
உங்கள் உடல் எந்த வகையைச் சேர்ந்தது என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
“ஒவ்வொரு மனித உடலும் வெவ்வேறு தன்மையைக் கொண்டது. தனித்துவமானது.
அதனால் பொதுவாக ஒரு சிகிச்சையை எல்லோருக்கும் வழங்க முடியாது
அதனால் உங்களின் உடல் எந்தத் தன்மையைக்கொண்டது என்பதை அறிந்தால்தான், அதற்கேற்றசிகிச்சையை அளித்து உங்களின் நோயை குணப்படுத்தமுடியும்.
இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே மனித உடலின் குணங்களை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ற சிகிச்சைகளை அளித்தார்கள் நமது சித்தர்கள்
‘ வாதம், பித்தம், கபம் என்ற மூன்று வகைக்குள்ளேயே எல்லா மனிதர்களையும் பிரிக்க முடியும்
அதற்கேற்ற வகையில் சிகிச்சையும், உணவும் அளிக்கும்பட்சத்தில் ஆரோக்கியமான வாழ்வும் சாத்தியம் என்றும் கூறினார்கள்.
ஆயுர்வேதமும் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது”
சித்த மருத்துவம் என்பது உலகுக்குக்கிடைத்த சிறந்த மருத்துவ முறையாகும்.
இது மக்கள் நீண்டநாள் வாழ்வில்,எந்த நோய் நொடிகளும் இல்லாமல்அவர்கள் நலத்தோடு வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.
இவ்வகையான வாழ்க்கை வழிமுறைகளை ஆராய்ந்து தெரிந்தவர்கள் நமது சித்தர்கள்.
மக்கள் நோய்நொடியற்ற நல்வாழ்வு பெறும்வகையில் ஒரு மருத்துவ முறையை கண்டறிந்தார்கள். அதுவே சித்த மருத்துவ முறை.
மனித உடலானது மூன்று முறைகளால்
நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அது வாதம், பித்தம், கபம் ஆகும்.
இம்மூன்றும் சரியாக நாடியில் 1:42 : 4 (அதாவது வாதம் முழுபங்கும்பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்)அளவினை ஒருவரின் இரண்டு கைகளையும் பிடித்து அவருடைய மணிக்கட்டுஅருகில் சற்று கீழே நரம்புகளின் வழியாக கணிக்கப்படுகிறது.
வாதம், பித்தம், கபம் உடலில் இந்த அளவில் சரியாக நடைபெறுமேயானால்மனிதனுக்கு எந்தவித நோய்களும் இல்லாமல் நீண்ட நாள் வாழ்வார்கள்.

அது போல வாதம், பித்தம், கபம் நாடியானது கூடிகுறைந்து காணப்படுமேயானால் அதற்கு ஏற்ப மனித உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன.
இதை கண்டறிவதே சித்த மருத்துவத்தில் முக்கியமான பரிசோதனை ஆகும்.
மனிதனின் கையில் நாடியின் அளவை முறையாக பரிசோதித்து எந்த நோயில்அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக உடனடியாகக் கூறவிட முடியும்.
இந்த முறை இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வாத நாடி மூச்சு வெளிவிடுதல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்தல், தன்மையை உணர்த்துதல்,
வாத பாதிப்பு அறிகுறிவாத நாடியானது பாதிக்கப் படுமேயானால் உடல் உறுப்புகள் செயல்இழத்தல், உடல் முழுவதும் வலி, மூட்டுவலி, உணர்வு இழத்தல், தசைச்சுருங்கல்,சரும வறட்சி, நாவில் ருசி குறைதல், மலக்கட்டு, உடலில் நீர் குறைந்து போதல்,உடல் சோர்வு, தூக்கமின்மை, மயக்கம் போன்றவை உண்டாகும்.பித்த நாடிஉடலுக்கு குளிர்ச்சி, உணரும் தன்மை,உணவு சரியான முறையில் செரிமானம்,சரும நிறம் இயற்கையாக இயல்பாகஇருத்தல்,கண் பார்வை துல்லியமாக இருத்தல், வியர்வை, ரத்தம், இதயம் சரியான முறையில் இயங்கச் செய்வதுபித்த -நாடியின் செயல்
பித்த நாடி பாதிப்படைந்தால்…
முறையாக பித்த நாடியானது செயல்படாமல் கூடியோ அல்லது குறைந்தோ
காணப்படுகிறபோது ஈரல் மற்றும் கல்லீரல் நோய் ஏற்படுதல், பார்வைத்திறன் குறைதல், கண்ணில் படலம் ஏற்படுதல் உடலின் தோல் சுருங்கி கறுப்பாகமாறுவது, அதேபோல் முடியின் கறுப்புநிறம் மாறி வெள்ளை முடி தோன்றுதல்,
மூச்சுவாங்குதல், இதயம் சம்பந்தமானநோய்கள், மனிதனின் உடல் அமைப்புவயோதிக நிலைபோன்று காணப்படும்.
கபம்…
கப நாடியானது உடலுக்கு இயல்பாக
இருக்குமேயானால் உடலுக்கு குளிர்ச்சி,உடல் வலிமை, தோல் பளபளப்பாகஇருத்தல், கண்கள் குளிர்ச்சியாகவும் எவ்வித கண்களுக்கு பாதிப்பு இல்லாமல்தெளிவான பார்வை இருத்தல்,
முடி சிறப்பாக அடர்த்தியாக வளர்தல், பேச்சில்குரல் தெளிவோடு இருத்தல், உடல்குளிர்ச்சி அடைந்து மென்மையாக இயல்பாக இருத்தல், நாக்கில் சுவைத்தன்மை
சரியாக இருத்தல் போன்றவைகளோடு
மனிதன் இயல்பாக இளமையோடு
காட்சி தருவார்கள்.
இவை கப நாடியின்செயல் ஆகும்.
கபம் உடலில் நாடி நடை பாதிக்கப்படுகிறபோது இருமல் மற்றும் சளி உண்டாதல்,
தொண்டை வறட்சி ஆஸ்துமா,சைனஸ், தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் அதிகமாதல், சருமம்வறண்டு காணப்படுதல், அதிகத் தூக்கம்,
நடந்தால் மேல் மூச்சு வாங்குதல்,
நெஞ்சு படபடப்பு, வேலை பார்ப்பதில் உற்சாகம்குறைந்து காணப்படுதல், பசி இல்லாதுஇருத்தல், உமிழ்நீர் சுரப்பு அதிகரித்துகாணுதல்,
மலம் வெள்ளை நிறமாகவெளுத்து செல்லுதல்,
சிறுநீர் அதிகமாகசெல்லுதல் போன்றவைகள் காணப்படும்.
ஆகவே உடல்நிலையில் வாதநாடி,பித்தநாடி, கப நாடி, இயல்பாக இருக்கும்வரை எந்த நோயும் இல்லாது, ஆயுள்அதிகரித்து வாழ முடியும்.
அதேபோல்,ஏதேனும் ஒரு நாடி பாதிக்கப்பட்டிருந்தால் அதனை அறிந்த பிறகு சிகிச்சை
எடுத்துக் கொள்ளும்போது மீண்டும்
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.ஆரோக்கியம் தொடரும்.
வாதம், பித்தம், கபம் சீராக இருக்கஎன்ன செய்யலாம்?
இவை மூன்றும் உங்கள் உடலில் சரியான அளவில் இயங்க நீங்கள் உணவியல்முறையையும் வாழ்வியல் முறையையும்
மாற்றியமைக்க வேண்டும்.
எண்ணெயில் பொறித்த உணவை தினமும் எடுத்துக் கொள்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொறித்த உணவுகளில் எல்லா சத்துக்களும் எண்ணெயோடு போய்விடுகிறது. வெறும் மொறுமொறுப்பு சுவைமட்டும்தான் நமக்கு கிடைக்கிறது.
மேலும் அது நமது செரிமான சக்திக்குஇடைஞ்சலாக இருக்கிறது
.தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை
பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், வேகவைத்த உணவு, நீராவியில் வெந்தஉணவு வகைகளை இனமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
சிறுதானிய வகை உணவுகள்,கொட்டை உணவுகள், பருப்புவகைகள் போன்ற உணவுகளைஅன்றாட உணவில் தேவையானஅளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய சரியான தூக்கமும்வாதம் பித்தம் கபத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். அதனால் உங்களின் தூக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள்.
அதிகபட்சம் 8மணி நேரம் தூங்கி அதிகாலை எழும்பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.
அதிகாலை எழுவது வாதம் பித்தம்கபத்தை சீராக்க உதவும்.
மேலும் அதுபாதிப்படைந்திருந்தால் அதிகாலைவிழிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குஅது சரியான நிலைக்கு வரும்.
உண்பதன் மூலம் உங்களின் வயிறுக்குவேலை கொடுப்பது போல உங்களின்உடலுக்கும் வேலை கொடுங்கள்.
அதாவது உங்கள் உடல் தினமும்உடல் உழைப் பால் கொஞ்சமாவது வியர்க்க வேண்டும்.
அதற்காகஉடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் மேற்கொள்ளுங்கள்.
இது உங்களின் மனத்தூய்மைக்கு உதவும்.
அடிக்கடி கொஞ்ச கொஞ்சமாகதண்ணீ ர் குடியுங்கள்.மது, புகை பழக்கமிருந்தால் அதைஉடனே கைவிடுங்கள்.
கேரட், பீட்ருட், இஞ்சி, பூண்டு, மணத்தக்காளி கீரை, மாதுளம்பழம், வில்வம்பழம், ஆப்பிள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உங்களுடைய வாதம், பித்தம்,கபத்தை சீராக வைத்துக் கொள்ளமுடியும்.
முறையான உணவுப் பழக்கவழக்கங்களோடு மனமும் தூய்மையாகஇருக்க வேண்டும்,
அதுவே நீடித்த ஆயுள் உண்டாக்கும் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை.
ந. #சண்முகசூரியன்
இயற்கை வாழ்வியல் நல #ஆலோசகர்



