IMG 20200124 WA0085 - 2026

ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் மோடி. முகம் பிரகாசமாக பொலிவோடு விளங்குவதற்கு காரணம் இதுவே என்று அந்த ரகசியத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

நீண்ட நாட்களுக்கு முன் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். “மோடிஜி! உங்கள் முகம் எவ்வாறு எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? என்று கேட்டார். அவருக்கு நான் இவ்வாறு பதில் அளித்தேன்.

“நான் மிகவும் கடினமாக உழைக்க கூடியவன். அதனால் நெற்றியில் வியர்வை பெருகும். அப்பொழுது முகத்தை வியர்வையால் மசாஜ் செய்து கொள்வேன். அதனால்தான் என் முகம் ஒளியோடு விளங்குகிறது என்று கூறினேன் என்றார்.

IMG 20200124 WA0084 - 2026

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த சாகச பாலர் விருது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது பால புரஸ்கார் விருது பெற்ற சாகச சிறுவர்களுக்கு பிரதமர் பல அறிவுரைகளையும் ஐடியாக்களையும் அளித்தார்.

” ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்” என்றார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

“வாழ்க்கையில் எத்தனை விருதுகள் பெற்றாலும் கஷ்டப்பட்டு உழைப்பதை நிறுத்த கூடாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சிலர் தம் திறமைக்கு ஏற்ப பரிசும் மதிப்பும் கிடைத்தவுடன் கர்வம் கொள்வார்கள். மேற்கொண்டு வேலை செய்வதை நிறுத்தி விடுவார்கள். வேறு சிலர் எத்தனை அவார்டு வந்தாலும் அவற்றை ஊக்கமூட்டும் விதமாக ஏற்று மேலும் உற்சாகமாக உழைத்து முன்னேறுவார்கள். அவார்ட் கிடைத்ததும் இனி சாதிப்பதற்கு எதுவுமில்லை என்று எண்ணக்கூடாது. பரிசுகள் வாழ்க்கைக்கு ஆரம்பப் படிகள் என்று எண்ண வேண்டும்” என்று சிறுவர்களிடம் பிரதமர் எடுத்துரைத்தார்.

IMG 20200124 WA0081 - 2026

இது குறித்து இங்கு நான் ஒரு சட்டத்தை இயற்றி விட்டதாக எண்ணுகிறேன் என்று பிரதமர் ஜோக் அடித்தார்.

இத்தனை சிறிய வயதில் நீங்கள் வயதுக்கு மீறிய திறமையையும் சாகசத்தையும் காட்டி உள்ளீர்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் மிகப் பல அரிய செயல்கள் செய்வதற்கு இது ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களிடமிருந்து நானும் ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என்றார் பிரதமர் மோடி.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

49 சிறுவர்கள் இந்த நிகழ்ச்சியில் பால புரஸ்கார் விருது பெற்றார்கள்.

IMG 20200124 WA0082 - 2026

இவர்கள் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர் மற்றும் பல மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள். கலை, கலாச்சாரம், சமூக சேவை, விளையாட்டு, கல்வி போன்ற பல பிரிவுகளில் இவர்களுக்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

அவர்களுள் உலகெங்கும் 50க்கு மேல் மேஜிக் ஷோ நடத்திய 12 வயது தர்ஷ் மலானி, தபலா வாசிப்பில் திறமை பெற்ற 11 வயது மனோஜ்குமார் லோஹர் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending