பாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு! தமிழக அரசு!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்
reshon - 2026

சிறப்பு பொது விநியோக திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந் கட்டாரியா அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறிருப்பதாவது: சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

எனவே சிறப்பு விநியோக திட்டத்தை வரும் மார்ச் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.