Home Blog Page 6311

2015 ஆன்மிகக் குறிப்புகள்

panchankam2015 –ம் வருட ஆன்மீகக் குறிப்புகள்

தமிழ் தேதிஆங்கில தேதிகிழமைவிசேஷங்கள் 
மார்கழிஜனவரி   
171வியாழன்வைகுண்ட ஏகாதசி, கிருத்திகை 
182வெள்ளிசுக்ல பட்ச பிரதோஷம் 
204ஞாயிறுபௌர்ணமி விரதம் – பூஜை, நடராஜர் அபிஷேகம், சடையனார் குருபூஜை 
215திங்கள்ஆருத்ரா தரிசனம் 
226செவ்வாய்பௌஷ பகுள பிரதமை 
248வியாழன்சங்கடஹர சதுர்த்தி 
259வெள்ளிசதுர்த்தி விரதம் 
2610சனிதிருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை 
2711ஞாயிறுகிருஷ்ண பட்ச சஷ்டி, கூடார வல்லி, இயற்பகையார் குரு பூஜை 
3014புதன்போகிப்பண்டிகை, மானக்கஞ்சாரர் குரு பூஜை 
தை 115வியாழன்உத்ராயண புண்ய காலம், பொங்கல் பண்டிகை, கரி நாள் 
216வெள்ளிமாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரி நாள், கிருஷ்ண பட்ச ஏகாதசி 
317சனிகாணும் பொங்கல், கனு, கரி நாள் 
418ஞாயிறுகிருஷ்ண பட்ச பிரதோஷம், மாத சிவராத்ரி 
519திங்கள்போதாயன அமாவாசை 
620செவ்வாய்தை அமாவாசை 
721புதன்சந்திர தரிசனம், திருவோண விரதம், சாந்தரமான மாக மாசம் ஆரம்பம் 
923வெள்ளிசுக்ல பட்ச சதுர்த்தி, அப்பூதியடிகள் குரு பூஜை 
1024சனிசதுர்த்தி விரதம் 
1125ஞாயிறுசுக்ல பட்ச சஷ்டி, கரி நாள், நமச்சிவாய தேசிகர், கலிக்கம்பர் குருபூஜை 
1226திங்கள்ரதசப்தமி, சூர்ய சாவர்னி மண்வாதி, வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் 
1428புதன்தை கிருத்திகை 
1529வியாழன்கிருத்திகை விரதம் 
1630வெள்ளிசுக்ல பட்ச ஏகாதசி, கண்ணப்பர் குரு பூஜை 
1731சனிகரி நாள், அரிவாட்டாயர் குரு பூஜை 
 பிப்ரவரி   
181ஞாயிறுபிரதோஷம், வராஹ கல்பாதி 
203செவ்வாய்பௌர்ணமி, தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம், கலியுகாதி 
214புதன்மகா பகுல பிரதமை 
225வியாழன்திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம் 
247சனிகிருஷ்ண பட்ச சதுர்த்தி, சண்டேசர் குரு பூஜை 
258ஞாயிறுசதுர்த்தி விரதம் 
269திங்கள்கிருஷ்ணபட்ச சஷ்டி 
2710செவ்வாய்சஷ்டி விரதம் 
2811புதன்திருநீலகண்டர் குருபூஜை, தாயுமானவர் குருபூஜை 
மாசி 113வெள்ளிவிஷ்ணுபதி 
315ஞாயிறுகிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி, கோச்செங்கட் சோழர் குருபூஜை 
416திங்கள்கிருஷ்ணபட்ச ஸோம மஹாபிரதோஷம் 
517செவ்வாய்மஹாசிவராத்திரி, ச்ரவண விரதம் 
618புதன்சர்வ அமாவாஸ்யை 
719வியாழன்பால்குண சுத்த பிரதமை, சாந்தரமான பால்குண மாச ஆரம்பம், எறிபத்தர் குருபூஜை 
820வெள்ளிசந்த்ர தரிசனம் 
1022ஞாயிறுசுக்லபட்ச சதுர்த்தி 
1224செவ்வாய்சுக்லபட்ச சஷ்டி 
1325புதன்கிருத்திகை 
1527வெள்ளிகரிநாள் 
1628சனிகரிநாள் 
 மார்ச்   
171ஞாயிறுசுக்லபட்ச சர்வ ஏகாதசி 
193செவ்வாய்சுக்லபட்ச மஹாபிரதோஷம் 
204புதன்மாசிமகம் (நட்சத்ர பிரதான இடங்களில்), நடராஜர் அபிஷேகம் 
215வியாழன்மாசிமகம் (பௌர்ணமி பிரதான இடங்களில்), ஸமுத்ரஸ்நானம் ருத்ரஸாவர்ணி மன்வாதி, ஹோலிபண்டிகை 
226வெள்ளிபால்குன பகுள பிரதமை, வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் 
237சனிதிருவள்ளுவர் குருபூஜை, காரியர் குருபூஜை 
248ஞாயிறுப்ரம்ஹ கல்பாதி 
259திங்கள்கிருஷ்ணபட்ச சதுர்த்தி 
2711புதன்கிருஷ்ணபட்ச சஷ்டி 
பங்குனி 115ஞாயிறுகாரடையார் நோன்பு, சூன்யார்க்கம் 
216திங்கள்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
317செவ்வாய்ச்ரவண விரதம் 
418புதன்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், மாச சிவராத்திரி, தண்டியார் குருபூஜை 
519வியாழன்போதாயன அமாவாஸ்யை 
620வெள்ளிஅமாவாஸ்யை, ரைவதி மன்வாதி, கரிநாள் 
721சனிசந்தர தரிசனம், சைத்ர சுத்த பிரதமை, ச்வேத வ்ராஹகல்பாதி, சாந்தரமான சைத்ரமாச ஆரம்பம், வஸந்த நவராத்ரி ஆரம்பம், தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) 
923திங்கள்சுக்லபட்ச சதுர்த்தி, உத்தம மன்வாதி 
1024செவ்வாய்கிருத்திகை 
1125புதன்சுக்லபட்ச சஷ்டி, கூர்ம கல்பாதி, நேசனார் 
1327வெள்ளிகணநாதர் குருபூஜை 
1428சனிஸ்ரீராம நவமி 
1529ஞாயிறுமுனையடுவர் குருபூஜை, கரிநாள் 
1731செவ்வாய்சுக்லபட்ச சர்வ ஏகாதசி 
 ஏப்ரல்   
181புதன்சுக்லபட்ச மஹாபிரதோஷம் 
192வியாழன்கரிநாள் 
203வெள்ளிபௌர்ணமி, பங்குனி உத்தரம் 
214சனிரௌச்ய மன்வாதி, சந்த்ர க்ரஹணம் 
225ஞாயிறுசைத்ர பகுள பிரதமை 
236திங்கள்காரைக்கால் அம்மையார் 
258புதன்கிருஷ்ணபட்ச சதுர்த்தி 
269வியாழன்வராஹ ஜயந்தி 
2710வெள்ளிகிருஷ்ணபட்ச சஷ்டி 
3013திங்கள்ச்ரவண விரதம் 
சித்திரை 114செவ்வாய்மன்மத வருஷப் பிறப்பு, விஷூ புண்ய காலம் 
215புதன்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
316வியாழன்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் 
417வெள்ளிமாச சிவராத்திரி 
518சனிசர்வ அமாவாஸ்யை 
619ஞாயிறுவைசாக சுத்த பிரதமை, கரிநாள், சாந்தரமான வைசாக மாச ஆரம்பம், சிறுத்தொண்டர் குருபூஜை 
720திங்கள்சந்த்ர தரிசனம், கிருத்திகை 
821செவ்வாய்கிருத்திகை விரதம், அக்ஷய த்ருதியை, க்ருதயுகாதி, பலராம ஜெயந்தி, மங்கையர்கரசியார் குரு பூஜை 
922புதன்சுக்லபட்ச சதுர்த்தி 
1023வியாழன்வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், சங்கர ஜெயந்தி, விறல்மிண்டர் குருபூஜை 
1124வெள்ளிசுக்லபட்ச சஷ்டி 
1528செவ்வாய்கரிநாள் 
1629புதன்சுக்லபட்ச சர்வ ஏகாதசி 
 மே   
181வெள்ளிசுக்லபட்ச மஹாபிரதோஷம், மே தினம், உமாபதி சிவம் குரு பூஜை 
192சனிநரஸிம்ஹ ஜெயந்தி, சித்ரகுப்த பூஜை, இசை ஞானியார் குருபூஜை 
203ஞாயிறுசித்ரா பௌர்ணமி, மதுரகவியார் மற்றும் திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை 
214திங்கள்அக்னி நட்சத்ர ஆரம்பம் 
247வியாழன்கிருஷ்ணபட்ச சதுர்த்தி, பார்த்திப கல்பாதி 
269சனிகிருஷ்ணபட்ச சஷ்டி 
2811திங்கள்நடராஜர் அபிஷேகம், ச்ரவண விரதம் 
2912செவ்வாய்திருநாவுக்கரசி குருபூஜை 
3114வியாழன்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
வைகாசி 115வெள்ளிவிஷ்ணுபதி, கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் 
216சனிமாச சிவராத்திரி 
317ஞாயிறுசர்வ அமாவாஸ்யை 
418திங்கள்கிருத்திகை 
519செவ்வாய்ஜ்யேஷ்ட சுத்த பிரதமை, சாந்தரமான ஜ்யேஷ்ட மாச ஆரம்பம், சந்த்ர தரிசனம் 
721வியாழன்சுக்லபட்ச சதுர்த்தி, கரிநாள் 
923சனிசுக்லபட்ச சஷ்டி, சேக்கிழார் மற்றும் நமிநந்தியார் குருபூஜை 
1024ஞாயிறுசோமாசிமாறானார் குருபூஜை 
1529வெள்ளிசுக்லபட்ச சர்வ ஏகாதசி, அக்னி நட்சத்ர முடிவு 
1630சனிகரிநாள் 
1731ஞாயிறுசுக்லபட்ச மஹாபிரதோஷம், மஹாவீர் ஜெயந்தி, கரிநாள் 
 ஜூன்   
181திங்கள்வைகாசி விசாகம் (நட்சத்ர பிரதான இடங்களில்), நம்மாழ்வார் குருபூஜை 
192செவ்வாய்வைகாசி விசாகம் (பௌர்ணமி பிரதான இடங்களில்), பௌர்ணமி, பௌச்ய மன்வாதி 
203புதன்ஜ்யேஷ்ட பகுள பிரதமை 
214வியாழன்வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், திருஞானசம்பந்தர், முருகனார், திருநீலகண்டபாணர் மற்றும் திருநீலநக்கர் குருபூஜை 
225வெள்ளிகிருஷ்ணபட்ச சதுர்த்தி 
236சனிசதுர்த்தி விரதம் 
247ஞாயிறுகிருஷ்ணபட்ச சஷ்டி, ச்ரவண விரதம் 
258திங்கள்சஷ்டி விரதம் 
2912வெள்ளிகிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
3013சனிகூர்ம ஜயந்தி, கழற்சிங்கர் குருபூஜை 
3114ஞாயிறுகிருத்திகை, மாத சிவராத்திரி, கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் 
ஆனி 116செவ்வாய்சர்வ அமாவாஸ்யை, கரிநாள் 
217புதன்ஆஷாட சுத்த பிரதமை, சாந்த்ரமான ஆஷாட மாச ஆரம்பம் 
318வியாழன்சந்த்ர தரிசனம் 
520சனிசுக்லபட்ச சதுர்த்தி 
621ஞாயிறுமாணிக்கவாசகர் குருபூஜை, கரிநாள் 
722திங்கள்சுக்லபட்ச சஷ்டி, அமர்நீதியார் குருபூஜை 
823செவ்வாய்நடராஜர் அபிஷேகம் 
924புதன்ஆனித் திருமஞ்சனம், நடராஜர் தரிசனம் 
1328ஞாயிறுசுக்லபட்ச சர்வ ஏகாதசி 
1429திங்கள்சுக்லபட்ச மஹாபிரதோஷம் 
 ஜூலை   
161புதன்பௌர்ணமி, அருணகிரியார் குருபூஜை 
183வெள்ளி ஆஷாட பகுள பிரதமை 
194சனிச்ரவண விரதம் 
205ஞாயிறுகிருஷ்ணபட்ச சதுர்த்தி, குருப்பெயர்ச்சி 
227செவ்வாய்கிருஷ்ணபட்ச சஷ்டி 
249வியாழன்ஏயர்கோன் கலிக்காமர் குருபூஜை 
2611சனிகிருத்திகை 
2712ஞாயிறுகிருத்திகை விரதம், கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
2813திங்கள்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் 
2914செவ்வாய்மாச சிவராத்திரி 
3015புதன்சர்வ அமாவாஸ்யை 
ஆடி 117வெள்ளிஆஷாட சுத்த பிரதமை, தக்ஷிணாயன புண்யகாலம், சாந்த்ரமான ஆஷாட மாச ஆரம்பம், சந்த்ர தர்சனம் 
218சனிகரிநாள் 
319ஞாயிறுசுக்லபட்ச சதுர்த்தி 
521செவ்வாய்சுக்லபட்ச சஷ்டி 
622புதன்குமார சஷ்டி, சஷ்டி விரதம் 
723வியாழன்பெருமிழலைக்குறும்பர் குருபூஜை 
824வெள்ளிசுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மற்றும் சேரமான் பெருமான் குருபூஜை 
1026ஞாயிறுகரிநாள் 
1127திங்கள் சுக்லபட்ச சர்வ ஏகாதசி, சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம், கோட்புலியார், கலியனார் குருபூஜை, வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல் 
1329புதன் சுக்லபட்ச மஹாபிரதோஷம் 
1430வியாழன்பௌர்ணமி, வியாஸ பூஜை, பட்டிணத்தார் குருபூஜை 
1531வெள்ளிப்ரம்ஹஸாவர்ணி மன்வாதி 
 ஆகஸ்ட்   
161சனிச்ரவண விரதம், ஆஷாட (நிஜ) பகுள பிரதமை 
183திங்கள்கிருஷ்ணபட்ச சதுர்த்தி, ஆடிப்பெருக்கு 
205புதன்கிருஷ்ணபட்ச சஷ்டி, கரிநாள் 
238சனி ஆடிக் கிருத்திகை, குரு அஸ்தமனம், மூர்த்தியார் மற்றும் புகழ்ச்சோழர் குருபூஜை 
2510திங்கள்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
2611செவ்வாய்கூற்றுவனார் குருபூஜை 
2712புதன்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம்,  மாச சிவராத்திரி 
2914வெள்ளி ஆடி மாச சர்வ அமாவாஸ்யை 
3015சனிச்ரவண சுத்த பிரதமை, சாந்த்ரமான ச்ராவண மாச ஆரம்பம் 
3116ஞாயிறுசந்த்ரதர்சனம், ஆடிப்பூரம் 
3217திங்கள் ஆடி அறுதி சுக்ர அஸ்தமனம் 
ஆவணி 118செவ்வாய்விஷ்ணுபதி, சுக்லபட்ச சதுர்த்தி 
219புதன்கரிநாள் 
320வியாழன்சுக்லபட்ச சஷ்டி 
623ஞாயிறுவாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், குலச்சிறையார் குருபூஜை 
825செவ்வாய்குங்கிலியக்கலயனார் குருபூஜை 
926புதன்சுக்லபட்ச சர்வ ஏகாதசி, கரிநாள் 
1027வியாழன்சுக்லபட்ச மஹாபிரதோஷம் 
1128வெள்ளிவரலக்ஷ்மீ விரதம், ச்ரவண விரதம், ஓணம் பண்டிகை, நடராஜர் அபிஷேகம் 
1229சனி பௌர்ணமி, ஆவணி அவிட்டம், யஜூர் உபாகர்ம 
1330ஞாயிறுச்ராவண பகுள பிரதமை 
 செப்டம்பர்   
151செவ்வாய்கிருஷ்ணபட்ச சதுர்த்தி 
162புதன்சதுர்த்தி விரதம் 
173வியாழன்கிருஷ்ணபட்ச சஷ்டி 
184வெள்ளிகிருத்திகை, சஷ்டி விரதம் 
195சனிகோகுலாஷ்டமி 
206ஞாயிறுதக்ஷஸாவர்ணி  மன்வாதி 
239புதன்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி, செருத்துணையார் குருபூஜை 
2410வியாழன்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், புகழ்த்துணையார் மற்றும் அதிபத்தர் குருபூஜை 
2511வெள்ளிமாச சிவராத்திரி, இளைகுடிமாறனார் குருபூஜை 
2612சனிசர்வ அமாவாஸ்யை 
2713ஞாயிறுமறைஞானசம்பந்தர் குருபூஜை 
2814திங்கள் பாத்ரபத சுத்த பிரதமை, கரிநாள், சாந்த்ரமான பாத்ரபத மாச ஆரம்பம், சந்த்ரதர்சனம் 
2915செவ்வாய்கல்கி ஜயந்தி 
3016புதன்தாபஸ மன்வாதி 
3117வியாழன்சுக்லபட்ச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி 
புரட்டாசி 219சனிசுக்லபட்ச சஷ்டி, புரட்டாசி முதல் சனிக்கிழமை 
623புதன்ஏனாதி நாயனார் குருபூஜை 
724வியாழன்சுக்லபட்ச சர்வ ஏகாதசி, ச்ரவண விரதம் 
825வெள்ளிசுக்லபட்ச மஹாபிரதோஷம், வாமன ஜயந்தி 
926சனி புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை, நடராஜர் அபிஷேகம், நரசிங்கமுனையரையர் குருபூஜை 
1027ஞாயிறு பௌர்ணமி, அனந்த விரதம் 
1128திங்கள்மஹாளயபட்ச ஆரம்பம் 
1229சனி பாத்ரபத பகுள பிரதமை, உருத்திரபசுபதியார் குருபூஜை 
 அக்டோபர்   
141வியாழன்கிருத்திகை, மஹாபரணி, கிருஷ்ணபட்ச சதுர்த்தி 
152வெள்ளிகிருத்திகை விரதம், திருநாளைப்போவார் குருபூஜை 
163சனிகிருஷ்ணபட்ச சஷ்டி, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை, கரிநாள் 
185திங்கள்மத்யாஷ்டமி 
218வியாழன்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
229வெள்ளிஸந்யஸ்த மஹாளயம் 
2310சனிகிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், கஜச்சாயை, த்வாபரயுகாதி, புரட்டாசி நான்காவது சனிக்கிழமை, அருண்ந்தி சிவாச்சாரியார் குருபூஜை 
2411ஞாயிறுசஸ்த்ரஹத மஹாளயம், மாச சிவராத்ரி 
2512திங்கள்மஹாளய சர்வ அமாவாஸ்யை, அச்வத்த (அரசமர) பிரதக்ஷிணம் 
2613செவ்வாய்ஆச்வின சுத்த பிரதமை, சாந்த்ரமான ஆச்வின மாச ஆரம்பம், நவராத்ரி ஆரம்பம், மஹாளயபட்ச முடிவு 
2714புதன்சந்த்ர தரிசனம் 
2916வெள்ளிசுக்லபட்ச சதுர்த்தி, கரிநாள் 
3017சனி புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை 
ஐப்பசி 118ஞாயிறுசுக்லபட்ச சஷ்டி, ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை 
219திங்கள்சஷ்டி விரதம் 
421புதன்ஸரஸ்வதீ பூஜை, ஆயுத பூஜை 
522வியாழன்விஜயதசமி, ச்ரவண விரதம், ஸ்வாயம்புவ மன்வாதி 
623வெள்ளிசுக்லபட்ச ஏகாதசி, கரிநாள், பூதத்தாழ்வார் குருபூஜை 
724சனிசுக்லபட்ச வைஷ்ணவ ஏகாதசி, பேயாழ்வார் குருபூஜை 
825ஞாயிறுசுக்லபட்ச மஹாபிரதோஷம் 
926திங்கள் பௌர்ணமி, அன்னாபிஷேகம் 
1027செவ்வாய்திருமூலர் குருபூஜை 
1128புதன்வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், ஆச்வின பகுள பிரதமை, நெடுமாறனார் குருபூஜை 
1229வியாழன்கிருத்திகை, இடங்கழியார் குருபூஜை 
1330வெள்ளிகிருஷ்ணபட்ச சதுர்த்தி 
 நவம்பர்   
151ஞாயிறுகிருஷ்ணபட்ச சஷ்டி 
173செவ்வாய்சத்தியார் குருபூஜை 
206வெள்ளிகரிநாள் 
217சனிகிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி 
239திங்கள்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், மாச சிவராத்ரி 
2410செவ்வாய்தீபாவளிப் பண்டிகை, தீபாவளி நோன்பு, மெய்கண்ட தேவர் குருபூஜை 
2511புதன்சர்வ அமாவாஸ்யை 
2612வியாழன்கார்த்திகை சுத்த பிரதமை, சாந்த்ரமான கார்த்திகை மாச ஆரம்பம், ஸ்கந்த சஷ்டி ஆரம்பம், பூசலார் குருபூஜை 
2713வெள்ளிசந்த்ர தர்சனம் 
2915ஞாயிறுசுக்லபட்ச சதுர்த்தி 
கார்த்திகை 117செவ்வாய்கரிநாள், சுக்லபட்ச சஷ்டி, ஸ்கந்த சஷ்டி, சூரஸம்ஹாரம் 
218புதன்ச்ரவண விரதம் 
420வெள்ளித்ரேதாயுகாதி 
622ஞாயிறுசுக்லபட்ச சர்வ ஏகாதசி,  சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி 
723திங்கள்சுக்லபட்ச மஹாபிரதோஷம், கார்த்திகை முதல் சோமவாரம், கரிநாள், ஸ்வாரோசிஷ மன்வாதி 
824செவ்வாய்வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல் 
925புதன் பௌர்ணமி, கிருத்திகை, கார்த்திகை தீபம், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், வைகானஸ தீபம், கணம்புல்லர் குருபூஜை, தர்மஸாவர்ணி மன்வாதி 
1026வியாழன்கார்த்திகை பகுள பிரதமை, திருமங்கையாழ்வார் மற்றும திருப்பாணாழ்வார் குருபூஜை, குருபூஜை, பாஞ்சராத்ர தீபம் 
1329ஞாயிறுகிருஷ்ணபட்ச சதுர்த்தி 
1430திங்கள்கார்த்திகை இரண்டாவது ஸோமவாரம் 
 டிசம்பர்   
151செவ்வாய்கிருஷ்ணபட்ச சஷ்டி 
162புதன்ஸாவித்ரி கல்பாதி 
173வியாழன்கரிநாள் 
184வெள்ளிமெய்ப்பொருள் நாயனார் குருபூஜை 
195சனிஆன் ஆயர் குருபூஜை 
217திங்கள்கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி, கார்த்திகை மூன்றாவது ஸோமவாரம் 
228செவ்வாய்கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் 
239புதன்மாச சிவராத்ரி 
2410வியாழன்போதாயன அமாவாஸ்யை 
2511வெள்ளிஅமாவாஸ்யை 
2612சனிசந்த்ர தர்சனம், மார்கசிர சுத்த பிரதமை, சாந்த்ரமான மார்கசிர மாச ஆரம்பம், மூர்க்கனார் குருபூஜை 
2713ஞாயிறுசிறப்புலியார் குருபூஜை 
2814திங்கள்சுக்லபட்ச சதுர்த்தி, கார்த்திகை நான்காவது சோமவாரம் 
2915செவ்வாய் சதுர்த்தி விரதம், ச்ரவண விரதம் 
3016புதன்சுக்லபட்ச சஷ்டி 
மார்கழி 117வியாழன்சஷ்டி விரதம், பிள்ளையார் நோன்பு, தனுர்மாச பூஜை ஆரம்பம் 
319சனிப்ரளய கல்பாதி 
420ஞாயிறுவாயிலார் குருபூஜை 
521திங்கள்வைகுண்ட ஏகாதசி, குருபகவான் அதிசாரம் 
622செவ்வாய்கிருத்திகை, கரிநாள் 
723புதன்கிருத்திகை விரதம், சுக்லபட்ச மஹாபிரதோஷம் 
824வியாழன் பௌர்ணமி, தத்தாத்ரேய ஜயந்தி 
925வெள்ளிநடராஜர் அபிஷேகம்,  சடையனார் குருபூஜை, கரிநாள் 
1026சனி ஆர்த்ரா தர்சனம், மார்கசிர பகுள பிரதமை 
1127ஞாயிறு பரசுராம ஜயந்தி, கரிநாள் 
1228திங்கள்கிருஷ்ணபட்ச சதுர்த்தி 
1531வியாழன்கிருஷ்ணபட்ச சஷ்டி

54 ஆண்டுக்கு முன் கால்பந்து வீரர்களுடன் மாயமான சிலி விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டெடுப்பு

chili-plane-crash சாண்டியாகோ: சிலி நாட்டில் 54 ஆண்டுகளுக்கு முன் கால்பந்து வீரர்களுடன் மாயமான விமானத்தின் சிதறிய பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி லான் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் மாயமானது. இந்த விமானத்தில் சிலி நாட்டு கால்பந்தாட்ட அணியின் வீரர்கள், நடுவர்கள் உட்பட 24 பேர் பயணம் செய்தனர். ஆனால் இந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. இதை அடுத்து, இந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மௌலே பகுதியில் 54 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அந்த விமானத்தின் பாகங்களை மலையேறும் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்பகுதியில் ஏராளமான மனித எலும்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து கால்பந்து மைதானத்தில் மோதல்: 22 பேர் பலி

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறினர். எகிப்து நாட்டின் கெய்ரோ ஏர் டிஃபன்ஸ் மைதானத்தில் எகிப்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் மைதானத்தில் அதிக அளவில் குவிந்தனர். கெய்ரோ நகரை சேர்ந்த ஜாம்லாக் மற்றும் என்.பி.பி.பி.ஐ அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் அதைக் காண திரண்ட ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். மைதானத்தில் உள்ள ஒரே ஒரு கேட் மட்டுமே திறக்கப்பட்டு அதன் வழியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். போட்டி தொடங்கி விட்டதால் ரசிகர்கள் அவசரம் அவசரமாக உள்ளே நுழைய முயற்சித்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தை பயன்படுத்தி ஜாம்லாக் அணியை சேர்ந்த டிக்கெட் இல்லாத ரசிகர்கள் உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். பாதுகாவலர்கள் அவர்களை தடுத்ததால் அங்கு வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர், மைதானத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட கார்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் அங்குமிங்கும் சிதறி ஓடிய ரசிகர்கள் ஒருவர் மீது ஓருவர் விழுந்து காயமடைந்தனர். கூட்டத்தினரிடையே கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதில் சிக்கி சிறுவர்கள் உள்ளிட்ட 22 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உறவினர்கள் கெய்ரோவில் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். வன்முறை, உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, நேற்று கூடிய எகிப்து அமைச்சரவை, தேசிய லீக் கால்பந்து போட்டியை காலவரையற்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. தொடரும் வன்முறை எகிப்து நாட்டில் கால்பந்து போட்டிகளின் போது வன்முறை வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி போர்ட் சையத் நகரில் நடந்த போட்டியில் அல்அலி மற்றும் அல் மஸ்ரி அணிகள் மோதின. இந்த போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 74 ரசிகர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா குறித்து விமர்சிக்கும் ஒபாமா, அமெரிக்க இனவெறி அறியாதவரா?: யோகி ஆதித்யநாத்

Adityanath-Yogiவாராணசி: இந்தியாவின் மதச் சார்பின்மை விவகாரம் குறித்துப் பேசும் முன்பாக அமெரிக்காவின் இனவெறிப் பிரச்னையை பராக் ஒபாமா தீர்த்துக்கொள்ளட்டும் என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் கூறினார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு, வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத்… “இந்தியாவில் அனைத்து மதங்களும் பூத்துக் குலுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு நாட்டைக் குறை சொல்லும் ஒபாமா, முதலில் தனது நாட்டில் நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதல் பிரச்னையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாகவே அமெரிக்க சாலைகளில் மோசமான இனவெறித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில், இந்துக்களைப் போலவே, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களது மத வழிபாட்டை தடையின்றி நடத்திக் கொள்கின்றனர். அப்பாவி பழங்குடியினர், தலித்துகளை சேவை என்ற பெயரில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்கின்றன. அப்போது வாய்மூடி அவர்களுக்கு ஒத்துழைத்த மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், இந்துக்கள் தாய் மதம் திருப்பும் வேலையில் ஈடுபடத் தொடங்கியதும் அலறுவது ஏன்? நமது நாட்டில் ராமராஜ்யம் வேண்டும் என்றால், இந்துக்கள் ஒருபோதும் ஜாதி அடிப்படையில் பிளவுபட்டுவிடக் கூடாது. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது நிச்சயம்… என்றார்.

தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை

சென்னை: தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை அரசு பொதுமருத்துவமனையில் செய்தியாளரிடம் பேசிய அவர், “பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பயப்படக்கூடிய நோய் அல்ல. காய்ச்சல், ஜலதோஷத்திற்கும், பன்றிக் காய்ச்சலுக்கும் வித்தியாசம் உள்ளது. 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் தயாராக இருக்கிறார்கள். காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி இருந்தால் மருந்து கடைக்கு நேரடியாக சென்று மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களை அணுக வேண்டும். கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பன்றிக்காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். டாமிபுளூ மாத்திரையும் டானிக்கும் சாப்பிட்டால் இது குணமாகிவிடும். பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 221 படுக்கைகளும், 71 வெண்டிலேட்டர் கருவிகளும், 824 தற்காப்பு உபகரணங்கள், முக உறைகள் மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நோய் பரவாமல் தடுக்க பொது இடங்களுக்கு சென்று வரும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும. இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூட வேண்டும். எந்த காய்ச்சலாக இருந்தாலும், அதற்கு சரியான சிகிச்சை அளிக்கவும், தேவையான பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பற்றி பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். தற்போது சென்னை மற்றும் கோவையில் 7 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை அரசு மருத்துவமனையில் இதற்கான சிறப்பு வார்டில் 27 வெண்டிலேட்டர்களும், 30 படுக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளன” என்று கூறினார்.

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவி போதை மருந்து கொடுத்து பலாத்காரம்: வழிகாட்டிக்கு வலைவீச்சு

ஜெய்ப்பூர் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவியை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள டுடு என்ற இடத்தில் வைத்து, அந்த ஜப்பானிய மாணவிக்கு போதை மருந்து கொடுத்த சுற்றுலா வழிகாட்டி, பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டுடு போலீசார் அந்த வழிகாட்டியைப் பிடிக்க வலைவீசித் தேடி வருகின்றனர். முன்னதாக ஜெய்ப்பூருக்கு வந்த அப்பெண் அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அந்த வழிகாட்டி அவரைச் சந்தித்துள்ளார். பின்னர் ஜெய்ப்பூரில் இருந்து 60 கி..மீ. தொலைவில் உள்ள டுடு என்ற இடத்தில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த வழிகாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் அப்பெண் சென்றுள்ளார். அங்குதான் போதை மருந்து கொடுத்து, தன்னை அந்த வழிகாட்டி தன்னை பலாத்காரம் செய்ததாக அப்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஆசிரியர்கள் இருவர் கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் பள்ளி விடுதியில் 6ம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ளது கோராபுட் மாவட்டம். இங்குள்ள உமுரி நகரில் ஆசிரம பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், இதனை வெளியில் தெரியாமல் பள்ளியின் தலைமை ஆசிரியரும், விடுதி கண்காணிப்பாளரும் மறைத்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி விடுதியிலேயே மாணவிக்கு குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பள்ளி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த செமிலிகுடா போலீசார், குழந்தையையும், மாணவியையும் ஜீப்பில் கொண்டு போய் மாணவியின் பெற்றோர் வசிக்கும் உப்பர்கண்டியில் போய் விட்டு வந்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு தலைமை ஆசிரியர் கைலாஷ் வர்மா மற்றும் விடுதி கண்காணிப்பாளர் சபிதா குரு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த மாதம் 23ம் தேதி 10ம் வகுப்பு மாணவி ஒருவர் லிங்ககடாவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாணவியின் பிரசவம் விடுதியில் நடந்திருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவரங்கத்தில் காவல் துறை துணையுடன் அதிமுகவினர் வன்முறை: கருணாநிதி குற்றச்சாட்டு

karunanidhi திருவரங்கம் தொகுதி முழுதும் காவல்துறையினரின் துணையோடு அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவரங்கம் தொகுதியில் நேற்றிரவு காவல் துறை அதிகாரிகளையும், ஏனைய அரசு அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டே, எந்த எதிர்க்கட்சியினரையும் அருகே நெருங்கவிடாமலேயே, ஆளுங்கட்சியினர் இடைத் தேர்தலை நடத்தி முடித்து விட்டார்கள்! என்ன ஆச்சரியமாகவும்,அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? ஆமாம், நேற்றிரவு முழுவதும் திருவரங்கம் தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளர் களுக்கு வாக்கு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் முறையாக வழங்கப்பட்டுவிட்டது. குறிப்பாக ஒரு சில இடங்களில் மனசாட்சியுள்ள வாக்காளர்கள் அ.தி.மு.க. வினர் கொடுத்த தொகையை வாங்க மறுத்த போது, அ.தி.மு.க. வினர் வலுக்கட்டாயமாக அந்த வாக்காளர்களின் வீடுகளில் பணம் அடங்கிய கவர்களை வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவ்வாறு அ.தி.மு.க. வினர் வாக்காளர்களை விலைக்கு வாங்கத் தாங்கள் மலையெனக் குவித்து வைத்திருக்கும் கொள்ளைப் பணத்தை வாரி இறைத்திடக் கூடும் என்று எதிர்பார்த்தே, மற்ற எதிர்க்கட்சிக்காரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருந்த தொலைபேசி எண்களான 94450 29700, 75980 54455, 09448 90830, 74026 07627, 94441 74000, 94431 53253 ஆகியவற்றுக்குத் தொடர்பு கொள்ள முயன்ற போது, எந்தத் தொலைபேசியிலும் பதிலளிக்க ஆளில்லை. இதிலிருந்து, அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டே வாக்குகளுக்குப் பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறதெனத் திருச்சி பத்திரிகையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். நேரில் சென்று பணம் வழங்குவதைத் தடுத்திட முயற்சித்தவர்கள், ஆளுங்கட்சிக் குண்டர்களால் கடுமையாக ஆங்காங்கே தாக்கப்பட்டிருக்கிறார்கள். யாராலும், எதுவும் செய்ய இயலாதபடி, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்துக் கொண்டு காரியத்தை முடித்து விட்டது. இதற்கான அறிவுரைகளை நேரிலே வழங்குவதற்காகத் தான் தமிழகத்தின் “பினாமி” முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாகத் திருச்சிக்கு விரைந்து சென்று விட்டு, திருவரங்கம் செல்லாமல் “நேர்மையாளர்” என்ற முகமூடியை அணிந்து கொண்டு திரும்பினார் போலும்! ஏற்கனவே நான் 5ஆம் தேதியன்று எஞ்சியிருக்கின்ற சில நாட்களில் ஆளுங்கட்சியினர் இந்த இடைத் தேர்தலில் இன்னமும் என்னவெல்லாம் செய்வார்களோ என்று எனது அய்யப்பாட்டைக் குறிப்பிட்டிருந்தேன். அதனை மெய்ப்பித்திடும் வகையிலே தான் அங்கே அ.தி.மு.க. வினர் அராஜக சேட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டு, ஜனநாயக நெறிமுறைகளின் கழுத்தை நெரித்துக் குழிதோண்டிப் புதைத்து விட்டுக் குதூகலம் கொண்டிருக்கிறார்கள். நேற்றை தினமே திருவரங்கத்தில் பா.ஜ.க. வைச் சேர்ந்த தொண்டர்கள் மீது அ.தி.மு.க. வினர் பயங்கரத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். பாஜக வினர் மீது குறிப்பாக ஒரு வந்தான பிரமுகர் மீது அதிமுக வினர் உதைப்பதையும், கொடிக் கம்பால் அடிப்பதையும், அதைக் கவனிக்காமல் காவல் துறையினர் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதையும் புகைப்படமாகவே சில நாளேடுகள் வெளியிட்டிருக்கின்றன. வீரேஸ்வரம் மேலத் தெருவில் பா.ஜ.க. வினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அதை மறித்து அந்தப் பிரசார வாகனத்தில் இருந்த மைக்கைப் பிடுங்கி அதிமுகவினர் எறிந்த தோடு, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பார்த்திபனை மைக்கின் ஒயரைக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். அதுபோலவே கம்பரசம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்தக் கட்சியைச் சேர்ந்த சசிக் குமார் என்பவர் பேசிக் கொண்டிருந்ததை மறித்து அவரை அ.தி.மு.க. வினர் தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், இந்த அட்டூழியங்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகத் தான் நேற்றிரவு முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கின்ற காரியத்தை அதிமுக வினர் செய்து முடித்துள்ளார்கள். சென்னையிலே உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி இந்தத் தேர்தல் முறையாக நடக்கவேண்டுமென்று விரும்பிய போதிலும், அவருக்கு அடுத்த நிலையிலே உள்ளவர்களும், குறிப்பாக திருச்சியிலும், திருவரங்கத்திலும் உள்ள அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் எடுபிடிகளாகவும், ஏவலுக்குக் கட்டுப்படும் சேவகர்களாகவும் செயல்படுகிறார்கள். பயங்கரவாதத்தையும், கொடிய வன்முறையினையும் அரங்கேற்றி விட்டு அந்தப் பரபரப்பில் பணப் பட்டுவாடாவை அதிகார வர்க்கத்தின் துணையோடு நிறைவேற்றி, பணநாயகத்தை முன்னிலைப்படுத்திய ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதமான – அராஜகச் செயல்பாடுகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதற்குரிய நடவடிக்கைகளை இப்போதாவது விழித்தெழுந்து மேற்கொள்ள வேண்டு மென்றும்; அரசியல் சட்டத்தையும், மக்களாட்சி நெறிமுறைகளையும் பாதுகாத்திடத் தங்கள் கடமையினை ஆற்றிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

  • என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவில்லை: மக்கள் சாலைமறியல்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு 50 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கிராம மக்கள் நாமக்கல்-திருச்சி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை

புதுதில்லி : நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.