
பாத்திமா என்ற பெயரைக் கேட்டதும்… பதறித் துடித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுகிறார்…? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் டிவிட்டர் சமூகத் தளத்தில்!
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா என்பவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விவகாரத்தில் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின். இவரது கருத்துக்கு, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கையில் அத்தனை மாணவ மாணவிகள் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த போது கருத்து எதுவும் தெரிவிக்கவில்லையே… பாத்திமா என்று பெயர் வந்தால் மட்டும் ஸ்டாலின் ஏன் பதறுகிறார்? சிறுபான்மை, தாழ்த்தப் பட்டவர் என்று இதிலும் ஜாதி, மதம் பார்த்து பிரிவினை உண்டாக்குகிறார் என்று குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களைக் காவிமயமாக்குவதைத் தவிர்த்து, நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்ய வேண்டும்! #JusticeForFathimaLatheef
- என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதற்கு சிலர் அளித்துள்ள பதில்கள்…