அறுபதிலும் ஆசை வரும் என்று இதைத்தான் சொன்னார்களோ?! வீட்டில் இளைய திலகங்கள் கைகளில் செல்போன் வைத்திருந்தால் கூப்பாடு போட்டு கத்தி சண்டை போடும் முதிய திலகங்கள், இப்போது தங்கள் கைகளில் செல்போனை சுமந்து கொண்டு, டிக்டாக், பேஸ்புக், இன்ஸ்டா என்று கலக்கி வருகின்றார்கள்.
குறிப்பாக, தங்கள் நடிப்புத் திறமையை, பாடல் ஆடல் திறமைகளை வெளிப்படுத்த டிக்டாக் செயலியை லட்சக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
எத்தனையோ வீடியோக்கள் சமூகத் தளங்களில் வெளிவந்து சக்கை போடு போட்டாலும், சந்திரமுகி பாட்டியின் ஸ்டைல் நடனம் இப்போது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
2005ல் ரஜினி, நயன், பிரபு, ஜோதிகா நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இதில் ஜோதிகா ‘ரா ரா… சரசக்கு ரா ரா’ என கண்களை உருட்டி மிரட்டி ஆடும் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.
இதைப் போன்று பின்னாளில் பலரும் பரதநாட்டிய ஸ்டைல் புடைவை கட்டி, தங்கள் ஆட்டத் திறனை உலகுக்குக் காட்டி வந்தனர். இந்த வரிசையில், டிக்டாக்கில் ஜோதிகாவை போல ‘ரா ரா சரசக்கு ரா ரா’ பாடலுக்கு ஒரு பாட்டி நடனம் ஆடி பலரின் கவனத்தை கவர்ந்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.