
அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திமுக., ஒப்படைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
அசுரன் படம்பார்த்த பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டூவிட்டுக்கு கேலியும் கிண்டலும் சமூகத் தளங்களில் செய்யப் பட்டு வருகிறது.
அசுரம் படம் பார்த்த பின்னர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

அசுரன் படம் மட்டும் அல்ல பாடம்
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தை சாடும் துணிச்சல்காரன் அசுரன்
ஜாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கிறான் அசுரன்
கதை – களம் – வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்க்கு பாராட்டுக்கள்
- திமுக தலைவர் மு க ஸ்டாலின்

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் நேரம் கொடுத்துப் பார்த்தமைக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், பாமக., நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில்…
பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!
200உபிஸ் என்னங்க இதெல்லாம்.
நிலத்தைப் பிடுங்கியவனக்கு சீட்டும் கொடுக்கணும். அந்த கதைய மையமா வச்சு படமெடுத்தா பாராட்டி போஸ்டும் போடணும்,
உடன்பிறப்புகள் எல்லாம் திமுக ஓர் உத்தமர் கழகம் போல வந்து பதிவு போடுறானுங்க





