
ராமேசஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வரும் 28.01.2021 அன்று வியாழக்கிழமை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை பூஜைகள் நடைபெற்று காலை 1.30 மணிக்கு ஸ்ரீபஞ்ச மூர்த்திகள் ஸ்ரீலெட்சுமணேசுவரர் கோயிலுக்கு புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும்.
மாலை 6 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று கோயில் வந்தடைந்தவுடன் அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.