
சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ராமசாமி இவருக்கு மூன்று மகன்கள் இதில் 3 பேருக்கும் திருமணமாகி விட்டதால் மூவருக்கும் ராமசாமி தனது சொத்துக்களை பிரித்து கொடுத்துவிட்டார்.
அதன்பின் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் 3-வது மகனான சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சீனிவாசன் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக பிரிந்து வாழ்கிறார்.

இதனையடுத்து தனியாக சிறிய வீட்டில் வசித்து வந்த ராமசாமியிடம் அந்த சிறிய வீட்டையும் விற்று தனக்கு பணம் தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் இதுகுறித்து தந்தை மகனுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், தந்தை என்று பாராமல் ராமசாமியை உளியால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின் தப்பியோடிய சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.



