
நெல்லை மாவட்டம் பணகுடியில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தன்னுடைய மகன் திருமண வரவேற்பு விழாவில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்ததாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
நீதி அரசர்களும் அரசு அதிகாரிகளும் சர்வகட்சினரும் பொதுமக்களும் கவனிக்க வேண்டியது
சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் வைத்திருந்த கட் அவுட் விழுந்ததில், லாரி மோதி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதன் பின்னர் ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் கட் அவுட் வைக்கப் போவதில்லை என்று உறுதிமொழி கொடுத்தன.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, அனுமதியுடன் ஒன்று இரண்டு கட் அவுட் வைத்துக் கொள்ளலாம் என்று கட்சியினருக்கு அனுமதி கொடுத்தார்.

ஆயினும், தி.மு.க சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில், கட்சியினர் எவரும் கட் அவுட் வைக்கமாட்டோம் என்று உறுதி கூறி தாக்கல் செய்யப் பட்டது.
இன்னும் அந்த சோக சுவடுகள் நீங்குவதற்குள்… நீதி அரசர் முன்நிலையில் இதோ தி.மு.க வை சார்ந்த முன்னாள் MLA அப்பாவு அவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 3.11.2019 பணகுடியில் ஷான் தாமஸ் மண்டபத்தில் வெளியே ரோட்டில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது…