மனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு! ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
ips-job-gone
ips-job-gone

மனைவியை அடித்து பணியை போக்கடித்துக்கொண்ட ஐபிஎஸ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

எங்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. என் மனைவியை பூவில் வைத்து பார்த்துக் கொண்டேன். எந்த குறையும் வைக்கவில்லை. எல்லா வசதிகளையும் என்னால் அனுபவித்தாள். பணம் வேண்டுமென்று கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற போதெல்லாம் அனுப்பிவைத்தேன். ஆனாலும் என் மனைவி ஏன் இவ்வாறு செய்தாள் எனக்கு புரியவில்லை என்று புருஷோத்தம் சர்மா புலம்பினார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புருஷோத்தம் சர்மா அட்டிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃ பொலீஸ் ஆக நேற்று வரை பணியில் இருந்தார். அவர் தன் மனைவியை அடிக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக மாறியது.

இதன் மீது விசாரணை செய்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இது குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று புருஷோத்தம் சர்மாவுக்கு உத்தரவிட்டு பணியில் இருந்து நீக்கினார்.

ips-job-gone1
ips-job-gone1

ஏடிஜி ஆக பணிபுரிந்து வந்த புருஷோத்தம் தன் மனைவியை அடிக்கும் போது அவருடைய மகன் அதனை வீடியோ எடுத்து விட்டார். அந்த வீடியோக்களை முதல்வர் சவுகானுக்கும் ஹோம் மினிஸ்டர் மிஸ்ராவுக்கும், டிஜிபி விவேக் ஜோஹாருக்கும் ஷேர் செய்தார் அவருடைய மகன். அதன் பிறகு தன் தந்தை சர்மா மீது டொமெஸ்டிக் வயலென்ஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அந்த கடிதத்தின் மீது புருஷோத்தம் சர்மா விவரமளித்தார்… என்மீது டொமெஸ்டிக் வயலென்ஸ் வழக்கு பதிவாகவில்லை என்றும் இது என் கணவன் மனைவி இருவருக்கும் தொடர்புடையது என்றும் என் மனைவியை நான் மிகவும் பாசத்தோடு அன்போடு பார்த்துக் கொண்டேன். வேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள் என்றும் குறை கூறினார்.

இந்த வழக்கு குறித்து உள்துறை அமைச்சர் மிஸ்ரா பேசுகையில் இந்த விஷயம் குறித்து மீடியா மூலம்தான் அறிந்து கொண்டேன். தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.