
சீனாவை சேர்ந்த ஜியோவா சிங்லு மற்றும் ஜாவ் ஷாங்க்டாங் ஆகிய இருவர் நேற்று தொலைதூர மலைகளில் காளான்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது, அவர்களுடன் வந்த ஒரு நாய் ஒரே இடத்தில் நின்று கொண்டு குறைத்தவரே காலால் இடத்தை பிராண்டியாவாரு நின்றுள்ளது.
இதனை கண்டு சந்தேகமடைந்த இருவரும் அந்த இடத்தை தோண்டி பார்த்துள்ளனர்.
அப்பொழுது, அந்த இடத்தில் அழகிய ஆண் குழந்தை ஒன்றை அட்டை பெட்டியில் வைத்து புதைந்திருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்த அருகிலிருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, அந்த குழந்தைக்கு ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்துள்ளது.
போலிஸாரின் விசாரணையில் தான் இதன் உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது நேற்று முன்தினமே பிறந்த இந்த குழந்தை கடுமையான நுரையீரல் பிரச்சனையால், மூச்செடுக்கமுடியாமல் இருந்துள்ளது.
அதன்பின்பு, இறந்துவிட்டதாக நினைத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் தான் குழந்தையை மண்ணில் புதைத்துவிட்டு சென்றுள்ளனா்.
ஆனால், நாயின் உதவியால் குழந்தை உயிர் காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



