December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

என் மகள்களை நித்தியானந்த நரகத்தில் இருந்து மீட்டேன்!: குமுறிய தந்தை!

nithyananda janardhan sarma - 2025
ஜனார்தன சர்மா, அருகில் சம்பத்குமார் ஜீயர் சுவாமிகள் மற்றும் சா.பாஸ்கர்.

நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து மகள்களை மீட்கக்கோரி புகார் அளித்த ஜனார்தன சர்மா செய்தியாளர்களக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்… எனது குழந்தைகளை நல்லப்படியாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் ஒரு நிறுவனத்தில் துணை தலைவராக இருந்தேன். அதன் பிறகு அங்கு சிஇஒவாக ஆனேன். இந்த காலகட்டததில் நடந்த சம்பவங்களை நான் இப்போது பகிர்ந்து கொள்ள போகிறேன்.

சுவாமி நித்தியானந்தா ஆசிரமத்தில் குருகுலம் ஒன்று இருப்பது எனக்கு தெரியவந்தது. அந்த பள்ளி பணம் கட்டி படிக்கக்கூடிய பள்ளி. ரொம்பவே ஆசைப்பட்டு குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று சொல்லி சேர்க்க போனோம். சேர்த்தோம். மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை சேர்த்தேன். 3 வருடங்களில் குழந்தைகளுக்கு அற்புதமான சக்தி கிடைத்திருப்பதாக சொன்னார்கள். அதையில் ஈர்க்கப்பட்ட என்னையும் நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து கொள்ளுமாறு கூப்பிட்டார்.

நான் அப்போது வசதி வாய்ப்புகளுடன் இருந்தேன். நல்ல பதவியில் இருந்தேன். நான் எல்லாவற்றையும் ஒப்படைத்து இனிமேல் நம் வாழ்க்கை மடத்தோடு தான் என்று முடிவுக்கு வந்து, அவர் (நித்தியானந்தா) தான் எல்லாமே என்று சொல்லி நான் இணைந்தேன். இதற்கு என்பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என எல்லாரும் எதிர்ப்பு தெரிவத்தார்கள். எல்லாவற்றையும் மீறி தான் நான் ஆசிரமத்தில் இணைந்தேன்.

நான் இணைந்தது எப்படி என்றால் வேலைக்கு எல்லாம் இல்லை. தன்னார்வ தொண்டனாக இணைந்தேன். நான், எனது மனைவியும் அங்கு இணைந்தோம். என்னுடைய குழந்தைகள் ஏற்கனவே அங்கு இருந்தன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு என்னை அவரின் செயலாளர்களில் ஒருவராக நியமித்தார்.

என்னுடைய வேலை என்னவென்றால், தொலைக்காட்சிகளில் நித்யானந்தா பற்றி சர்ச்சைகள் வந்த நிலையில் அவரை பற்றிய நற்பெயரை உருவாக்க பெரிய பெரிய விஐபிக்களை சந்திக்க வேண்டும். இதன் மூலம் அவர்களிடம் பேசிய நித்தியானந்தாவுக்கு நற்பெயரை பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தான் என்னுடைய முழு நேர பணி. கிட்டத்தட்ட 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்தேன். நிறைய பேரிடம் நித்தியானந்தா பற்றி எடுத்து சொல்லி அவருக்கு மிகப்பெரிய நற்பெயரை வாங்கி கொடுத்தேன்.

2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் நித்தியானந்தா, இந்த இடத்தில் சட்ட ரீதியாக சில பிரச்னைகள் இருப்பதாக எங்களிடம் சொல்லி புறப்படுவதாக சொல்லி புறப்பட்டார். அதன்பிறகு ஆசிரமத்தில் நிறைய தடுமாற்றங்கள் ஏற்பட்டது. பல விஷயங்கள் அப்போது வெளியே வந்தது.

வெளிநாடுகளில் நித்தியானந்தா ஆன்மீக சுற்றுப்பயணம் செய்வார் அப்போது பங்கேற்போர்களிடம் ஒரு நபருக்கு 10 முதல் 15லட்சம் கட்டணமாக வசூலிப்பார். இந்த சுற்றுப்பயணங்களுக்காக எனது முதல் மற்றும் இரண்டாவது மகள்கள் அழைத்துச்செல்லப்பட்டார்கள். அப்படி சில நாடுகளுக்கு என் குழந்தை உள்பட 12 , 15, 16 வயது பெண்க குழந்தைகள் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களின் வேலை என்னவென்றால், எங்கள் சுவாமியால் என்ன மாதிரியான சக்தியும் கொடுக்க முடியும் என்று மார்க்கெட்டிங் செய்வார்கள்.

இப்படி போனது போது என்னுடைய பெரிய மகள் திரும்ப வரவில்லை. சுவாமியும் எந்த ஊர் போயிருக்கிறார் என்று தெரியவில்லை.

நான் ரஞ்சிதாவிடம் கேட்டபோது வரவில்லையா, தெரியவில்லையே என்றார். என் மகள் குறித்து ஆறு மாத காலம் எந்தவிதமான அறிவிப்பும் தெரியவில்லை. நாம் மிகவும் சிரமப்பட்டு இந்தியாவில் உள்ள எங்கள் ஆசிரம தலைவர் உள்ளிட்ட 4 பெண்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, உன் மகள் மேஜர், அவள் வெளியே சென்று இருக்கிறாள் என்றால் விட்டு விட வேண்டியது தானே என்று கோபப்பட்டார்கள்.

அப்படியும் துருவி துருவி கேட்டேன். உன்னால் சுவாமிஜி இருக்கும் இடம் தெரிந்துவிடும்என்றார்கள். என்ன என்று கேட்டபோது உன் பெரிய மகள் அங்குதான் இருக்கிறார் என்றார்கள். இதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அதுவரை இருந்த சிந்தனைகள் அதன்பிறகு முற்றிலும் மாறுபட்டது. நான் மனஉளைச்சலக்கு ஆளானேன். இப்படியே 3 மாதங்களை கடந்தது. இதனிடையே என்னுடைய 2வது மற்றும் 3வது பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தார்கள்.3வது பெண்ணிடம் பாஸ்போர்ட் இல்லை. என்னிடம்பாஸ்போர்ட் கேட்ட போது தான் இந்த விஷயம் எனக்கு தெரிந்தது.

இதை எதிர்த்து நான் பெரும் பிரச்சனை செய்தேன். நான் கேள்வி கேட்பதை உணர்ந்த அவர்கள், என்னை கார்னர் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்பிறகு எனது மகள்களை டெல்லியில் ஆன்மீக பிரச்சாரத்தில் சந்தித்தபோது சில பிரச்சனைகள் இருப்பதை சொன்னார்கள்.

இதற்கிடையே எனது மகனை போல் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள எல்லாம், எங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அவர்களிடம் சிபிஎஸ்இ கல்வி கற்று தருகிறேன். ஐசிஎஸ் கல்வி கற்றுத்தருகிறேன் என நேரத்திற்கு ஒன்றாக பேசி சமாளிப்பார். இதையடுத்து அஹமதாபாத் ஆசிரமத்திற்கு குழந்தைகளை மாற்றினார்.

அகமதாபாத்தில் இருந்து என் குழந்தைகள் இங்கு இருக்க எனக்கு கஷ்டமாக இருக்கு, தயவு செய்து வந்து என்னை அழைத்துக்கொண்டு போங்க என்று என் மனைவியிடம் சொன்னார்கள். உடனடியாக என் மனைவி எங்கள் குழந்தைகளை பார்ப்பதற்காக அஹமதாபாத் போயிருக்கிறார். ஆனால் அங்கு அவரை உள்ளே விடவில்லை. சுமார் 4 மணி நேரம் கேட்டு வாசலிலில் நின்று என் மனைவி போராட்டம் செய்த பிறகு, என்னுடைய 3 குழந்தைகளையும் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். சுமார் 15 நிமிடம் பேச அனுமதித்ததுடன் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

அப்போது என் மனைவி அவர்களிடம் என் குழந்தையிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று கேட்டபோது மறுக்கிறார்கள். அப்போது கடும் விவாதம் நடந்திருக்கிறது. இதை என் மனைவி என்னிடம் போனில் சொன்னார். இதையடுத்து எனக்கும் நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னுடன் ரஞ்சிதா உள்பட நிர்வாகிகள் போனில் கடும் விவாதம் செய்தார்கள்.

இதையடுத்து குழந்தைகளை அழைத்துச் செல்ல முடிவு செய்த நான் வாரணாசியில் இருந்து அஹமதாபாத் சென்றேன். செல்லும் வழியிலேயே எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் போனில் வந்தது. அதையும் தாண்டி நான் அஹமதாபாத் சென்றேன். அங்கு என்னை குழந்தைகளை சந்திக்க அனுமதிக்க வில்லை. நான் சண்டை போட்டு உள்ளே போனால் என்னுடைய இரண்டு குழந்தைகளை மட்டும் சந்திக்க அனுப்பினார்கள். பெரிய குழந்தையை அனுப்பவில்லை. கேட்டால் 18 வயது ஆகிவிட்டது அவள் உங்களை பார்க்க விரும்பவில்லை என்றார்கள்.

ஆனால் என் குழந்தைகளோ இன்று எங்களை அழைத்துச் செல்லாவிட்டால் இனி அழைத்துச்செல்லவே முடியாது என்று தெரிவித்தார்கள். எனினும் குழந்தைகளைள அழைத்துச்செல்ல அனுமதிக்கவிலலை . இதனால் வேதனை அடைந்த நாங்கள் அஹமதாபாத்தில் போலீசில் புகார் அளித்தோம். அதன்பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரவு 8 மணி அளவில் இரண்டு குழந்தைகளை அனுமதித்தனர்.

அங்கு நடந்த அருவருப்பு சம்பவங்கள் குறித்து அப்போது தான் தெரிய வந்தது. என் பெண் இரண்டு மூன்று முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக சொன்னார். அது மைனராக இருக்கும் போது நடந்திருக்கிறது. பலாத்காரம் செய்தவனுடன் என் பெண் குடும்பம் நடத்தி கொண்டிருப்பதாக என் பெண்ணை வைத்து பேச வைத்திருக்கிறார்கள்.

இதனிடையே நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆபாசமான அருவருப்பான சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அங்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். என் மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்றார்.

  • நெல்லை சுரேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories