
தில்லியில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் இன்று தொடங்கியது.
தில்லியில் பெண்கள் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
தில்லியில் மாநிலம் முழுவதும் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும் 40 லட்சம் பயணிகளில் 30% பேர் பெண்கள் ஆவர்.
இந்தத் திட்டத்தின் மூலம் அதிகக் கட்டணம் காரணமாக பாதுகாப்பான பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத பெண்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

ஏராளமான பெண்கள் பேருந்தில் இன்று பயணம் செய்தனர். பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய முடியாமல் உள்ள ஏழை, எளிய பெண்கள் என பலரும் இலவச பயணத்தை பயன்படுத்திக் கொண்டனர்.
டிக்கெட் வாங்கிப் பயணிக்க விரும்பும் பெண்கள் அப்படியே பயணம் செய்யலாம் எனவும், பெண்களால் பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை சொந்தப் பணத்திலேயே பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் இலவச சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Delhi: Free rides for women in DTC, cluster buses from today
— ANI Digital (@ani_digital) October 29, 2019
Read @ANI Story | https://t.co/z0IKfEykJZ pic.twitter.com/qw2xs23coq
Delhi: Free travel for women in Delhi Transport Corporation (DTC) buses, comes into effect from today. pic.twitter.com/s2jbBAgsEM
— ANI (@ANI) October 29, 2019