
மூச்சுக் காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும் என்று பகீர் தகவலை வெளியிட்டு, எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர் அமெரிக்க அறிஞர்கள். அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் கொரோனா வைரஸ் மூச்சுக் காற்றிலும் பரவும் என்று தெரிய வந்துள்ளது.
இருமல் தும்மல் மட்டுமல்லாது மூச்சுக்காற்று மூலமும் கொரோனா வைரஸ் பரவும் பரவ வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவது, அவர் தொட்ட பொருள்களை தொடுவது ஆகியவற்றால் அடுத்தவருக்கு பரவும் வகையில் எளிதாகத் தொற்றும் வைரஸ் ஆக உள்ளது கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவே சமூக விலகல் இருக்க வேண்டும் என வேண்டுகோள்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் வைரஸ் பாதித்த வேறு நபருடன் நெருக்கமாக அருகில் நின்று பேசுவதன் மூலமும் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறைந்த பட்சம் 10 அடி தொலைவாவது அடுத்தவரிடம் இருந்து தள்ளி இருக்கவும். அல்லது நல்ல மாஸ்க் வாங்கி உபயோகிக்கவும் என்று எச்சரிக்கின்றனர் அறிஞர்கள்!



