December 8, 2025, 9:42 AM
25.3 C
Chennai

அண்டப் புளுகு, வதந்திகளை கொஞ்சம் நிறுத்துங்க… சோனியாவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்!

jbnadda - 2025

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் மதிப்பிற்குரிய திரு. நட்டாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில முக்கிய குறிப்புகள்…

நம் பாரத பிரதமரும் மற்றும் இந்திய அரசும் கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை உலகமே நன்கு அறியும்.

கோவிட் தொற்றுநோய் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை, நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடனும் கலந்து தொற்று நோய் தடுப்புக்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். செயல்படுத்தினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூட அதை ஒப்புக் கொண்டார்.

ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து… உணவு மற்றும் ரேசன் பொருட்களை கடந்த 8 மாதங்களாக ஏறத்தாழ 80 கோடி மக்களுக்கு வெற்றிகரமாக விநியோகித்து…இந்திய பிரதமரும் மற்றும் மத்திய அரசும் சாதனை படைத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள்… புத்திசாலித்தனமாக தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் நம் நாட்டின் கடின முயற்சிகளை குறைத்து மதிப்பிட்டும், ஏளனம் செய்தும், மக்கள் நம்பிக்கையை குறைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு தவறான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

முதலாவதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமான தடுப்பூசிகளின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்க… மருந்தின் தரத்தை சந்தேகத்திற்கு உட்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தைப் பயன்படுத்துதல்… எனக்கு வருத்தத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி பரவலாக்கத்திற்காக ஏப்ரல் மாதத்தில் கோரிய தடுப்பூசி மையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்கும் போது, மாநில அரசின் உரிமையில் தலையிடுவது போன்ற ஒரு பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டனர்…

மத்திய அரசு இதுவரை 16 கோடி தடுப்பூசிகளை மாநில அரசுக்கு விநியோகம் செய்துள்ளது அதிலும் குறிப்பாக 50% தடுப்பூசிகளை இன்று வரை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு, இலவசமாக விநியோகித்துள்ளது .

பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்கள் தடுப்பூசிகளை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசுகள் ஏன் இதைச் செய்யவில்லை?

45,000 புதிய வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிற மாநிலங்களில் வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன…ஏன்?

காங்கிரஸ் மாநிலங்கள் மந்திய அரசாங்கத்தின் ஆலோசனைகளை பலமுறை புறக்கணித்து, மத்திய அரசின் தகவல்கள் அனுமதி கிடைக்கவில்லை என்று உண்மைக்குப் புறம்பாக… பொய் கூறுகின்றன.

இரட்டை வேடத்திற்காகவும் மற்றும் தரம் தாழ்ந்த சிறியன சிந்திக்கும் தன்மைக்காகவும் காங்கிரஸ் கட்சியினர் நினைவில் வைக்கப்படுவர் – ராகுல் காந்தி முதலில் லாக்டவுனை… கடுமையாக எதிர்த்து பின்னர் அவற்றைக் உடனடியாக கொண்டுவரக் கோருகிறார்.

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும் மற்றும் நோய்த்தொற்றை அதிகரிக்கும் வகையில் கூட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் மற்றும் கோவிட் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்டு பேசுவதும். கோவிட் நோய்த் தொற்று அதிகரித்த கேரளாவில் பெரும் தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டும், பின்னர் கோவிட்டுக்கு வேறு இடங்களில் மத்திய அரசை குற்றம் சாட்டினார்.

இப்போது மத்திய அரசின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி குறைகூற தொடங்கியுள்ளது ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 2012ல் யுபிஏ அரசாங்கத்தில் புதிய பாராளுமன்றத்திற்கான திட்டம் தீட்டிய போதும் காங்கிரஸ் கட்சி இப்போது குற்றம் சாட்டுகிறது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு புதிய சட்டமன்றக் கட்டடத்தை கட்டிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மத்தியில் அதற்கான தேவைகள் பற்றிய பொய்களை தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் நம் இந்திய நாட்டில் மக்கள் நலம் பேணும் ஆரோக்கியம் சார்ந்த துறைகளில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் குறைந்த முதலீடு செய்துள்ளனர்…என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்தில் இருந்தவர் யார்?

தன்னலம் கருதாமல் தன் உயிரையும் மதிக்காமல் மக்களுக்கு தொண்டு செய்யும் சுகாதாரப் பணியாளர்களின் தொண்டுகளை… முயற்சிகளை ஏளனத்திற்கு உட்படுத்த காங்கிரஸ் உறுதியாக உள்ளதா? அல்லது கோவிட்டுக்கு எதிராக போராடும் நாடுகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் ஏளனத்திற்கு உட்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா?

நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையில் அறிவியலின் வழிநின்று அறிஞர்களின் ஆலோசனைகளை கேட்டு தன்னலமற்ற சுகாதார பணியாளர்களின் மருத்துவர்களின் துணைகொண்டு நம் நாட்டு மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு நம்பிக்கையுடன் முன்னெடுக்கிறது.

அந்த புனிதமான முயற்சியில் உங்கள் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் அல்லது குறைந்தபட்சம் மத்திய அரசின் நல்ல முயற்சிகளை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நோய்த்தொற்று மேலும் பரவாமல் மக்களை காப்பாற்றி பொருளாதார பின்னடைவுகளை எல்லாம் சரிசெய்து சரிவிலிருந்து மக்களை மத்திய அரசு கண்டிப்பாக மீட்டெடுக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன்.

இப்படிக்கு,
ஜெ.பி.நட்டா (தேசிய தலைவர், பாரதிய ஜனதா கட்சி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories