Home Blog Page 6358

இமை போல் காக்கும் நாகம்மன்

அம்மனின் நாகரூபம் சுயம்புவாக முகிழ்த்து பக்தர்களுக்கு அருளிவரும் தலம்தான் தும்பூர்தாங்கல் கிராமம். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே அம்மன் எழுந்தருளிய விதமே அற்புதம்.
naga amman - 2026

 இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் திருவாமாத்தூர் என்னும் பழமையான திருத்தலம் உள்ளது. இங்குள்ள முத்தாம்பிகை சமேத  அபிராமேஸ்வரர் ஆலயம் தேவார மூவரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது. அங்கே திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. ஆயிரம் சாட்சிகளை விசாரித்தும் உண்மை விளங்காத வழக்குகளை இந்தத் திருவட்டப்பாறை தீர்த்துவைக்கும் என்பர். சத்தியத்தை நிலைநாட்டும் பாறை. ஒரு சமயம், தன் தம்பியின் சொத்துகளை அபகரிக்க எண்ணிய அண்ணன் ஒருவன், இப்பாறைமுன் பொய்யுரைத்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். சில கல் தொலைவு சென்றதும், அவன் அம்மனை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, “திருவட்டப்பாறை தெய்வம் சீறிக்கொத்துமோ?’ என்று ஏளனமாகக் கேட்டான். அவ்வளவில் பூமியிலிருந்து வெளிப்பட்ட கருநாகம் ஒன்று சீறி அவனைக் கொத்தியது. அனைவரும் வியந்து நிற்க, அந்த நாகத்தின் தலை மட்டும் பூமிக்கு மேலே தெரியும் நிலையில் கல்லாக மாறியது. அந்த நாகம்மனை மக்கள் வழிபடத்தொடங்கினர்.

அவளே தும்பூர்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறாள்.

(இதன் வால் திருவாமாத்தூர் அம்மனிடம் உள்ளதாகக் கூறுகிறார்கள்).

ஆலயக் கருவறையில் நாகம்மன் எழுந்தருள, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டலட்சுமி மற்றும் நவகிரக சந்நிதிகளும் எழிலுடன் விளங்குகின்றன. கடந்த 16-9-2013 அன்று இங்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

“”இந்த நாகம்மனை உள்ளன்போடு வழிபட்டால், கண்ணிமைபோல நம்மைக் காத்தருள்வாள்” என்கிறார் ஆலய அர்ச்சகர் வெ. அபிராம சர்மா.

விநாயகரின் ஆறுபடைவீடுகள்

 விநாயகரின் ஆறுபடைவீடுகள்

KVinayakar - 2026

1    திருவண்ணாமலை
2    திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து பிள்ளையார்
3    திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்
4    திருச்சி உச்சிப் பிள்ளையார் (அ) மதுரை ஆலால சுந்தர வினாயகர்
5    பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் (அ) காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
6    திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்

ஆறுபடை வீடுகள் – முருகன்

முருகனின் ஆறுபடை வீடுகள்

aarupadaiveedu - 2026

1    திருப்பரங்குன்றம்
2    திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்
3    திருவாவினன்குடி (எ) பழனி
4    திருவேரகம் (எ) சுவாமிமலை
5    திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
6    பழமுதிர்சோலை

274 சிவாலயம்

274 சிவாலயம்

41+Mount+Kailash+North+Face+Sunrise+From+Dirapuk+On+Mount+Kailash+Outer+Kora - 2026

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி, நாகப்பட்டினம்
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர், திருவாரூர்
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் , நாகப்பட்டினம்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், தஞ்சாவூர்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர்
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், விழுப்புரம்
அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், ஆருர் அரநெறி, திருவாரூர்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர், விழுப்புரம்
அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை, திருவாரூர்
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை, தஞ்சாவூர்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர், கடலூர்
அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல்
அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி, திருப்பூர்
அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில், தஞ்சாவூர்
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை, திருச்சி
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை, ராமநாதபுரம்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், நாகப்பட்டினம்
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை, திருச்சி
அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம்
அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி, கடலூர்
அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம்
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், நாகப்பட்டினம்
அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர்
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, நாகப்பட்டினம்
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம், நாகப்பட்டினம்
அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை, திருச்சி
அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி, திருவள்ளூர்
அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர்
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர், திருச்சி
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம், மதுரை
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர்
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம், திருவாரூர்
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம்
அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர், காஞ்சிபுரம்
அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை, கரூர்
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர், நாகப்பட்டினம்
அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல், திருவாரூர்
அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, நாகப்பட்டினம்
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை
அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம், திருவாரூர்
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி, நாகப்பட்டினம்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்
அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர், கரூர்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம், திருவாரூர்
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி, வாரணாசி
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, சித்தூர்
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம்
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா, நாகப்பட்டினம்
அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு, நாகப்பட்டினம்
அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர், திருவாரூர்
அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம், திருவாரூர்
அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை
அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், திருவாரூர்
அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர்
அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு, நாகப்பட்டினம்
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர்
அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர், தஞ்சாவூர்
அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர்
அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம்
அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, தஞ்சாவூர்
அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர் இளங்கோயில், திருவாரூர்
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு
அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்
அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர், தஞ்சாவூர்
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை
அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி
அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர், திருவாரூர்
அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம்
அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, நாகப்பட்டினம்
அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர்
அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர்
அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம், திருவாரூர்
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, திருவாரூர்
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், திருவாரூர்
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம், தஞ்சாவூர்
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம்
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்
அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்
அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம், தஞ்சாவூர்
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி, கடலூர்
அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம், தஞ்சாவூர்
அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம், நாகப்பட்டினம்
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம், விழுப்புரம்
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், நாகப்பட்டினம்
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம், திருவள்ளூர்
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, தஞ்சாவூர்
அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர், கடலூர்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை, நாகப்பட்டினம்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில், நாகப்பட்டினம்
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம், கடலூர்
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம்
அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி, திருவாரூர்
அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், தஞ்சாவூர்
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர்
அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை, விழுப்புரம்
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில், சிவகங்கை
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில், திருவாரூர்
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம்
அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழபழையாறை வடதளி, தஞ்சாவூர்
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர்
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், தஞ்சாவூர்
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், காஞ்சிபுரம்
அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, திருச்சி
அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர்
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்
அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி, திருச்சி
அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு, திருவண்ணாமலை
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர், நாகப்பட்டினம்
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர், திருவாரூர்
அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம், திருவள்ளூர்
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர், சிவகங்கை
அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர்
அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம்
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம்
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல், காஞ்சிபுரம்
அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி, திருப்பூர்
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி, விருதுநகர்
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி, நாகப்பட்டினம்
அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர்
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம், சென்னை
அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை, மதுரை
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, கடலூர்
அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில், திருவாரூர்
அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர், காஞ்சிபுரம்
அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர், திருவாரூர்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்
அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர், திருவாரூர்
அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு, திருவாரூர்
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம்
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில், புஞ்சை, நாகப்பட்டினம்
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, திருவாரூர்
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, நாகப்பட்டினம்
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி, திருவாரூர்
அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம், திருச்சி
அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர்
அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர்
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி), தஞ்சாவூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம், திருவாரூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், தஞ்சாவூர்
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், தஞ்சாவூர்
அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில், புதுச்சேரி
அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர்
அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர்
அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல், திருவாரூர்
அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர், கடலூர்
அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார், நாகப்பட்டினம்
அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம், விழுப்புரம்
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், கடலூர்
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர்
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம், திருவாரூர்
அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி, புதுச்சேரி
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர், திருவாரூர்
அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர்
அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி, தஞ்சாவூர்
அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம், தஞ்சாவூர்
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில், தஞ்சாவூர்
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர், கடலூர்
அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,, தஞ்சாவூர்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல், திருவாரூர்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், நாகப்பட்டினம்
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர்
அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர்
அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல், திருவாரூர்
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர்
அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர், திருவாரூர்
அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர்
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, விழுப்புரம்
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம், திருச்சூர்
அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர்
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், நாகப்பட்டினம்
அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர்
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு
அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம், கடலூர்
அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர்
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம், திருவாரூர்
அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், திருவாரூர்
அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை, திருச்சி
அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு, விழுப்புரம்
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை
அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல்
அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம்
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில், சென்னை
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம்
அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி, திருச்சி
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி, திருவாரூர்
அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல், நாகப்பட்டினம்
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர்
அருள்மிகு மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர், திருவாரூர்
அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், புதுச்சேரி
அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர், தஞ்சாவூர்
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை, கரூர்
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம்
அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி, திருவாரூர்
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம்
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர்
அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை, திருவாரூர்
அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர்
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம்
அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்., கடலூர்
அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர், திருவள்ளூர்
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம், திருவாரூர்
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர்
அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம், திருவண்ணாமலை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர்
அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம், வேலூர்
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர்
அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர்
அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர்
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர்
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி, திருவாரூர்
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர், நாகப்பட்டினம்
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை, நாகப்பட்டினம்
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம்
அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர்
அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி, திருவாரூர்
அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர், நாகப்பட்டினம்
அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர், திருவாரூர்
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம்
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, தஞ்சாவூர்
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, காஞ்சிபுரம்
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்
அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல், நாகப்பட்டினம்
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி, அரியலூர்
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில், நாகப்பட்டினம்
அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர், திருவாரூர்
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி
அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம், வேலூர்

108 திவ்ய தேசம்

166874 168288283216215 100001051325299 394977 817973 n - 2026

எண்    தலத்தின் பெயர்
01.    திருவரங்கம்
02.    திருஉறையூர்
03.    திருத்தஞ்சை மாமணிக் கோயில்
04.    அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்
05.    உத்தமர் கோயில்

06.    திருவெள்ளறை

07.    புள்ளபூதங்குடி

08.    கோயிலடி

09.    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர்

10.    தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்

11.    சிறு புலியூர்

12.    திருச்சேறை சாரநாத பெருமாள்

13.    தலைச்சங்காடு

14.    கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

15.    கண்டியூர்

16.    ஒப்பிலியப்பன்

17.    திருக்கண்ணபுரம்

18.    திருவாலி,திருநகரி

19.    நாகப்பட்டினம்

20.    நாச்சியார்கோயில்

21.    நாதன் கோயில்

22.    மாயவரம்

23.    சிதம்பரம்

24.    சீர்காழி

25.    திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)
26.    திருக்கண்ணங்குடி

27.    திருக்கண்ணமங்கை

28.    கபிஸ்தலம்

29.    திருவெள்ளியங்குடி

30.    திருமணிமாடக் கோயில்

31.    வைகுந்த விண்ணகரம்

32.    அரிமேய விண்ணகரம்

33.    திருத்தேவனார்த் தொகை

34.    வண்புருடோத்தமம்

35.    செம்பொன் செய்கோயில்

36.    திருத்தெற்றியம்பலம்

37.    திருமணிக்கூடம்

38.    திருக்காவளம்பாடி

39.    திருவெள்ளக்குளம்

40.    திருப்பார்த்தன் பள்ளி

41.    திருமாலிருஞ்சோலை

42.    திருக்கோட்டியூர்

43.    திருமெய்யம்

44.    திருப்புல்லாணி

45.    திருத்தண்கால்

46.    திருமோகூர்

47.    கூடல் அழகர் கோயில்

48.    ஸ்ரீவில்லிபுத்தூர்

49.    திருக்குருகூர்
50.    திருத்துலைவில்லி மங்கலம் – இரட்டைத் திருப்பதி
51.    வானமாமலை
52.    திருப்புளிங்குடி
53.    திருப்பேரை
54.    ஸ்ரீவைகுண்டம்
55.    திருவரகுணமங்கை(நத்தம்)
56.    திருக்குளந்தை – பெருங்குளம்
57.    திருக்குறுங்குடி

58.    திருக்கோளூர்
59.    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

60.    திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
61.    திருக்காட்கரை

62.    திருமூழிக்களம்

63.    திருப்புலியூர்

64.    திருச்செங்குன்றூர்

65.    திருநாவாய்

66.    திருவல்லவாழ்

67.    திருவண்வண்டூர்

68.    திருவட்டாறு

69.    திருவித்துவக்கோடு

70.    திருக்கடித்தானம்

71.    திருவாறன்விளை

72.    திருவயிந்திபுரம்

73.    திருக்கோவலுர்

74.    திருக்கச்சி

75.    அட்டபுயக்கரம்

76.    திருத்தண்கா(தூப்புல்)

77.    திருவேளுக்கை (காஞ்சிபுரம்)

78.    திருப்பாடகம் (காஞ்சிபுரம்)

79.    திருநீரகம் (காஞ்சிபுரம்)

80.    நிலாத்திங்கள் (காஞ்சிபுரம்)

81.    திரு ஊரகம் (காஞ்சிபுரம்)

82.    திருவெக்கா (காஞ்சிபுரம்)

83.    திருக்காரகம் (காஞ்சிபுரம்)

84.    திருக்கார்வானம் (காஞ்சிபுரம்)

85.    திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்)

86.    திருப்பவள வண்ணம் (காஞ்சிபுரம்)

87.    திருப்பரமேச்சுர விண்ணகரம்

88.    திருப்புட்குழி

89.    திருநின்றவூர்

90.    திரு எவ்வுள்

91.    திருநீர்மலை

92.    திருவிடவெந்தை

93.    திருக்கடல்மல்லை

94.    திருவல்லிக்கேணி

95.    திருக்கடிகை (சோளிங்கர்)

96.    திருவேங்கடம்

97.    அகோபிலம் (சிங்கவேள்குன்றம்)
98.    திருவயோத்தி

99.    நைமிசாரண்யம்

100.    சாளக்கிராமம்

101.    பத்ரிகாச்ரமம்

102.    தேவப்ரயாகை

103.    திருப்பிரிதி

104.    திருத்துவாரகை

105.    வடமதுரை

106.    ஆயர்பாடி

107.    திருப்பாற்கடல்

108.    பரமபதம்

Sriram Vedic – a complete website

Sriram Vedic provides, fulfills a need – we understand that people need answers that are timely, authentic, and clear. Sriram Vedic was created with this in mind, to provide answers about the lives of members in the areas of finance, relationship, career, spirituality, health, business, children/family, travel and other personal problems too. 
1381433 172325706303986 763165473 n - 2026
In fact, getting the birth chart reading done and performing appropriate remedies is a rich and rewarding experience for our clients.

ஸ்வதர்மம்!

Rishi - 2026

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே – விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
– என்றொரு வெண்பாவை படித்த நினைவு.

சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவை இந்தப் பாட்டில் சொல்லியிருப்பதாக பாடம் படித்த நினைவு.

கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.

ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப்  பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.
– என்ன அருமையான உவமை!

உவமைகள் மட்டும் இல்லாதிருந்தால், நம் வாழ்வில் சுவையேயிராது. கானல் நீராகக் கரைந்து போகும் கண நேர வாழ்க்கையில், வாழ்வீன் முழுமையை ரசித்து அனுபவிக்க உவமைகள் எப்படிக் கைகொடுக்கின்றன.

பார்க்கும் ஒரு பொருளை சொல்ல வரும் பொருளோடு பொருத்திப் புரிய வைக்க முயலுதல் உவமையின் பலன்!

அதுபோன்றதே, சிறு கதைகள் உதாரணக் கதைகள் வழியே விளக்குதல்….
சான்றோர் சினத்தைச் சொல்ல வந்துவிட்டு, சான்றோர் சினத்தின் இயல்பைக் கூறிவிட்டு, சான்றோர் குணத்தைக் கூறாது விட்டால்…? முழுமை பெறாதல்லவா?!!

ஸ்ரீராமகிருஷ்ணர் முதற்கொண்டு பலரும் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கதை…

துறவி ஒருவர்… ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது.
குளித்துக் கொண்டிருந்த துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் இந்தத் துறவி என்ற ஞானம் அந்தத் தேளுக்கு இல்லை. வழக்கம்போல் தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் நறுக்கென்று கொட்டியது தேள்.
வலியால் துடித்த துறவி, தவறிப்போய் தேளை நீரில் தவறவிட்டார். இருப்பினும் தன் இயல்பு குணமான கருணையைக் கைக் கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்… தேளோ மறுபடியும் கொட்டியது.
மீண்டும் அதே கதை. இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார்…
துறவியாரே… தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாய்க் கொட்டுகிறதே… நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்ப கையில் எடுத்து கொட்டுப் படுகிறீர்கள்.
அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்!
அதற்கு துறவி கூறினார்…
“கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாத போது என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?”. என்றார்.
இங்கே துறவி கூறியதே, ஸ்வதர்மம் என்ற பொருளில் முன்னோர் உரைத்தனர்.
இது நம் ஸ்வதர்மம் என்று நாம் கைக்கொண்ட பின், நம் இயல்பை விட்டு நாம் மீறலாமோ?!

(இதே விளக்கமாக ஸ்ரீவைஷ்ணவம் காட்டும் கதை ஒன்றும் கூரத்தாழ்வான் – கிருமிகண்ட சோழன் விஷயத்தில் உண்டு.)

என் வாழ்நாளில்… இந்தக் கதையில் கொட்டிய தேளைப் போல் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்… பதிலுக்குக் கொட்டாமல் தூக்கிக் கரையேற்ற முற்பட்டதால், தேள்களெல்லாம் காப்பாற்றுபவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. பதிலுக்குக் கொட்டியிருந்தால், முதிர்ச்சி அடைந்த மனிதன் என்றும், ராஜ தந்திரி என்றும் சாணக்கியன் என்றும் பட்டம் கிடைத்திருக்கும். நம் ஸ்வதர்மம் காத்த பலன் சின்னப் பையன் என்றும், அப்பாவி என்றும்தான் பட்டம் கொடுக்கிறது இந்த உலகம்!

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை

gandhiji jp - 2026

1988 – மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி ‘மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன்.

இடம்: தென்காசி திருவள்ளுவர் கழகம். தென்காசி பெரிய கோவில் கோபுரம் அப்போது கட்டப்பட்டு வந்தது. குற்றால மலைக் காற்று சுகமாய் மோதித் தலை கோதும்! நான் அப்போது தென்காசி கீழப்புலியூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன். அதற்கு முன்னர் பள்ளிகள் அளவிலான சிறு சிறு போட்டிகளில் பங்கு பெற்றிருந்தேன் என்றாலும், அவை எல்லாம் மைக் இல்லாமல் சிறிய அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் பேசும் பேச்சுப் போட்டிகளாகத்தான் இருந்தன! அன்று… அக்.2. காந்தி ஜயந்தி!

தென்காசி திருவள்ளுவர் கழகம், பொதிகைத் தென்றலுடன் அகத்தியம் கண்ட தமிழ் ஒலிக்கும் திருக்கூடம்! இலக்கியவாதிகள் பலர் களம் கண்ட புனிதமான மேடை!

காந்தி ஜயந்தி என்பதால் அன்று மாணவர்கள், பெரியவர்களின் பேச்சுக்கு திருவள்ளுவர் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லாரும் காந்தியைப் பற்றியே பேசுகிறார்களே… நாம் வேறு ஏதாவது பேசலாமே என்று தலைப்பை யோசித்தேன். காந்தியைப் போல் தென்னகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய அரசியல் குருவாகத் திகழ்ந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் குறித்தே பேசலாமே என்றார் ஆசிரியர் ராமலிங்கம். குறிப்பெடுத்தேன். முதல் ’மைக் பிடித்து’ மேடையேற்றம் கண்டேன்!

பேசி முடித்த பின்னர் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்கள். “இந்திய சுயராஜ்யம்” என்ற புத்தகம். மதுரை காந்தி இலக்கியப் பண்ணை வெளியிட்ட புத்தகம். அதில், காந்திஜி ஒரு வாசகரும் ஆசிரியரும் பேசுவது போல் பல கருத்துகளை விதைத்திருப்பார். இந்தியாவின் நிலைமை, ஹிந்துக்களும் முஸ்லிம்களும், சுயராஜ்யம் என்றால் என்ன, இந்தியா எப்படி விடுதலை அடைய வேண்டும், மிருக பலத்தால் என்ன சாதிக்க முடியும், சாத்வீக எதிர்ப்பை பதிவு செய்வது எப்படி, கல்வி, இயந்திரம் போன்றவற்றைப் பற்றி தமது கருத்துகளை அலசியிருப்பார். இயந்திரம் பற்றி அவர் குறிப்பிடும் ஓர் இடத்தில், இயந்திரங்களால் மனிதனின் பணிகள் பாதிக்கப்படுவதையும், மனித உழைப்புக்கு மதிப்பில்லாது போவதையும் குறிப்பிடுவார். அதில், ரயில்களுக்கும் டிராம் வண்டிகளுக்கும் எதிரான அவரின் அதீத எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எந்த ரயில் வண்டியில் ஏறி இந்தியா முழுமைக்கும் ஊர் சுற்றி மக்களைச் சந்தித்தாரோ, அதே ரயில் வண்டியின் மீதான கோபம், ஆலைகளுக்கு எதிரான கொள்கை, இயந்திரங்கள் வேண்டாம் என்ற கருத்து… எல்லாம் 13 வயது மாணவனாக இருந்த எனக்குள் ஒரு தீவிர யோசனையைக் கிளப்பியிருந்தது. எனக்கு எழுந்த அதே சந்தேகத்தை அவரே ஒரு கேள்வியில் கேட்டு பதிலாகவும் ஆக்கியிருந்தார்.

நீங்கள் குறிப்பிடும் இந்த எதிர்ப்பு உணர்வையெல்லாம் அதே இயந்திரத்தின் மூலம்தான் அச்சிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.. என்று கேள்வியும் கேட்டு, அதற்கு பதிலாக, “விஷத்தைக் கொல்ல விஷம்தான் பயன்படும்” என்றும் கூறியிருப்பார் மகாத்மா காந்தி.
சிறு வயதிலேயே வேறு பொழுது போக்குகள் இல்லாத காலம் என்பதால், புத்தகங்களைப் படிப்பதே ஒரே பொழுது போக்கு! இந்த இந்திய சுயராஜ்யம் புத்தகத்தை நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். அதில் என் பெயரும் வருடமும் திருவள்ளுவர் கழக இலச்சினையும் இருக்கும்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர். காந்திஜியின் கிராம சுயராஜ்யம் குறித்து குறிப்புகளைக் கேட்டார். கைவசம் இருந்த இதே நூலை அவரிடம் கொடுத்து உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிவந்தேன். ஆண்டுகள் பலவானாலும் காந்திஜியின் தர்ம சிந்தனைகள் மட்டும் உள்ளத்தில் பதிந்து விட்டன.

(பின் குறிப்பு: இலக்கிய தாகத்தை வளர்த்தது திருவள்ளுவர் கழகமும் ரசிகமணி டி.கே.சி., வாரிசுகளாய் தமிழ் கற்பித்த (பள்ளி சாராத) பெரியவர்களும் என்றால், அரசியல் வாசனையை வெறுக்க வைத்ததும்கூட அதை ஒட்டிய இடமும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் கட்சிப் பணிகளுக்கு அழைத்துச் சென்ற வாத்தியார்களும்தான்! திமுக கூட்டத்துக்கு ஆள் சேர்க்க எங்களை அழைத்துச் சென்றார்கள். தென்காசி பெரிய  கோயில் எதிரே நடக்கும் திமுக கூட்டத்தில், வை.கோபால்சாமி அடுக்கு மொழியில் பேசினால் அடுத்தடுத்து கை தட்ட நாங்கள் வேண்டும்! தேர்தல் நோட்டீஸ் கொடுக்க நாங்கள் பயன்படுத்தப் பட்டோம். கருணாநிதியைத் தவிர வேறு தமிழறிஞர்களே தமிழகத்தில் தோன்றியதில்லை என்று கற்பிக்கப்பட்டோம். அண்ணாத்துரையைத் தவிர வேறு மேடைப் பேச்சாளரே கிடையாது என்று பாடம் புகட்டப்பட்டோம். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சரிதானே!)

(இந்தப் படம், ஓவிய நண்பர் ஜெ.பிரபாகர் வரைந்து கொடுத்தது.)