
அவரைக்காய் கூட்டு
தேவையானவை:
அவரைக்காய் (நறுக்கியது) – ஒரு கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
உளுத்தம்பருப்பு (பொடி செய்ய) – 2 டீஸ்பூன்,
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உளுத்தம் பருப்பு (தாளிக்க) – கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அவரைக்காய், பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து இறக்கி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக எண்ணெயில் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.



