அழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi trump 1 - 2026

அழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

தில்லி ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, டிரம்புக்கு நன்றி தெரிவித்தார்.

“அமெரிக்கா – இந்தியா இடையிலான இருதரப்பு உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி ஆலோசித்தோம்; கடந்த 6 மாதங்களில் அமெரிக்க அதிபரும், நானும் 6 முறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறோம் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

“21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்புறவாக இந்தியா – அமெரிக்க இடையிலான நட்புறவு அமையும்;எரிசக்தி துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்; சுகாதாரம், மருத்துவ ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது” என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்தும் பேசினோம். தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு. தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினோம். என்று கூறினார் பிரதமர் மோடி.

இதனிடையே, இந்திய பயணம் சிறப்பனதாக இருந்தது என்றுகூறிய அதிபர் டிரம்ப், டெல்லியில் என்னை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததை கௌரவமாக கருதுகிறேன் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.