
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மசமுத்திரம் மோட்டுபாளையம் பகுதியை சார்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). இவர் கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
இவருக்கு ரோஸி (வயது 35).என்ற மனைவி இந்த தம்பதியினர் மகளிற்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவினை சிறப்பிக்க உறவினர்கள் வந்திருந்த நிலையில்., ரோசியின் அண்ணன் ஜோசப் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தாருடன் தாய்மாமன் சீர்வரிசை செய்ய வந்துள்ளனர்.
தாய்மாமன் சீர்வரிசைக்கு பின்னர் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கும் போது உறவினர்கள் அனைவரும் மோகன்ராஜ் ஏற்பாடு செய்திருந்த மதுவிருந்தில் கலந்து கொண்டு மது அருந்தி உள்ளனா்.
பின்னர் மாலை நேரத்தில் தலைக்கு ஏறிய போதையில் ஒருவரை ஒருவர் கேலி பேசியும் செல்லச்சண்டைகள் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த மோகன்ராஜ் ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தாரை கடுமையாகவும் மிகமிக ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஜோசப் தட்டிக்கேட்ட நிலையில்., இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
இதில் கடும் ஆத்திரமடைந்த ஜோசப் விறகு கட்டையால் மோகன்ராஜை பலமாக அடித்துள்ளார்.

இதனால் மோகன்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில்., நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பதறிப்போன உறவினர்கள் மோகன்ராஜை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே மோகன்ராஜ் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்., மோகனின் மனைவியான ரோஸியும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



