
கடந்த இரண்டு நாட்களாக ஜீ தமிழ் டிவி தங்களது டிவியில் தெரியவில்லை என்று சீரியல் ஆர்வலர்கள் புலம்பி இருந்திருப்பார்கள். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு போன் பறந்து இருக்கும்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜீ தமிழ் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் தங்களது சேனல்களை கட்டண சேனலாக்கி இருப்பதை அறிவித்து இருக்கிறது.

வி கே டிஜிட்டல் மற்றும் எஸ் சி வி டிஜிட்டல் நேயர்களே உடனடியாக உங்கள் அருகில் உள்ள லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டரை தொடர்பு கொள்ளவும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலின் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரம் மூலம் மக்களின் நெஞ்சத்தை கொள்ளைக்கு கொண்டவர் நடிகை பிரியா ராமன். சூப்பர் ஸ்டார் தயாரித்து இயக்கிய வள்ளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் பிரியா ராமன்.

ஜீ தமிழ் டிவியின் ஜீன்ஸ் ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கி வருகிறார் பிரியா ராமன். இதில் பிரபலமான இவர் செம்பருத்தி சீரியலின் மூலம் புகழின் உச்சியில் இருக்கிறார். செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கும் ரசிகர்கள் உண்டு.

செம்பருத்தி தந்து இருக்கும் புகழால் இவரை வைத்தே தங்களது சானலை கட்டண சானலாக மாற்றி உள்ளதை அறிவித்து இருக்கிறது ஜீ தமிழ் டிவி. அதிகமில்லைங்க மாதம் 10 ரூபாய்தான் என்று சொல்லும்படி இருக்கிறது.

யாருக்காக எந்த நிகழ்ச்சிக்காக இல்லேன்னாலும் செம்பருத்தி சீரியல் பார்ப்பதற்காக இந்த சானலுக்கு கட்டணம் செலுத்திப் பார்ப்பார்கள். சானலுக்கான கட்டணம் அதிகமில்லை 10 ரூபாய்தானே! கட்டணம் செலுத்தி ஜீ தமிழ் டிவியில் உங்களுக்கு பிடித்த சீரியல்களை பாருங்கள்!
வி கே டிஜிட்டல் மற்றும் எஸ் சி வி டிஜிட்டல் நேயர்களே உடனடியாக உங்கள் அருகில் உள்ள லோக்கல் கேபிள் டிவி Operator'ஐ தொடர்பு கொள்ளவும்.#ZeeTamil #SCVDigital #VKDigital pic.twitter.com/uMdXy5e7sd
— Zee Tamil (@ZeeTamil) October 18, 2019