ரஞ்சு தொடங்கி மஞ்சு வரை.. நித்தியின் வித்தை!

Published:

ranchu manchu - 2026

அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு பள்ளிக்கூட வளாகத்தில் ஆசிரமம் ஒன்று புதிதாக உருவானது. இதில்தான் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் உட்பட பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இப்படி நித்யானந்தாவுக்கு ஆசிரமம் அமைத்து கொடுத்தது மஞ்சுளா என்கிறார்கள்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது!

manchu 1 - 2026

யார் இந்த மஞ்சுளா..?? இவரது முழு பெயர் பூஜா ஷெராப்.. குஜராத்தை சேர்ந்தவர்.. தொழிலதிபர்..கலோரெக்ஸ் என்ற நிறுவனங்களின் அதிபர்.. ஐஐஎம்-ல் படிப்பை முடித்தவர்.. லண்டன் பிசினஸ் காலேஜில் மேற்படிப்பு.. எல்லா பட்டப்படிப்புகளைய்ம் முடித்த கையோடு குஜராத்துக்கு வந்து கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் இவரது சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் பேமஸ்! இதைவிட முக்கியமான தகவல், இவருக்கு ஆளும் பாஜக தரப்பினர் சிலருடடன் நெருக்கமான நட்பு வட்டாரமும் உள்ளதாம்!

manchu 2 - 2026

மஞ்சுளா ஒரு சிவபக்தை.. 2017-ல் பெங்களூருக்கு தோழியை பார்க்க வந்தபோதுதான், பிடதி ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டு அவரை பார்க்க சென்றுள்ளார் மஞ்சுளா.. சிவனின் அவதாரம் நித்யானந்தா என்று தோழி சொல்லவும், 10 நாள்கள் ஆசிரமத்திலேயே தங்கி பயிற்சி எடுத்திருக்கிறார் மஞ்சுளா. அதற்கு பிறகு தீவிர பக்தையாகவும் மாறிவிட்டார்.

nithiyanata 3 - 2026

சொந்த மாநிலம் திரும்பிய மஞ்சுளா.. தன்னை “மா மஞ்சுளா” என்றுதான் சொல்ல வேண்டும் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டாராம்.. திடீரென பிரார்த்தனையில் இறங்குவாராம்.. பித்தளையைகூட தங்கமாக மாற்றுவேன், ஏன்னா எனக்கு நித்யானந்தாவின் அருள் இருக்கிறது.. என்று சொல்ல தொடங்கினாராம்.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதுதான் நித்யானந்தாவின் குறிக்கோள் என்று என்னென்னவோ சொல்லி உள்ளார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
manchu 3 - 2026

இந்த தொழிலதிபர் பெண்ணிடம் குஜராத்தில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று நித்யானந்தா சொல்ல, மஞ்சுளா தன் பப்ளிக் ஸ்கூலின் வளாகத்திலேயே இடம் தந்துள்ளார்.. பிடதியில் ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் இருந்த நித்யானந்தா, இங்கும் சில காலம் வந்து தங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.

நித்யானந்தாவை நாடே வலைவீசி தேடி கொண்டிருந்தாலும், இன்னமும் சிவபெருமானின் அவதாரம்தான் என்று நித்யானந்தாவை மஞ்சுளா தீவிரமாக நம்பி கொண்டுள்ளாராம்..

nithyanatha 1 - 2026

இது அவர் தனிப்பட்ட விருப்பு என்றாலும், ஆசிரமத்துக்கு வழங்கிய இடம் சட்டத்துக்குப் புறம்பான இடம் என்று குஜராத் காவல்துறையினர் வழக்கு போட்டுள்ளனர். மாநில கல்வித் திட்டத்தில் இருந்த இவரது பள்ளி, மத்திய கல்வி திட்டத்துக்கு மாற்றம் செய்ததிலும் சரியான ஆவணங்களை மஞ்சுளா தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள் குஜராத் காவல்துறையினர்.

manchu - 2026

இப்போதைக்கு முன்ஜாமீனில் இவர் இருந்தாலும், பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. எப்படியும் இவர் கைலாசா தீவுக்கு சென்றுவிடுவார் என்பதாலேயே பாஸ்போர்ட் முடக்கப்பட்டள்ளதாக தெரிகிறது. .

Related articles

Recent articles

spot_img