தலையில் பால் டம்ளர்.. சிந்தாமல் நீச்சலடித்த வீராங்கனை! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம்
us summ - 2026

அமெரிக்காவில் நீச்சல் வீராங்கனை ஒருவர், தலையில் பால் நிரம்பிய கண்ணாடி டம்ளரை வைத்து கொண்டு லாவகமாக நீச்சலடித்து எதிர்கரையை தொடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த 23 வயதாகும் நீச்சல் வீராங்கனையான கேட்டி லெடெக்கி, ஒலிம்பிக் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கத்தையும், 15 முறை உலக சாம்பியன் நீச்சல் போட்டியில் தங்கபதக்கத்தையும் வென்றவர் ஆவார்.

தற்போது நீச்சல்குளம் ஒன்றில், சாக்லேட் பால் ஊற்றப்பட்ட கண்ணாடி டம்ளரை தலையில் சுமந்தப்படி, ஒரு துளி கூட சிந்தாமல் எதிர்கரையை நீந்தி கடக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

என் வாழ்க்கையில் மிக சிறந்த நீச்சல்களில் ஒன்று ( விவாதத்திற்கு விடுகிறேன்). ஒரு துளி கூட சிந்தாமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற தலைப்பிட்டு கேட்டி பதிவிட்ட இந்த வீடியோ சுமார் 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேட்டியின் அசாத்திய திறமையை கண்டு வாயடைத்து போன நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டின் ஒருவர், என் கையில் கண்ணாடி டம்ளரை பிடித்து கொண்டு ஒரே இடத்தில் நிற்க முடியவில்லை, அதை கொட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால் நான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டதாக உணர்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டார்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

இது வழக்கமாக சமூகவலைதளங்களில் கவனத்தை பெறுவதற்கான செய்த சாகசம் இல்லை. டிக்டோக் செயலியில் மிகவும் பிரபலமான #GotMilkChallenge யின் ஒரு பகுதி தான் என வீராங்கனை கேட்டி தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.