தரித்திரத்தை விரட்டிட தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிகள்…!

Published:

hous 1 - 2026
poverty – poor housing in a village

நாம் குடியிருக்கும் வீட்டில் அது குடிசையோ, அல்லது மாளிகையோ எதுவாக இருந்தாலும் நாம் செய்யும் சில காரியங்களால் தரித்திரம் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து நம்மை வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும்.

நம் கையில் எவ்வளவு தான் பணம் சேர்த்தாலும் அது கையில் தங்காமல் கைவிட்டு சென்று கொண்டே இருக்கும்.

இவ்வாறு ஏற்படும் கஷ்ட நிலைகளை தான் தரித்திரம் நம் வீட்டில் குடி கொண்டிருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

அத்தகைய தரித்திரம் நம் வீட்டில் தங்குவது ஏன்? என்பதற்கான காரணங்கள் இதோ

வீட்டில் தரித்திரம் இருப்பது ஏன்?

கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரமாக சுத்தமாக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பது.

வீட்டில் உள்ள திருவிளக்கை பெண்கள் ஏற்றி வைத்து வழிபாடு செய்யாமல் ஆண்கள் விளக்கு ஏற்றி வழிபடுவது.

தலைமுடி தரையில் உலா வருவது.

hous 3 - 2026

சூரியன் மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது, சுத்தம் செய்வது, நீர்கொண்டு துடைப்பது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

சூரிய மறைவுக்கு பின்னும் வீட்டில் உள்ளவா்கள் படுக்கையில் உறங்குவது.

எச்சில் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், காஃபி கப்புகள் ஆகியவை வீட்டில் ஆங்காங்கே சிதறி கிடப்பது.

பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

ஆண்கள் புதன், வெள்ளி கிழமைகளை தவிர மற்ற நாளில் தலைக்கு குளிப்பது.

சுவற்றில் ஈரம் தங்கவிடுவது.

வீட்டின் சுவற்றில் கரையான்கள் அதிகமாக சேருவிடுவது. ஒட்டடைகள் சேர விடுவது.

கரப்பான்பூச்சி, பல்லி, எலி, பூராண் போன்ற விஷ பூச்சிகள் வீட்டில் உலாவுவது.

அதிகநேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது.

தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது.

உணவு பொருள்கள் வீண் செய்வது, உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை தீரும் வரை வாங்காமல் இருப்பது.

hous 2 - 2026

மெல்லிசை கேட்காமல் சதாகாலம் ராஜச இசையை , அபச இசைகளை கேட்பது.

இல்லை, வராது, வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகமாக உச்சரிப்பது.

படுக்கை அறையையும், பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைப்பது.

இது போன்ற காரணத்தினால் தான் நாம் தங்கும் வீட்டில் தரித்திரம் குடி கொண்டு, நாம் தொடங்கும் செயல்களில் நஷ்டத்தையும், தடைகளையும் ஏற்படுத்துகிறது.

நாம் தங்கும் வீட்டில் தரித்திரம் இருந்தால் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

எவ்வளவு தான் பணம் சேர்த்தாலும் அது நம் கையை விட்டு சென்று கொண்டே இருக்கும். இவ்வாறு ஏற்படும் கஷ்ட நிலைகளை தான் தரித்திரம் நம் வீட்டில் குடி கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள்.

Related articles

Recent articles

spot_img