
தெலுங்கு வராவிட்டால் தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்… என்று கேட்ட பெண் கண்டக்டருக்கு அதிர்ச்சி அளித்த பயணி.
வேறு மாநிலத்தில் இருந்து ஒரு வேலையாக ஹைதராபாத்துக்கு வந்த மனிதரோடு மரியாதை குறைவாக பேசிய பெண் கண்டக்டருக்கு அதிர்ச்சி.
பயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள்.
வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த அஜித் சிங் என்பவர் ஒரு வேலையாக ஹைதராபாத்துக்கு வந்தார். டிசம்பர் 30-ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து அமீர்பேட் செல்லும் நகரப் பேருந்தில் ஏறினார்.
பெண் கண்டக்டருக்கு 50 ரூபாய் கொடுத்தார். ரூபாய் 20 பாக்கி கொடுக்க வேண்டி இருக்கும் போது அந்த விஷயத்தை டிக்கெட் டின் பின்னால் எழுதி அளித்தார் கண்டக்டர். இறங்க வேண்டிய இடத்தில் இறங்கும்போது டிக்கெட் காட்டினால் பாக்கி சில்லறையை தருவதாக கூறினார்.
பஸ் அமீர்பேட் வந்தவுடனே பாக்கி சில்லறை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அஜித்சிங் கண்டக்டரிடம் தன் தாய்மொழியில் கேட்டார். அதற்கு அந்த கண்டக்டர், “தெலுங்கில் கூறு. எனக்கு நீ கூறுவது புரியவில்லை. தெலுங்கு வராதபோது தெலங்காணாவுக்கு எதற்கு வந்தாய்?” என்று கேட்டார்.
அந்த சொற்களை அவமதிப்பாக எண்ணிய அஜித் சிங் உடனே ராணிகஞ்ச் -2 டிப்போ அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் பிரயாணிகளோடு அவமரியாதையாக நடந்து கொண்டதற்காக அந்த பெண் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.