
சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு டபுள் பெட்ரூம் வீடு ஒதுக்கப்பட்டது. தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாக இருப்பதாகவும் பெண்ணுக்கு திருமணமாகி சென்று விட்டால் தான் ஒருவரே இருக்க வேண்டிவரும் என்றும் ஒருத்தருக்காக டபுள் பெட்ரூம் எதற்கு என்று கூறிய லக்ஷ்மியை அமைச்சர் ஹரீஷ் ராவு பாராட்டினார்.
சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணியின் பெயர் இப்போது செய்திகளில் உலாவருகிறது. அரசாங்கம் ஒதுக்கிய டபுள் பெட்ரூம் வீட்டை திரும்பக் கொடுத்து விட்டதே இதற்கு காரணம். அவருடைய நல்ல மனதை பாராட்டி மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
சித்திப்பேட்டையில் அமைச்சர் ஹரீஷ்ராவு தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் லக்ஷ்மி வீடு தொடர்பான பத்திரங்களை அரசாங்கத்திற்கு திரும்பக் கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை ஏன் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று லட்சுமி விவரித்தார்.
தற்போது தானும் தன் மகளும் மட்டுமே இருப்பதாகவும் மகளுக்கு திருமணமாகி மாமியார் வீட்டுக்கு சென்று விட்டால் தான் ஒருவருக்கே டபுள் பெட்ரூம் வீடு எதற்காக என்று குறிப்பிட்டு அதனால் தான் திரும்ப கொடுப்பதாகவும் கூறினார்.

யாராவது மிகவும் ஏழையான குடும்பத்திற்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் லக்ஷ்மி குறிப்பிட்டார். தனக்கு வீடு ஒதுக்கியதற்காக அவர் அமைச்சர் ஹரீஷ் ராவுக்கு நன்றி தெரிவித்தார்.
மிகவும் பெரிய மனதோடு ஆலோசித்து வீட்டை திரும்ப ஒப்படைத்த லட்சுமியை அமைச்சர் மனப்பூர்வமாக பாராட்டினார். லட்சுமியின் நடவடிக்கை அனைவருக்கும் ஆதர்சமாக இருக்கும் என்று புகழ்ந்தார்.