தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த டிவி! வெடித்து பொருட்கள் நாசம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
tv 1 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.
இவருடைய வீட்டில் எல்லோரும் டிவி பார்த்துவிட்டு, டிவி அணைக்காமலேயே தூங்க சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவு சமயத்தில் வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்த டிவி திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு எழுந்த அவர்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீ மளமளவென பரவி பக்கத்து வீடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.

ஆனால் இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, யாருக்கும் காயமோ எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இரவு டிவி அணைக்காமல் தூங்கியதால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.