
சேமியா – ஓட்ஸ் – கீரை அடை
தேவையானவை:
சேமியா – முக்கால் கப்,
ஓட்ஸ் – அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய், சோம்பு அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன்,
கீரை நறுக்கியது – அரை கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சேமியா, ஓட்ஸ் இரண்டையும் தனித்தனியே அரைமணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் இரண்டையும் ஒன்றாக்கி, எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

சூடான தோசைக்கல்லில் மாவை கொஞ்சம் தடிமனாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இதற்கு, காரச் சட்னி கரெக்ட் காம்பினேஷன்!