
சென்னையில் இல்லம்தோறும் சென்று குறி குணம் இருக்கிறதா என்று பரிசோதிப்பது மூலம் சுமார் 7000 பேர் நோய் அறிகுறியுடன் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள். அதில் 3000 சற்று குறைய நபர்களுக்கு தொற்று உறுதி செய்யபடுகிறது.
இந்த முயற்சி மற்ற நகரங்களிலும் சீராக நடந்தால் சீக்கிரம் தொற்றை குறைக்கலாம்.
கிராம பகுதிகளில் நோய் அறிகுறி யாருக்காவது இருந்தால் உடனடியாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் படித்த இளைஞர்கள் பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கு தெரிந்து விடும். உடனடியாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம். தனிமைப் படுத்தி கொள்ள கிராம ஆரம்ப பள்ளிக் கட்டிடத்தில் இருக்க வைத்து பிறருக்கு பரவாமல் தடுக்கலாம்.
இல்ல உறுப்பினர்கள் உணவு பிற தேவைகளை முக கவசம் அணிந்து கொஞ்சம் தொலைவில் வைத்து விட்டு வரலாம்.
தொலை பேசி இருப்பதால் உடனடியாக தெரிவிக்க ஒரு
தொலைபேசி நம்பர் கொடுக்கலாம். இதற்கு அடுத்து நிலவேம்பு குடிநீர் அதிமதுரம் இரண்டும் சேர்ந்து கசாயமும் மூன்று வேளை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்..
நோய் பரவுதல தடுப்பதற்கு இதுவே முக்கிய வழிமுறையாக இருக்கும். ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் அந்த பகுதியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். கவனிப்பு மையம் மருத்துவமனை எல்லாம் அவசியம். நோய் தடுப்பு அதை விட அவசியம்.
சென்னை model முதல் அலையிலும் இப்பொழுதும் செயல்படுவதற்கு நோய் தடுப்பு நடவடிக்கையே முக்கிய காரணம். மருத்துவமனை ஆக்சிஜன் மருந்து முதலியவற்றில் இருந்து ஊடகம் தடுப்பு முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மக்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து ஆரம்ப நிலையில் மருத்துவ உதவி தேட வேண்டும்
-டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி