
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக., கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை கே.அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பலரும் பதில் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், வாக்கு சேகரித்து பல்வேறு இடங்களுக்கும் சென்றார் கே.அண்ணாமலை. இந்நிலையில், தனக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், தன்னைச் சுற்றியிருந்த யாருக்கேனும் ஏதாவது அறிகுறி தென்பட்டால், உடனே பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் கே.அண்ணாமலை.