
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தற்போது, சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய புதிய எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை ஏற்பாடு செய்துள்ளது.
இதனால், ஆட்டோக்களில் ஊழியர்கள் சிலிண்டர்களை விரைவாக சென்று சப்ளை செய்ய முடியும்.
இந்த ஆட்டோக்கள் மூலம் 400 முதல் 450 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை ஏற்றி செல்ல முடியும்.
இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தபட்சம் 20 முதல் 30 சிலிண்டர்கள் எடுத்துச் செல்ல முடியும்.
மிகமிக குறுகலான தெருக்களுக்குள் இந்த ஆட்டோக்கள் எளிதாக செல்லலாம்.
சிலிண்டர்கள் காலதாமதமாக வருவதாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரினால் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.



