கண்டித்த ஆசிரியரை மாணவர்கள் ஒன்று சேர்ந்து தண்டித்த வீடியோ! வைரல்!

அடடே... அப்படியா? இந்தியா கல்வி
teacher - 2026

பிரயாகராஜ் பால்கரன்பூரில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா இண்டர் கல்லூரியில் பெண் மாணவர்களுடன் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி மாணவர்களை திட்டியுள்ளார் ஆசிரியர் இதனையடுத்து, அந்த ஆசிரியரை மாணவர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் ஆகியோர் சேர்ந்த குழு தாக்கியது.

இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. மாணவர்களை கண்டித்ததற்காக அனைத்து மாணவர்களும் சேர்ந்து ஒரு ஆசிரியரை அடித்து துவைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரயாகராஜ் எஸ்.பி கூறுகையில் “எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.