றவர்கள். அங்கு நாங்கள் ஆங்கிலம் பேசவோ அரபி பேசவோ அவசியமில்லை. அந்த அளவுக்கு தமிழர்களும் மலையாளிகளும் உதவினார்கள். பல மொழிக்காரர்கள் எங்களுக்காக தமிழ் வசனத்தை பேசி நடித்தனர். பாலைவனத்தில் நாங்கள் கேட்காமலே போய் தண்ணீர்கேனை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் நடந்து வந்து கொடுத்தார் ஒரு பாகிஸ்தான்காரர். அவர்கள் அவ்வளவு உதவினார்கள். நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். மணல் நகரம் என்ன மாதிரியான படம்? இது ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படம். நாடுவிட்டு நாடு போய் சோதனைகளைக் சந்திக்கும் கதையும் உண்டு. வாழ்க்கையில் முன்னேற சோலைவனம் செல்லாமல் பாலைவனம் செல்கிற ஒரு வனின் கதை என்றும் கூறலாம். மத நல்லிணக்கமும் பேசப்படுகிறது.ஒருதலைராகம் சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்து இயக்கியுள்ளார். நாயகன் ப்ரஜின் .நாயகிகள் தனிஷ்கா, வருணா ஷெட்டிஎன இருவர் .இவர்களில் வருணா ஷெட்டி துபாய்க்காரர். மற்ற கேரக்டர்கள் எல்லாம் புதியவர்களே நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். பிரியனின் மாணவர் இவர். மிகவும் சிரமப்பட்டு உழைத்திருக்கிறார். இது இவருக்கு 4 வது படம் .இசை ரெனில் கௌதம் ,வசனம் ஆர்.வேலுமணி. நடனம். சோனி கோம்ஸ், ஸ்டண்ட் ராகேஷ் கண்ணன் என பலரும் உழைத்திருக்கிறார்கள். டிஜேஎம் அசோசியேட்ஸ் (DJM ASSOCIATES) சார்பில் நான் முதலில் தயாரித்துள்ள படம்.இது படத்திற்கு நிறையவே சிரமப்பட்டோம். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டதால் வலிகள் சுகமாகவே இருந்தன. படம் வருகிற 27 ஆம்தேதி வெளியாக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

உபதேசரத்னமாலை நூல் வெளியீடு

nampillai சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று “உபதேசரத்தினமாலை” விளக்க உரை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் ஸ்ரீ கோவிந்த ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டனர்.

பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை: கருணாநிதி

சென்னை: சட்டப் பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை ஒதுக்குவது குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளருடனான சந்திப்பில் தெரிவித்தவை… செய்தியாளர் :- ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உங்களுடைய கட்சி உறுப்பினர்கள் எதை எதை முன்வைத்து உரையாற்றுவார்கள்? கருணாநிதி :- எங்களுடைய கருத்துகளை இப்பொழுது நீங்கள் கேட்கும்பொழுது கூறிவிடலாம். ஆனால், அந்தக் கருத்துகளை சட்டப்பேரவையில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருயதுதான் பார்க்க வேண்டும். செய்தியாளர் :- ஆளுநர் உரையில் ஜெயலலிதாவை பாராட்டுகின்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதே? கருணாநிதி:- இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? செய்தியாளர் :- உங்கள் கட்சிதான் முக்கிய கட்சி. நீங்கள் பேரவையில் அடிக்கடி வெளிநடப்பு செய்து விடுவதால், முக்கியப் பிரச்சினைகள் பற்றி கருத்துகளை சொல்ல முடியாமல் போகிறதே? கருணாநிதி :- முக்கியப் பிரச்சினைகளை கூற வாய்ப்பு கிடைக்காத நிலையில்தான் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய நேரிடுகிறது. செய்தியாளர் :- சட்டப்பேரவையில் நீங்கள் கலந்து கொள்ள சிறப்பு இருக்கை ஒதுக்க வேண்டுமென்று இப்போது கேட்கப்பட்டுள்ளதா? கருணாநிதி :- அவர்கள் அதைத் தருவதில்லை என்று முடிவு எடுத்து விட்டார்கள். எனவே, அதை அவர்களிடத்திலே மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை.

இலங்கை இறுதிப் போர் குறித்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கலாவது ஒத்திவைப்பு

ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பின்லாந்து முன்னாள் அதிபர் மார்ட்டி அஹ்டிசாரி தலைமையிலான சர்வதேச நிபுணர் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறீசேனா அரசு போர்க் குற்றங்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இலங்கை அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், சர்வதேச நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப் படுவதை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக்கான ஐ.நா. தூதர் சையத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடு: கைதான 3 பேரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை: பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சன் டிவி முன்னாள் ஊழியர்கள் மூவரின் ஜாமீன் மனு இன்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், மூவரிடம் இருந்தும் புதிய தகவல்கள் கிடைத்தன என்றும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து, இவர்கள் வெளியில் வந்தால், சாட்சிகள் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், இரண்டாவது முறையாக அவர்கள் மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜிதன் ராம் மாஞ்சி ஆதரவு அமைச்சர்கள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

jitan-ram-manjhi பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கும், கட்சித் தலைமைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மாஞ்சிக்கு ஆதரவு அளிக்கும் அவரது அமைச்சரவை சகாக்கள் 7 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது ஐக்கிய ஜனதா தளம். வரும் 20ம் தேதி பீகார் சட்டப் பேரவையில் தனது அரசுக்கான பெரும்பான்மையை நீருபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி. இந்நிலையில் அவரது அமைச்சரவை சகாக்கள் 7 பேர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அவர்களை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர் சரத் யாதவ், அவர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள் மறுக்கவே, 7 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் சரத் யாதவ். அவர்கள் எங்களை மட்டும் அழிக்கவில்லை, பீகார் மக்களையே அழிக்கின்றனர் என்றார் சரத் யாதவ். இப்போது, ஒரே ஒரு தனி அமைச்சர் மட்டுமே ஜிதன் ராம் மாஞ்சி அமைச்சரவையில் உள்ளார். ஏற்கெனவே 2 பேர் வெளியேறினர். 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

சென்னை ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: டிக்கெட் பரிசோதகர் கைது

Crime-Pix ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த திருமணமான பெண் (25 வயது) ஒருவர், சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், குண்டூரில் இருந்து சென்னை திரும்ப ஐதராபாத்–சென்னை விரைவு ரயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார். அவரது டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. இதனால் பெண்ணின் உறவினர்கள் சென்னை ரயிலில் ‘பி–1’ பெட்டியில் டிக்கெட் பரிசோதகராக பணியில் இருந்த ரெங்கையா (45) என்பவரை அணுகி ‘பெர்த்’ ஒதுக்கித் தருமாறு கூறினர். அவரும் ‘பெர்த்’ ஒதுக்கிக் கொடுத்தார். அதில் பெண் என்ஜினீயர் தூங்கிக் கொண்டு பயணம் செய்து வந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது டிக்கெட் பரிசோதகர் ரெங்கையா அருகில் வந்து அமர்ந்தார். பெண் என்ஜினீயரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் டிக்கெட் பரிசோதகரைப் பார்த்து சத்தம் போட்டு எச்சரித்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் எழுந்து சென்று விட்டார். அதன் பிறகு ரயில், சின கஞ்சா ரயில் நிலையம் அருகில் வந்த போது டிக்கெட் பரிசோதகர் ரெங்கையா மீண்டும் அந்த பெண் என்ஜினீயரின் இருக்கைக்கு சென்று அருகில் படுத்துக் கொண்டு பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே அந்தப் பெண் டிக்கெட் பரிசோதகரின் பிடியில் இருந்து தப்பி கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். கழிவறையில் இருந்தவாறு குண்டூரில் உள்ள கணவரிடம் போனில் பேசி டிக்கெட் பரிசோதகரின் செயல் பற்றி கூறினார். இதை அடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். ரயில் ஓங்கோல் ரயில் நிலையம் வந்ததும், அந்தப் பெண் வெளியில் வந்து, அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். மேலும் அந்தப் பெண் அதே ரயிலில் பயணிக்காமல், குண்டூருக்கு வேறு ரயில் திரும்பிச் சென்றார். இந்நிலையில் சென்னை ரயில் அதிகாலையில் சென்ட்ரல் வந்து சேர்ந்ததும், சென்ட்ரலில் தயாராகக் காத்திருந்த ரயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகர் ரெங்கையாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு சலுகை காட்டும் ஒபாமாவின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

obama ஹூஸ்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் சுமார் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கும் விதமாக அதிபர் ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள சுமார் 4.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா, சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் ஒபாமாவின் உத்தரவு அமெரிக்க நாடாளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்ததும், பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுமாக அமைந்தது. இந்நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ‘அமெரிக்க அதிபரின் உத்தரவானது, அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறிய செயல்; அமெரிக்க அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பிரிவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் நாட்டில் சட்டம் – ஒழுங்கை அமல்படுத்துவதற்கும், சுகாதாரம், கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எனவே அதிபரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மாகாணங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அதிபர் ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் ஹன்சிகாவின் நிர்வாண குளியல் காட்சி: ‘மார்பிங்’ என ஹன்சிகா மறுப்பு

hansika
திரைப்படத்தில் வெளியான காட்சியின் கோப்புப் படம்
  சென்னை: நடிகை ஹன்சிகாவைப் போன்ற தோற்றத்துடன் ஒரு பெண் குளிப்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ”ஹன்சிகாவின் குளியல் காட்சி” என்ற பெயரில் அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ‘அந்தப் படத்தில் இருப்பது தான் அல்ல. இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களை கடவுள் தண்டிப்பார்” என்று ஹன்சிகா தரப்பில் கூறப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திலிருக்கும் ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ காட்சி என ஒன்று கோடம்பாக்கத்தில் சுற்றி வருகிறது. வாட்ஸ்-அப்பில் பரவி வரும் இந்த வீடியோவில் ஹன்சிகா குளியலறையில் உலவும் காட்சியை அறையின் சாவி துவாரத்தில் கேமராவைப் பொருத்தி விஷமிகள் படம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், துவக்கத்தில் முதுகுப் பக்கமாக நிற்கும் அவர், பின்னர் தன் முகத்தைக் காட்டும் வரை படமாகியுள்ளது. இதனிடையே, அது ஒரு நட்சத்திர ஓட்டலாகதான் இருக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பில் உள்ள ஓட்டல் எது என்பதை காவல் துறைக்கு தெரிவித்து இதுபோன்ற விஷமிகளின் செயல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பலரும் பொருமுகின்றனர். இதுபோன்ற விஷமிகளின் செயலால், சம்பந்தப்பட்ட நடிகைகள் படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. நடிகை த்ரிஷாவின் குளியல் அறைக்குள் கேமிராவை வைத்து திருட்டுத்தனமாக படம் எடுத்ததாக வந்த தகவல் நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்போது ஹன்சிகா. ‘பேராண்மை’ படத்தில் நடித்த வசுந்தரா தனது நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையதளம், வாட்ஸ்-அப்களில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளிவந்தன. ”அந்த படங்களில் இருப்பது நான் அல்ல” என்று வசுந்தரா மறுத்தார். ‘வெற்றிச்செல்வன்’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நிர்வாணமாக குளிப்பதை தனக்குத்தானே ‘செல்பி’யில் படம் எடுப்பது போல் ஆபாச படங்கள் வெளிவந்தன. ”அந்தப் படங்களில் இருப்பது நான் அல்ல” என்று ராதிகா ஆப்தேயும் மறுத்தார். ”மார்பிங்’ செய்யப்பட்டு அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன” என்றார் அவர். டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணியின் ஆபாச படங்களும் வாட்ஸ்-அப்களில் வெளியானது. தொடர்ந்து லட்சுமிமேனனின் ஆபாச படங்கள், வாட்ஸ்-அப்களில் வெளிவந்தன. அவரும், ”அது நான் அல்ல” என்று மறுத்து இருக்கிறார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எப்போது முடிவு வருமோ?

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய – பாகிஸ்தான் போட்டி நாளில் மது விற்பனை அதிகரிப்பு

tasmac-bar சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில், கடந்த ஞாயிறு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது, பீர் விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வீட்டில் இருந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், நண்பர்களோடு பார்களில் பீர் பாட்டிலுடனும் நொறுக்குத் தீனியுடன்தான் போட்டியை பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் போட்டி நடைபெறும் நாட்களில் காலையிலேயே பார்களுக்குச் சென்று விடுகின்றனர் என்கின்றனர். இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால், விடுமுறை தினமான அன்று, காலை முதலே மதுக்கூடங்களில் அதிகளவில் கூட்டம் குவியத் தொடங்கியது. சென்னை, கோவை, சேலம், மதுரை உள்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரும்பாலான பார்கள் காலை 11 மணி அளவிலேயே நிரம்பிவிட்டது. காலையிலேயே பார்களுக்கு வரும் ரசிகர்கள் மாலை போட்டி முடிந்த பின்னர்தான் வெளியே சென்றனர். இத்தகைய சூழ்நிலையில், அடுத்து வரும் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த நாளிலும் இந்த நிலை இருக்கும் என்கின்றனர் பார் உரிமையாளர்கள்.