December 6, 2025, 8:56 PM
26.8 C
Chennai

ஓட்டுப் போட்ட சனங்களுக்கு அல்வா கொடுத்துட்டாங்க!

rajan-chellappa
rajan-chellappa file pic

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, பெரியபுள்ளான், அய்யப்பன், ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது…

கொரானா தொற்றால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது. ஆனால், தமிழகத்தில் கள நிலவரம் மாறாக உள்ளது. முன்களப் பணியாளர்களின் தியாகப் பணியால் தொற்று குறைந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் கொரானா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை அதிகமாக செய்தோம். பாதிப்பு அதிகம் இருக்கும் போதே பரிசோதனை 1 லட்சமாக மேற்கொண்டோம். தற்போது கொரானா பரிசோதனையை 3 லட்சமாக உயர்த்த வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை ரிசல்ட் 24 மணி நேரத்தில் கிடைத்தது. தற்போது 3நாள் ஆகிறது காலதாமதம் ஆகிறது. இதனால் கொரானா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது.

தமிகத்தில் அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை செய்தவரை தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். கிரமங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும்.

தமிழகத்தின் கள நிலவரமும் அரசு தெரிவிக்கும் விவரமும் வேறு வேறாக உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளை தேவையான அளவு உருவாக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை உள்ளதால் கொரானா மரணத்தை அரசு வெளிப்படையாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரானா இறுதிச் சடங்கில் அரசு வழிமுறைகள் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் எதிர்ப்பார்பு கோரிக்கையை, வேண்டுகோளை அரசுக்கு கொண்டு வருவது தான் எதிர்க்கட்சியின் இலக்கணம்.

தடுப்பூசி குறித்து இளைஞர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் கட்டுங்கடங்காத கூட்டம் உள்ளதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிக்கு தமிழக அரசு வேறுபாடு காட்டுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது… என்றனர்.

sellur-raju-2
sellur-raju-2 file pic

செல்லூர் ராஜூ பேசியபோது… அல்வா கொடுப்பது போல வெறும் நூறு பேருக்கு ஊசி போட்டுவிட்டு இல்லையென்று சொல்கின்றனர். எம்ஜிஆரை காண கூட்டம் கூடுவது போல தடுப்பூசி செலுத்திக் கொள்ள கூட்டமாக கூடியுள்ளனர்.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி என்றெல்லாம் சொல்கிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி அதிகமாக கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

அதிமுகவினர் தங்கள் கெளரவத்தை பார்த்தில்லை. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். முன்னாள் முதல்வரும் துணை முதல்வரும் கெளரவம் பார்க்காமல் தேவையான உதவிகளை கேட்டுப் பெற்றனர்.

மத்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியோடு இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றோம். இதனால் எங்களை திமுகவினர் விமர்சிக்கவும் செய்தனர்.

ஒரு மாநில முதல்வர் கெளரவம் பார்க்கக் கூடாது.கொரானா நடவடிக்கைகளுக்காக ஸ்டாலின் பாரதப் பிரதமரை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும்! என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories