
ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கலைமான்கள் வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பிக்க பாதுகாப்பான சூறாவளி சுழலை உருவாக்கியுள்ளது.
கலைமான்களின் இந்த சூறாவளி சுழல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
‘Nature onPBS தொலைக்காட்சி நிறுவனம் ‘Wild Way of the Vikings’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வனவிலங்குகள் குறித்து ஆவணப்படம் எடுத்துவருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைமான்கள் குறித்த ஆவணப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக கலைமான்கள் வேட்டையாடுபவர்களிடம் இருந்த தற்காத்துக்கொள்ள இதுபோன்ற சூறாவளி சுழல் உருவாக்குவது வழக்கம்.
ஆனால் இதனை பெரும்பாலோனோர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆவணப்படத்தில் வேட்டைக்காரனிடம் இருந்து தப்பிக்க கலைமான்கள் திடீரென உருவாக்கிய சூறாவளி சுழல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டுள்ள இந்த கலைமான் சூறாவளி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Reindeer Cyclones are a real thing… a swirling mass of threatened reindeer stampeding in a circle making it impossible to target an individual.. here the fawns are in the middle
— Science girl (@gunsnrosesgirl3) March 30, 2021
This herd is on Russia’s Kola Peninsula, in the Arctic Circle
pic.twitter.com/0Y2UwBKuOh