விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்… எதற்கு? வேறு ஒன்றுமில்லை… ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான்! இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் 47 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார்கள். விசாகாவில் உள்ள எட்டு பிளாட்பாரங்களும் அப்போதைக்கப்போது கண்காணிக்கப்படுகின்றன. விசாகாவில்ல் ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
விசாகா ரயில்வே ஸ்டேஷனை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு ரயில்வே அதிகாரிகள் கையில் புதிய சாட்டையோடு தயாராக இருக்கிறார்கள். இனி ரயில்வே ஸ்டேஷனில் யாராவது எச்சில் துப்பினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். காரித் துப்பினால் அவர்கள் 300 ரூபாய் ஃபைன் கட்ட வேண்டும்.
இதன்படி விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பிரச்சார படங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். ரயில்வே ஸ்டேஷனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று புதிதாக நேஷனல் கிரீன் டிரிப்யூனல் அளித்துள்ள உத்தரவுப்படி புதிய உத்தரவுகளை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் புதிய அபராதங்கள் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்கள். ரயில்வே ஸ்டேஷன் சுற்றுச்சூழலில் குப்பை போடுவது, பாத்ரூம்களை அசுத்தப்படுத்துவது, குடிநீர் குழாய்கள் அருகே சேறாக்குவது, ஸ்டேஷனில் நாற்காலிகளை வீணடிப்பது, லிப்ட், மாடிப்படிகளில் குப்பை போடுவது… போன்றவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 30,000 ரூபாய் அபராதம் பெற்றுள்ளதாக செய்தி.
விசாகா ரயில்வே ஸ்டேஷனில் 47 சிசிடிவி சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்கள் . விசாகாவில் உள்ள எட்டு பிளாட்பாரங்களையும் அப்போதைக்கப்போது கண்காணித்து வருகிறார்கள்.
2019ஆம் ஆண்டில் பிராணிகளிடமிருந்து முப்பதாயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்தார்கள் . இந்த ஆண்டு அதை விட அதிகமாக வசூல் இருக்கும்.
எந்த இடத்தில் எந்த பயணி குப்பையை போடுகிறார் என்ற விஷயத்தை அப்போதைக்கப்போது மானிட்டர் செய்து வரப்போகிறார்கள் அதிகாரிகள். யாரேனும் குப்பையை இஷ்டம் போல் ஸ்டேஷன் சுற்றுப்புறத்திலோ ஸ்டேஷனுக்குள்ளோ தூக்கி எறிந்தால் உடனுக்குடன் அவருக்கு அபராதம் விதிக்கப் படும்.
பிளாட்பார்மில் ஏற்பாடு செய்த குப்பைத் தொட்டியில் மட்டுமே குப்பைகளை போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதேபோல் ஸ்டேஷனில் வியாபாரிகளுக்கு கூட கட்டாயமாக நிபந்தனைகள் படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.